#அன்புமொழி
பைபிள் பழைய ஏற்பாட்டிலிருந்து:-
கொடூரமான வன்முறைகள், இனப்படுகொலைகள்,அடிமை முறைக்கு ஆதரவு,
பெண்ணடிமைத்தனம் மற்றும் பலதார மனைவி மணம், கொடூரமான தண்டனைகள்,
அறிவியல் மற்றும் வரலாற்று முரண்பாடுகள் என எல்லாமே உள்ளது.
எந்த மத நூல்களையும் புனிதப்படுத்தாதீங்கடா யப்பா.
ஆக தமிழைப் படித்தவர்களுக்கு அன்பு♥️, அமைதி😇, இரக்கம்🫂 இவைகளைப் பற்றி தெரியாது என்று மாண்பு இல்லாத🤢, மரியாதைக்கு உரியவர் அல்லாத🤮, நிதியை பற்றி எதுவும் தெரியாத🤦 அமைச்சர் மரிய வில்சன் சொல்கிறாரா❓
உயிரினும் மேலான எங்கள் தமிழ்🐯🐟🏹 மொழியை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் 🤡 மற்றும் அவர் பேசும்போது அதை கைதட்டி ஆதரித்த ஒட்டுமொத்த தரங்கெட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்❗.
தாய் மொழியை அவமதிப்பது என்பது பெற்ற தாயை அவமதிப்பதற்கு சமமானது❗ அத்தகைய இழிவான செயல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு போக நாங்கள் ஒன்றும் எந்த ஒரு மொழி, இன உணர்வற்ற மானங்கெட்ட தற்குறி தவெக 🤡 அல்ல.
@MarieWilson_TVK@CMOTamilnadu@TVKVijayHQ
கிறிஸ்துவம் Vs தமிழ் என பொருள் படும் வகையில் மரிய வில்சன் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மொழி மற்றும் மதம் அப்பாற்பட்டு சுமுக உறவுடன், சமூக நல்லிணக்கத்துடன் வாழும் தமிழ் நாட்டு மக்கள் இது போன்ற பொறுப்பற்ற பேச்சை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .
ஜெபமாலையுடன் பட்ஜெட் தாக்கல் செய்த போதே நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது கேள்வி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அப்போது விட்டதன் விளைவு இப்போது சட்டமன்றத்திலேயே என் மதம் கற்று தந்ததை தமிழால் ஒருநாளும் கற்று தர முடியாது என்று பேசியிருக்கிறார். மத அரசியலே இங்கு வர கூடாது என்று போராடி கொண்டிருக்கும் நிலையில் மதத்தை மொழிக்கு எதிரானதாக நிறுத்தி தான் சார்ந்த மதத்தை உயர்த்தி பேசுவதை எப்படி எடுத்து கொள்வது. இதையே ஒரு இஸ்லாமியர் என் மதம் எனக்கு போதிப்பதை ஒருநாளும் என் மொழியால் எனக்கு கற்று தர முடியாது என்று பேசினால் என்ன ஆகும்.
நிதி அமைச்சரின் தமிழ் உச்சரிப்பு மொழிநடை மேம்படுத்தி கொள்ள கூடியது தான் மேம்படுத்தி கொள்ள வேண்டியதும் கூட. அரசியலுக்காக தான் வகிக்கும் பதவிக்காக இதை கூட மேம்படுத்தி கொள்ள முடியாதவர்கள் விசயத்தை திசைதிருப்ப இவ்வளவு மோசமான வாதத்தை எடுத்து வைப்பது வன்மையாக கண்டிக்க வேண்டியது.
பார்ப்போம் தமிழ் தமிழ் என்று அரசியல் செய்யும் எத்தனை நடுநிலையாளர்கள் மத அரசியலுக்கு எதிரான எத்தனை பேர் இதற்காக பொங்குகிறார்கள் என்று.🤧
எனக்கு எப்படி வருகிறதோ அப்படித்தான் பேசுவேன் - அமைச்சர் 🤮 மரிய வில்சன்🤡
அதாவது இனி ஒவ்வொரு முறையும் தமிழை 🐯🐟🏹 சரியாக படிக்காமல், தப்பும், தவறுமாக தான் பேசுவேன்❗ என்று மிரட்டுகிறார் மாண்பு இல்லாத மரிய வில்சன்🤡
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து கொண்டே தமிழ் மொழியை இப்படித்தான் கொச்சைப்படுத்தி பேசுவேன்❗ ஒருபோதும் என்னை திருத்திக் கொள்ள மாட்டேன் 😡என்று தமிழ் மொழியை அவமதித்து பேசிய அறிவிலி மரிய வில்சன் உடனடியாக பதவி விலகி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்❗
@MarieWilson_TVK@TVKVijayHQ@CMOTamilnadu
உண்மையில் மரியவில்சனின் பேச்சு கிறிஸ்துவர்களைத்தான் அவமானப்படுத்துகிறது.
