செருப்படி,
VCK, CPI, CPIM ஒரு ஊழல் வழக்கு இருக்கா இல்லை,
ஆனா கரை படியா எங்களை சோபோ மற்றும் இதர வார்த்தைகளை எவன் சொன்னாலும் அவன் மூடனே 💯
#நாங்களே_மைய்யம்#VCK#CPIM#CPI
அன்றே கணித்தார் இளம்பெருவழுதி..✊️✊️✊️
"பிரியன் :- விசிக குறி வைத்து தாக்கப்படுகின்றது என்று நினைக்கின்றீர்களா?
திருமா:- கட்டாயமாக அதில் நீங்களும் ஒருவர்"
திமுகவின் வாடகை வாய்களுக்கு தலையிலேயே ஒரு குட்டு வைத்திருக்கின்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள்.
இது தேர்தலுக்கு முன்பாக நான் பதிவேற்றம் செய்த காணொளி.. பல நாட்களாகவே பத்திரிக்கையாளர் பிரியன் உட்பட, பல திமுகவின் வாடகை வாய்கள் இதுபோன்று தான் Narrative'களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான சான்று..
என் தந்தை திருமிகு சா.காந்தி அவர்களுக்கு 14-06-2026 பிறந்தநாள். 80ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். கிட்டதட்ட 60 ஆண்டுகள் தொழிற்சங்கம் உள்ளிட்ட சமூகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவராய் பங்கெடுத்தவர். கம்யூனிஸ்டாக இன்றுவரை தொடர்ந்து செயல்படுபவர். பெரியாரிய சிந்தனையை உள்வாங்கிய செயல்பாடு அவருக்குண்டு.
60 ஆண்டுகால நாத்திகர், இந்துமத மறுப்பாளர், பொதுவுடமையாளர். அரச நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொதுச் சொத்துகள் என்பவர். இதனாலே இன்றளவும் மின்சாரத்துறையை பாதுகாக்கும் பொருட்டு 10க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை நடத்தி வருபவர். நீதியரசர்கள் அரிபரந்தாமன், சந்துரூ ஆகிய ஆளுமைகள் அவருக்காக வழக்குகளை நடத்தியுள்ளார்கள். மக்களுக்கான பணியில் சமரசமின்றி இயங்கியவர். தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியதற்காக அரசாங்க பணியில் இருக்கும் பொழுதே கைது செய்யப்பட்டவர். பதவி உயர்வுகளையும், சம்பள உயர்வுகளையும் நிறுத்தி வைத்து அவர் தண்டிக்கப்பட்ட காலம் மிக அதிகம்.
அவரது தலைமையில் தொழிற்சங்க பொறுப்பாளர் திருமணம் நடந்ததால், அந்த மண்டபத்திலேயே மணமகனுக்கு சஸ்பென்சன் ஆர்டர் வழங்கி ஒடுக்குமுறை ஏவுமளவிற்கு MGR அரசை எதிர்கொண்டவர்.
தனியார்வயப்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் 2000ம் ஆண்டு மின்சார சட்டத்திற்கு எதிராக இந்திய அளவிலான தொழிற்சங்கள் வாயிலாக மிகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தவர். சிறுகுறு தொழில்கள், உழவர்களுக்கான இலவச மின்சாரத்திட்டங்கள் ரத்தாகும் முயற்சிகளை தடுத்திடும் போராட்டங்களை நடத்துபவர்.
காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபத்திற்கு மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு விற்று, மின்சாரவாரியம் நட்டமடைவதை அம்பலப்படுத்தியவர். இந்த ஒபப்ந்தங்களை நீக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். தனியார் நிலக்கரி மின்சார உற்பத்தி ஆலைகள் மிக அதிக அளவில் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு விற்று உருவாக்கிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டத்தால் மின்சார கட்டணம் உயர்கிறது என்பதை அம்பலபப்டுத்தியவர். இந்த அநீதிக்கு எதிராக 25 ஆண்டுகளாக போராட்டம் நடத்துபவர். மின்வாரிய தொழிலாளர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுத்தவர். தொழிற்சங்க உரிமை காத்திட அனைத்து தொழிற்சங்க இணைப்பினை முன்னிறுத்தி சாத்தியப்படுத்தியவர்.
