இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அஞ்சாது போராடிய வீரத்தமிழர், செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தில், அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial சார்பிலும், என் சார்பிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, சுதந்திர வேட்கையைத் தமிழர் நெஞ்சங்களில் விதைத்த அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்!
#VOChidambaramPillai
தனது எழுத்தாலும், சிந்தனையாலும், புரட்சிகரமான கருத்துகளாலும் தமிழ்ச் சமூகத்தில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, விடுதலை உணர்வு, அச்சமின்மை, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், தமிழ்ப்பற்று ஆகிய விழுமியங்களை விதைத்த முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றிப் வணங்குகிறேன்.
@AIADMKOfficial
அதான் முதல்வர் ஆகிட்டீங்க தானே அப்புறம் எந்திரிச்சி நிக்கலனு அழுதுகிட்டு 😂 பண்ணையார்த்தனமா பேசிட்டு 😡 இனி யாரும் எந்திரிச்சி நிக்க வேண்டிய அவசியம் இல்ல.. அண்ணே @EPSTamilNadu இதுங்ககிட்ட எல்லாம் நாகரீக அரசியல், மரியாதை எல்லாம் காட்டாதீங்க.
மலை போன்ற வலிமையான நெஞ்சுரம் கொண்ட இந்த இயக்கத்தின் தொண்டர்களாகிய நாம் வீறுகொண்டு எழுந்து, மீண்டும் மக்கள் துணையோடு அம்மாவின் ராஜ்ஜியத்தை தமிழகத்தில் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் தலைமையில் அமைத்திடுவோம்!
#என்றென்றும்_அஇஅதிமுக
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நியமிக்கவும் TVK அரசுக்கு வலியுறுத்தல்!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
Extremely unethical behaviour be certain News Agencies.
Reporters from Coimbatore state that video which has no sound was recorded without officers consent and given an ugly twist.
Coimbatore reporters also claim she has done impeccable job in handling the case.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது.
சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.
பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன்,
குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial