@VigneshTvkCbe
This is for your kind attention this tasmac has the bar in that they are collecting 50rs extra for the chilled beer..
Plz look in to it. and take the necessary action..
kind attention, Sir. We have not even seen our Thiruvottiyur MLA before or after the election. We voted for TVK mainly because of our trust in @tvkvijayhq.
Though I come from a DMK family, all of us voted for TVK, except my parents, because of our faith in Vijay.@arunraajkg
@VigneshTvkCbe
This is for your kind attention this tasmac has the bar in that they are collecting 50rs extra for the chilled beer..
Plz look in to it. and take the necessary action..
@CMOTamilnadu@TamilanParthib1@transporttamil@arasubus
Ennore Bus timings are not being followed properly, causing inconvenience to commuters. Kindly ensure buses operate as per the scheduled timings.
Need your intervention on this.. plz help common people.
@PttvNewsX That’s why our chief minister is boycott t.n media, u guys are really worst to the core… u guys will feel the consequences.. we have lot of issues in our country but still u guys focus where our chief minister is doing mistake…
@CMOTamilnadu@TamilanParthib1@transporttamil@arasubus
Ennore Bus timings are not being followed properly, causing inconvenience to commuters. Kindly ensure buses operate as per the scheduled timings.
Need your intervention on this.. plz help common people.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.
மேலும்,
நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.
நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.
மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.
சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.
சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.
கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு...
எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?
தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
+2 மாணவி கொடூரக் கொலை: இதுதான் உங்கள் 'நம்பர் ஒன்' சாதனையா சி.எம். சார்..?
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த பயங்கர சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது.
இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மகளைக் காணவில்லை என இரவோடு இரவாகப் பெற்றோர் புகார் அளிக்க வந்தபோது, குளத்தூர் காவல் நிலைய போலீசார், நெஞ்சில் ஈரமில்லாமல் அலட்சியமாகப் பேசி, அதிகாரத் திமிருடன் திருப்பி அனுப்பியதாகச் செய்திகள் வருகின்றன. புகார் வந்தபோதே காவல்துறை தேடும் பணியைத் தொடங்கியிருந்தால், மாணவியை உயிரோடு மீட்டிருக்கலாம் எனப் பெற்றோர் கதறித் துடிப்பது ஆறாத் துயரமாக இருக்கிறது!
திரு. ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை தன் கடமையைச் செய்யத் தவறியிருக்கிறது. புகாரை வாங்க மறுத்துப் பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழித்து அவமானப்படுத்தியிருக்கிறது காவல்துறை! நிரந்தர டி.ஜி.பி-யை நியமிக்காமல் நீங்கள் காலம் கடத்திக் கொண்டிருந்தால், கீழ் நிலையில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கு மக்களுக்காகப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும் முதலமைச்சரே?
எதிர்காலக் கனவுகளைச் சுமந்து பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள். தினந்தோறும் 'பாலியல் வன்கொடுமை' எனத் தலைப்புச் செய்திகள் வருவது இந்த ஆட்சிக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்பது உங்களுக்குத் தெரிகிறதா..?
நேற்று 14 வயதுச் சிறுமி, இன்று 17 வயதுச் சிறுமி என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், நாளை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்களை ஆழ்த்தியிருக்கிறது. மாநிலத்தில் இவ்வளவு குற்றங்களும் கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் தன் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார். தினம் ஒரு பாலியல் கொலை நடப்பதுதான் உங்கள் சாதனையா சி.எம். சார்?
மக்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாத இந்த ஆட்சி, விரைவில் மக்களால் அப்புறப்படுத்தப்படும். ஆட்சியாளர்களுக்கு வால் பிடிப்பதை விட்டுவிட்டு, இனியாவது காவல்துறை தன் பணியை விழிப்புடன் செய்ய வேண்டும்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
40 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட மாணவர்களுக்கே இந்த கதி!
ஐயா அன்பில் மகேஷ் எங்கே இருக்கிறார்?? ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க வரும் இடத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உணவிலேயே இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இப்போது வரை அங்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வரவில்லை. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது பல குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆதாரம். இத்திட்டத்தில் தரம் மற்றும் தூய்மையை உறுதி செய்ய வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் தலையாய கடமை.
ஆனால் அத்தனை குழந்தைகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் அளவுக்கு உணவின் தரம் மோசமாக இருந்தது என்பது அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாட்டையே காட்டுகிறது. சமையல் கூடங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுகிறதா?
பொருட்களின் தரம் சரிபார்க்கப்படுகிறதா? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வேதனையளிக்கிறது. குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய மெத்தனப் போக்கு இனி வரும் காலங்களில் தொடரக்கூடாது. ஒருமுறை தவறு நடப்பதே பெரிய குற்றம் எனும் போது, அடிக்கடி இதுபோன்ற செய்திகள் வருவது திமுக அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது.
Dear tvkians..