தனக்கு தமிழ் உச்சரிப்பு வராததுக்கு காரணம் வளர்ந்த சூழல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் கிறிஸ்துவர் என்ற காரணத்தைச் சொல்கிறார்.
கால்டுவெல், ஜி.யு.போப், பெஸ்கி என்று வெளிநாட்டு கிறிஸ்துவர்களே தமிழை நன்கு கற்றுணர்ந்தவர்கள். மாயூரம் வேதநாயகம் முதல் நவீன இலக்கியத்தில் பிரான்சிஸ் கிருபா, பாமா, ராஜ்கௌதமன், குமாரசெல்வா, அ.மார்க்ஸ், தமிழவன், ஹெப்சிபா ஜேசுதாசன், நோயல் ஜோசப் இருதயராஜ், தமிழ்ப்பிரபா என்று படைப்பாளிகள், விமர்சகர்கள் ஏராளம் உள்ளனர்.
எனவே மரியவில்சனுக்கு தமிழ் வராததற்கு காரணம் மரிய வில்சனே தவிர, கிறித்துவம் அல்ல
மேலும் தான் ஒரு Born christian என்று சொல்வதன் மூலம் தான் Converted Christian-ஐ விட மேலானவர் என்று சொல்ல விரும்புகிறாரா?
தமிழ்நாட்டில் தமிழ் படும் பாடு:
* Hi.. மாண்புமிகு மரியான். 'இப்படி பேசுறது என்னோட ஸ்டைல். என்ன...கேலி பண்றீங்களா?' என நேற்று கொந்தளித்தீர்கள்
* வேறு மேடை, ப்ரெஸ்மீட் அல்லது பேட்டிகளில் இப்படி தவறாக தமிழ் பேசினால் அது கேள்வி அல்லது கேலிக்கு உள்ளாகாது.
* ஆனால் பட்ஜெட் தாக்கல் எனும் அதிகாரப்பூர்வ நிகழ்வில்..அதுவும் சட்டப்பேரவையில் சொற்பிழை மற்றும் பொருட்பிழையோடு பேசினால்.. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல..
... ஓரளவு தமிழ்ப்பற்று கொண்ட சாமான்யர் கூட இதை சகித்துக்கொள்ள மாட்டார்.
* இதற்கு முன்பு நிதியமைச்சராக இருந்த PTR பழனிவேல் ராஜன் தமிழில் ஒழுங்காக பேசினாரா என தவெக அமைச்சர் ஒருவர் கேட்கிறார். அவர் ஆறடி உயரம் இருந்தார். பெயர் ஆதவ் அர்ஜூனா என நினைவு.
* தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள்.
* தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை பற்றி PTR உடன் நேருக்கு நேர் வாதாடினால் யார் வெல்வார் என்பது மக்களுக்கு தெரியும்.
* தமிழில் சரியாக பேசாததால்தான் மதுரையில் PTR தோற்றாரா? அப்படியெனில் நீங்களும் தமிழை தவறாக பேசி தோற்பீர்களா?
* இன்னொரு அமைச்சர் எழுந்து 'உதயநிதி மட்டும் சங்கத்தமிழில் பேசுகிறாரா?' என கலாய்த்து விட்டாராம். அவரது பெயர் ராசுமோகன் என நினைவு.
* எந்த தமிழில் பேசினால் என்ன ப்ரோ? மக்களுக்கு புரிய வேண்டும். உதய் பேச்சுத்தமிழ் மூலம் பேசுவது தெளிவாகத்தானே உள்ளது.
* அது போக..வட்டார வழக்கு, கொட்டார வழக்கு என மரியானுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேசினர்.
* இப்படி தவறாக இவர் பேசுவது முதல் முறையல்ல.
* ஆகவே... நல்ல மனிதருக்கு அழகு..இனியாவது தமிழை நல்லபடியாக கற்றுக்கொண்டு பிழையின்றி பேசுவது. குறிப்பாக சட்டசபை மற்றும் அரசு நிகழ்ச்சிகளில்.
