கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று வருகை தந்த மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
@nsitharaman
கரூரில் நடைபெற்ற பேரிழப்பு…ஈடு செய்ய முடியாத உயிரிழப்பு...
பெருங்கூட்டத்தில் பலியான
உயிர்களுக்கு ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் காணவும், பாரத தேசத்தின் பிரதமர் மோடிஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களும், மத்திய இணை அமைச்சர் திரு. L.முருகன் அவர்களும் கரூர் வருகை தந்தனர்.
பெருங்கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
@nsitharaman@DrLMurugan@NainarBJP@VanathiBJP@BJP4TamilNadu
பாரதிய ஜனதா கட்சியில் பயணிப்பதே பெருமை...
கொங்கு நாட்டின் திருமகன்...
தமிழகத்தின் தலைமகன்...
அண்ணன் C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் பாரத தேசத்தின் துணை ஜனாதிபதியாக தேர்வு பெற்றதை முன்னிட்டு கரூர் பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் செய்து வருகின்ற நன்மைகள் ஏராளம்.
அதற்கெல்லாம் மகுடமாக கொங்கு பகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர் அவர்களை தேசத்தின் துணை ஜனாதிபதி பதவியில் அமர்த்தி பெருமை சேர்த்து உள்ளார்.
இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
@NainarBJP@CPRGuv
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் திரு. @KPRamalingamMP அவர்கள் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் திரு.ம.சின்னச்சாமி அவர்கள் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும் , நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் திரு. @PThangamanioffl அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 2/2
மாநில தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்கள் அலோசனைப்படி NDA கூட்டணியை வலுப்படுத்த முதல் சந்திப்பு கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெருந்திரளான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன். மேலும் இக்கூட்டத்தில் தமிழக NDA கூட்டணியின் தலைவர் மற்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமான புரட்சித்தமிழர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களின் கரூர் வருகையை முன்னிட்டு, #எடப்பாடியார் அவர்களை வரவேற்பது குறித்து கரூர் மாவட்ட அஇஅதிமுக செயலாளர் அண்ணன் திரு. @OfficeofminMRV அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 1/2
கண்டன அறிக்கை.
பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி திரு.ரகுபதி அவர்களை பொய் வழக்கில் கைது செய்த கரூர் மாவட்ட காவல்துறையை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கரூர் மாவட்டம் முழுவதும் தினம் ஒரு கொலை, கொள்ளை, பள்ளி மாணவர்களுக்கு கூட எளிதில் கிடைக்கக்கூடிய அளவிற்கு, கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருள்கள்.. தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மணல் கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை, திராவிட மாடல் அரசின் ஏவல் துறையாக கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
மாற்றுக் கட்சியின் நிர்வாகிகளை திமுகவிற்கு அழைத்துச் செல்வது,
மறுப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பது என கரூர் மாவட்டத்தில் தொடர்கதை ஆகி வருகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் ரகுபதி அவர்களின் மனைவி, திமுகவின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருகின்ற ஒருவரின் தாயாரை எதிர்த்து
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மாயனூர் ஊராட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த நபர் ரகுபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு பிரச்சனைகளை, தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் நேற்றைய தினம் பொய் வழக்கில் கைது செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம்.
தனக்கு வேண்டாதவர்களை குறி வைத்து அரசியல் செய்யும் திமுகவினரின் கைக்கூலியாக செயல்பட்டு வருகின்ற கரூர் மாவட்ட காவல் துறையை வன்மையாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கண்டிக்கின்றது.
திரு. ரகுபதி அவர்களை பொய் வழக்கில் கைது செய்ததை கண்டித்து மாநில தலைவரின் ஒப்புதல் பெற்று ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விரைவில் நடத்தும், கரூர் மாவட்ட திருட்டு திராவிட மாடல் திமுகவின் அட்டூழியங்களையும், கரூர் மாவட்ட காவல்துறையின் நேர்மையற்ற செயல்பாட்டையும் மக்கள் மன்றத்திலே எடுத்துரைப்போம்.
V.V. செந்தில்நாதன்
மாவட்ட தலைவர், பாரதிய ஜனதா கட்சி, கரூர்.
@NainarBJP@annamalai_k@KPRamalingamMP@BJP4TamilNadu
திருச்சி தினமலர் ஆசிரியர் திரு. ராமசுப்பு (எ) பாலாஜி அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில்,மாநிலத் தலைவர் அண்ணன் நைனார் நாகேந்திரன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோருடன் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த பொழுது.....
உலகில் யாராலும் வெல்ல முடியாத மாமன்னர் இராஜேந்திர சோழனை போற்ற வரும் விஷ்வகுரு எங்கள் பாரத்ததின் மாமன்னர் @narendramodi ஜி அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்.
@NainarBJP@annamalai_k
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், மண்டலுடைய 5 பொறுப்பாளர்கள்-சக்தி கேந்திரம், கிளைக் கூட்டம், மனதின் குரல், BLA 2, பக்க பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@NainarBJP@KesavaVinayakan@BJP4TamilNadu
அனைவருக்கும் வணக்கம்.
கரூர் மாவட்டத்தின் அனைத்து இல்லங்களிலும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் "மன் கி பாத்" (மனதின் குரல்) நிகழ்ச்சியை 29-06-25 காலை
11.30மணிக்கு ஒளிபரப்ப ஒரு சிறப்பான முயற்சிக்கு நாம் தயாராக வேண்டும்.
பிரதமர் மோடி ஜி அவர்கள் ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களுடன் நேரடியாக உரையாடி, தேசத்தின் முன்னேற்றங்கள், சமூக மாற்றங்கள், அரசின் திட்டங்கள், மற்றும் பொதுமக்களின் பங்களிப்புகள் குறித்துப் பேசும் இந்த நிகழ்ச்சி, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.
இந்த அரிய வாய்ப்பை கரூர் மாவட்ட மக்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், "மன் கி பாத்" நிகழ்ச்சியை உங்கள் இல்லங்களிலும், சமுதாயக் கூடங்களிலும், பொது இடங்களிலும் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இந்த முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் மனதார வரவேற்கிறேன். இது ஒரு தனிநபரின் குரல் மட்டுமல்ல, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையைச் சுட்டிக்காட்டும் ஒரு வழிகாட்டி!
வாருங்கள், இணைந்து கேட்போம்! தேசத்தின் குரலுக்கு செவிமடுப்போம்!
VV.செந்தில்நாதன்.
மாவட்டத் தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி,
கரூர் மாவட்டம்.
@NainarBJP@BJP4TamilNadu
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நடைபெறுகின்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தமிழ் கடவுளாம்,கரூர் வெண்ணமலை முருகப்பெருமானை வணங்கி வெற்றிவேல் எடுத்து மதுரை மாநகரம் நோக்கி புறப்பட்ட பொழுது....
வெற்றிவேல்! வீரவேல்!!
@NainarBJP
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்களை புதிய மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து மிகவும் உற்சாக படுத்தினார்.
தலைவருக்கு நன்றி!!!
நமது தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் அமைதிக்காகவும் முன்னெடுக்கப்பட்ட ஆபரஷேன் சிந்தூரின் வெற்றிக் கொண்டாட்டமான மூவர்ணக் கொடி யாத்திரை கரூரில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
தேசப்பற்று எனும் ஒரே புள்ளியில் சங்கமம்!
@NainarBJP#TirangaYatra#OperationSindoor