மீண்டும் ஒரு முறை, யாரிடமும் சொல்லாமல், ஒரு சிறிய அறிவிப்போடு ஓய்வை நோக்கிச் சென்றுவிட்டாயே தலைவா...! 💔
சில பீஸ்கள், நான் அறிமுகமான தேதியில்தான் என்னுடைய கடைசி மேட்ச் நடக்க வேண்டும், அதுவும் இந்தியாவில் நடக்க வேண்டும், மும்பையில் நடக்க வேண்டும், அதுவும் எதிரணியின் பந்துவீச்சு பலவீனமாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய கடைசிப் போட்டிக்குக்கூட எத்தனையோ நிபந்தனைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், உனக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஒரு கடைசி தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நீ மீண்டும் ஒருமுறை மைதானத்திற்குள் வருவாய், உன் பேட்டை உயர்த்துவாய், அந்தப் பழக்கமான புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பாய் என்று கோடிக்கணக்கான இதயங்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இத்தனை ஆண்டுகள் எங்களுக்காக விளையாடிய நீ, ஒரு வார்த்தைகூட சொல்லாமல், ஒரு பிரியாவிடைகூட இல்லாமல், சத்தமே இல்லாமல் விடைபெறுகிறேன் என்கிறாயே தலைவா...!
உன் ஓய்வு என்பது உன் ஆட்டத்தின் ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அது ஒரு சகாப்தத்தின் முடிவு. உன் ஆட்டத்தைப் பார்த்து வளர்ந்த ஒரு தலைமுறையின் குழந்தைப் பருவம், இளமை, கொண்டாட்டம் என எல்லாவற்றிலும் நீ இருக்கிறாய்.
இனி எத்தனை வீரர்கள் வரலாம், எத்தனை சாதனைகள் படைக்கப்படலாம்... ஆனால், உனக்காகத் தொலைக்காட்சி முன் காத்திருந்த அந்த நாட்களையும், நீ அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் நாங்கள் கொண்டாடிய அந்த நிமிடங்களையும் யாராலும் மீண்டும் தர முடியாது.
மைதானத்தில் உன்னை இனி பார்க்க முடியாது என்பதைவிட, உனக்காகக் காத்திருக்க இனி ஒரு போட்டி கூட இல்லை என்பதைத்தான் மனம் ஏற்க மறுக்கிறது!
போய் வா தலைவா... உன் ஆட்டம் முடிந்திருக்கலாம். ஆனால், எங்கள் இதயங்களில் உனக்கான ஆட்டம் ஒருபோதும் முடியாது! ❤️🥺
இவங்க ஒரு டைம் இல்ல ரெண்டு முறை திருட போயிருக்காங்க! 😳
தொடர்ந்து 4 நாள் போய்ட்டு வந்து வேவு பாத்திருக்காங்க.. எங்க லாம் doors windows இருக்குனு..
முதல் முறை ஒரு தடவ திருட முயற்சி பண்ணி கோட்ட விட்டுடாங்க அடுத்த முறை நைட்டு 12 மணி போல அவன் பின்னாடி வழியா மேல் floor ku ஏறி window வழியா உள்ள போய் திருடிருக்கான்!
பின்ன அத அவன் அப்பா கிட்ட குடுத்து வெச்சிட்டு அப்றம் அத இவங்க ரெண்டு பேரும் ஒரு இடத்துல புதச்சி வெச்சிருக்காங்க..