* அந்த முயற்சியை செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இது என் ஸ்டைல். இப்படித்தான் பேசுவேன் என்றால் மக்கள் கேள்வி கேட்கவும், மீம்ஸ் போடவும் செய்வார்கள்.
* அடுத்த வருடம் பட்ஜெட் உரையை பிழையின்றி வாசியுங்கள். முடிந்தால் ராசுமோகனிடம் தமிழ் கற்க.
* தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிப்பது எவ்வளவு முக்கியமோ.. அதுபோல முதல் வரிசையில் அமர்ந்துள்ள நீங்கள் தவறில்லாமல் தமிழ் பேசுவதும் முக்கியம்.
ஒரு அமைச்சருக்கான எந்த அடிப்படை தகுதியுமற்ற மரிய வில்சன்
ஏற்கனவே தன் சொந்த தம்பி குடும்பத்தை அடித்து கொலை செய்ய முயன்ற ஜந்து
சட்டப்பேரவையில் மைக்க டப்புன்னு தள்ளிவிட்டு உட்காருது 😡😡😡
சாலமன் பாப்பையா
ரபி பெர்ணாட்
நெல்சன் சேவியர்
வலம்புரி ஜான்
ஜெகத் காஸ்பர்
பெர்க்மான்ஸ்
பால் தினகரன்
வீரமாமுனிவர்
ஜி.யூ போப்
அய்யா தா. பாண்டியன்
பீட்டர் அல்போன்ஸ்
எச்.ஏ கிருஷ்ணபிள்ளை
ஆபிரஹாம் பண்டிதர்
எஸ்ரா சற்குணம்
ராபர்ட் டி நொபிலி
வேதநாயக சாஸ்திரியார்
அந்தோணி தாசன்
சாமுவேல் வேதநாயகம் பிள்ளை
ஸ்டானிஸ்லாஸ் சாமி
பார்தலோமேயஸ் சீகன்பால்கு
அண்ணன் சீமான்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை
அலெக்ஸ் பால் மேனன்
லூர்தம்மாள் சைமன்.
அண்ணன் ஜோ மில்ட்டன்
மரு.மரியானோ புருனோ மாச்கரென்ஹஸ்
நீயா நானா அந்தோணி
நீயா நானா சில்வெஸ்டர் திலீபன்
சாம் பி செல்லத்துரை
அலெக்ஸாண்டர் பாபு.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அருள் எழிலன்.
P. வில்சன்
அப்பாவு
சந்திரபாபு
ஃப்ரான்ஸிஸ் கிருபா
பட்டிமன்றம் ராஜா
ஜேம்ஸ் வசந்தன்.
ஹாரிஸ் ஜெயராஜ்.
தனிநாயகம் அடிகள்
ஜேசுதாஸ்
ஜோ அருண்
Wilson HBK
ஆன்ட்ரியா ஜெரமியா.
எனக்கு தெரிந்து தமிழை மிக மிக மிக.
அழகாகவும் நேர்த்தியாகவும் ஏதோவொரு வகையில் கையாண்ட , கையாளும் ஆளுமைகள் இவர்கள்.இன்னும் கூட இதேபோல் ஒரு பெரும் பட்டியல் நம்மால் போட இயலும்.
இவர்கள் யாவருமே கிறிஸ்தவர்கள் தான்.
பிற்கால தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வியின் வளர்ச்சிக்குமே கிறிஸ்தவர்களின் பங்கு அளப்பரியது.
தமிழ் பேச தெரியவில்லை எனில் கற்றுக்கொண்டு பேசுவது தான் அழகு. இன்றேல் " நான் கிறிஸ்தவன், எனக்கு தமிழ் பேச வராது" என்ற Victim card எடுப்பது ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களையும் அவர்கள்தம் தமிழ்மொழி ஆளுமையையும் கலங்கப்படுத்தும் செயல்...
மரிய வில்சனின் அன்பார்ந்த கவனத்திற்கு..
உருட்டு கட்டையோடு வீடு புகுந்து சொந்த தம்பியும் தம்பியின் மனைவியும் தாக்குதல் நடத்துவதற்கும் அதே கிறிஸ்தவம் தான் கற்றுக் கொடுத்ததா?
உலகப் பொதுமறை #திருக்குறள் போதிக்காத எந்த அறத்தையும் வேதாகமத்தில் சொல்லவில்லை
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்