விசைத்தறி, சிறு உற்பத்தியாளர்கள் மீதான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய துணை செய்தவர்.
'மின்வெட்டும் காரணமும்', 'சூரிய ஒளிக்கொள்கை மோசடி' , ' மண்ணைக் கொல்லும் எண்ணை', ' மீத்தேன் பேராபத்து' ஆகிய நூல்களை எழுதியவர். மின்சாரத்தில் நடக்கும் ரூ20,000 கோடிக்கான ஊழல்களை 2016ல் ஆவணப்படமாக ஆதாரத்துடன் வெளியிட்டவர். இந்த ஆவணப்பட வெளியீட்டை அன்றய அதிமுக அரசும், பின்னர் தேர்தல் கமிசனும் தடை செய்தது. தமிழ்நாட்டில் மின்வெட்டிற்கான காரணத்தை கள ஆய்வின் வாயிலாக ஆவணப்படமாக தயாரித்தவர். 2018ம் ஆண்டில் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியில் நடக்கும் ஊழல் குறித்து எழுதியவர். தொடர்ந்து 50 ஆண்டுகளாக பல்வேறு இதழ்களை பொதுத்துறை தொடர்பாக நடத்தி வருபவர்.
ஊடகங்கள் புறக்கணித்த போதிலும் அயராது ஊடகச் சந்திப்பில் பலவேறு உண்மைகளை அம்பலப்படுத்தி மின்சாரவாரியத்தை காக்க போராடுபவர். கிட்டதட்ட ரூ60,000 கோடி இழப்பீட்டை சந்திக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுக்கும் நுணுக்க வழிமுறைகள் அவரிடம் உண்டு. அதற்கான தரவுகளோடு வாதிடுபவர். இதற்காக பிதுநல வழக்குகளை டில்லி தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடுபவர். எந்த ஆளும் கட்சியின் உதவியுமின்றி மின்சார துறையை காக்க தாமாக இயங்குபவர்.
எந்த அரசும் அவரை பயன்படுத்தி மின்வாரியத்தை செம்மைப் படுத்த விரும்பியதில்லை. அவரது ஆலோசனையை பெற ஆட்சியாளர்கள் முனையாத போதும் அயராது உழைப்பவர். அதிகாரவர்க்கத்தைவிட்டு ஒதுங்கி நின்று செயல்படுபவர். மின்சாரவாரியத்தை காக்க வேண்டுமெனும் அவரது உத்வேகத்திற்கும், போர்க்குணத்திற்கும் ஒரேயொரு காரணத்தை அழுத்தமாக சொல்வார். " மின்சாரம் இல்லையெனில் ஒரு சமூகமும், குடும்பமும் வறுமையிலிருந்து மீள இயலாது. மின்சாரம் இல்லையெனில் கல்வி கிடைப்பது கடினமாகும், விவசாயம் நட்டமடையும், சிறுகுறு கடைகள் மூடப்படும், சிறு தொழில்கள் நசிவடையும், வீட்டில் லெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்..." இப்படி ஏராளம் உண்டு என சுட்டிக்காட்டுவார். மின்சாரத்தை மானியமாக்கினால் தான் சமூகம் உயரும். இதை அறிந்து இதற்கான சட்டத்தை கொண்டு வந்தவர் அண்ணல் அம்பேத்கர் என்பார் அவர்.
அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை முறையாக நிறைவேற்றியதால் தான் தமிழ்நாடு பொருளாதார துறையில் வளர்ந்தது என்பார். கொங்குமண்டலத்தில் வளர்ச்சிக்கான (தொடர்ச்சி அடுத்த இழையில்..)