திமுகவின் இன்றைய கட்டுக்கதைகள் என்னவாக இருக்கும்? உங்கள் கற்பனை திறனை, நகைச்சுவை உணர்வை, நாகரீகமாக காட்டுங்கள் 😂
1. பட்டப்பகல் கொலைகள் பற்றி:
"பட்டப்பகலில் அரிவாளால் வெட்டுவதை 'கொலை முயற்சி' என்று சொல்லக் கூடாது. அது ஒரு 'உலோகவியல் பரிசோதனை' (Metallurgical Testing). இரும்பும் மனிதத் தசையும் எவ்வளவு வேகத்தில் மோதுகிறது என்று இளைஞர்கள் செய்யும் 'நேரடிச் செய்முறை விளக்கம்' - உயரதிகாரி கண்டுபிடிப்பு.
2. ரவுடிகளின் அட்டகாசம் பற்றி:
"ரவுடிகள் மாமூல் கேட்பதை 'மிரட்டல்' என்று சொல்லக் கூடாது. அது ஒரு 'தன்னார்வ வரி வசூல் முறை' (Crowdfunding). வணிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான 'பரஸ்பர அன்புப் பரிமாற்றம்' - மூத்த உடன்பிறப்பு கண்டுபிடிப்பு.
3. போதைப்பொருள் புழக்கம் பற்றி:
"கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை 'சட்டவிரோதம்' என்று சொல்லக் கூடாது. இது இளைஞர்களை 'ஆன்மீக நிலைக்கு' அல்லது 'கற்பனை உலகிற்கு' அழைத்துச் செல்லும் 'மனநல ஊக்க மருந்து'. இதை விற்பவர்கள் 'மகிழ்ச்சி விநியோகஸ்தர்கள்' - நவீன நடுநிலையாளர் கண்டுபிடிப்பு.
4. லாக்கப் மரணங்கள் பற்றி:
"விசாரணைக் கைதி உயிரிழப்பதைக் 'கொலை' என்று சொல்லக் கூடாது. அது 'நிர்வாக ரீதியான இயற்கை மரணம்'. லத்தியும் முதுகும் முத்தமிட்டுக் கொண்டதில் ஏற்பட்ட 'உணர்ச்சிப் பெருக்கால்' வந்த மூச்சுத்திணறல் - வாடகை வாய்கள் கண்டுபிடிப்பு.
5. திருட்டு மற்றும் கொள்ளை பற்றி:
"வீடு புகுந்து கொள்ளையடிப்பதை 'திருட்டு' என்று சொல்லக் கூடாது. அது ஒரு 'செல்வப் பகிர்வுத் திட்டம்' (Wealth Redistribution). செல்வந்தர்களிடம் இருக்கும் உபரிப் பொருட்களைத் தேவையுள்ளவர்கள் எடுத்துச் செல்லும் 'சமதர்மப் புரட்சி' - வாரிசு விரும்பி கண்டுபிடிப்பு.
6.விலைவாசி உயர்வு பற்றி:
"விலைவாசி உயர்ந்துவிட்டது என்று சொல்வது தவறு. இது மக்களின் வாங்கும் திறனைச் சோதிக்கும் 'பொருளாதார உடற்பயிற்சி'. விலை ஏறவில்லை, ரூபாயின் மதிப்பு 'யோகா' செய்கிறது - வெண்குடை வேந்தர் கண்டுபிடிப்பு.
7.மின்வெட்டு பற்றி:
"மின்சாரம் போய்விட்டது என்று சொல்லக் கூடாது. அது 'இருள் வழிபாட்டு நேரம்'. தொடர்ச்சியாக மின்சாரம் கொடுத்தால் கம்பிகள் சூடாகிவிடும் என்பதால், கம்பிகளுக்குக் கொடுக்கப்படும் 'சிறு ஓய்வு' - அவதூறு பரப்பாளர் கண்டுபிடிப்பு.
8.சாலைப் பள்ளங்கள் பற்றி:
"சாலையில் பள்ளம் இருக்கிறது என்று சொல்வது அவதூறு. அவை மழைநீரைச் சேமிக்க இயற்கை கொடுத்த 'மினி ஏரிகள்'. வாகன ஓட்டிகள் நிதானமாகச் செல்ல அரசு ஏற்படுத்திய 'இயற்கை வேகத்தடைகள்' - கரைவேட்டி கண்டுபிடிப்பு.
9.வேலைவாய்ப்பின்மை பற்றி:
"வேலையில்லா திண்டாட்டம் என்று சொல்லக் கூடாது. இளைஞர்கள் அனைவரும் 'சுயசிந்தனை நிபுணர்களாக' (Freelancers) மாறிவிட்டார்கள். வேலை தேடாதது சோம்பேறித்தனம் அல்ல, அது 'உழைப்பு சேமிப்புத் திட்டம்' - பவளவிழா பாப்பா கண்டுபிடிப்பு.
10.தேர்தல் வாக்குறுதிகள் பற்றி:
"வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சொல்லக் கூடாது. அவை 'காலாவதியாகாத கனவுகள்'. கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றினால் சுவாரஸ்யம் போய்விடும், அதனால்தான் அதை 'தவணை முறைத் திட்டமாக'மாற்றியுள்ளோம் - காப்பி அடித்து மாநாடு நடத்துவோர் சங்கம் கண்டுபிடிப்பு.