My letter to @India_NHRC appealing for inquiry into the recent custodial death of Mr. Ajith Kumar from Sivaganga District and Alarming Rise in Custodial Deaths in Tamil Nadu.
#justiceforajithkumar
என்னைப் பற்றி யார் விமர்சனம் செய்தாலும் பதிலுக்கு விமர்சனம் செய்யாதீர்கள். அன்பால் அவர்களை நம் பக்கம் வரவழையுங்கள் - தைலாபுரத்தில் இன்று நடந்த சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் மருத்துவர் அய்யா பேச்சு
உயிரிழப்பா?
படுகொலையா?
சிவகங்கை-திருப்புவனத்தில் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள தம்பி அஜித்குமார் அவர்களின் உயிரிழப்பிற்கு பொம்மை முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்!
எல்லாவற்றிற்கும் முட்டு கொடுக்கும் கூட்டணி கட்சிகள் எங்கே?
வாரிசு வழங்கும் திரைப்பட வாய்ப்புகளுக்காக அன்று பொய் குரல்கள் எழுப்பிய போலி கூத்தாடிகள் எங்கே?
திரைப்பட நடிகர்கள் என்ற பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றி,திரைமறைவில் வாரிசுக்காக வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
விளிம்பு நிலையில் உள்ள சாதாரண ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இளைஞனை கொன்று இந்த அவல அரசின் நிர்வாகத்தின் மீது படிந்துள்ள இரத்தக் கரையை பொம்மை முதல்வர் எவ்வாறு சுத்தம் செய்ய போகிறார்?
#JusticeForAjithkumar
அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே,
பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் "காவல்துறை அமைச்சர்" திரு. @mkstalin அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.
1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?
3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?
4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?
5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?
6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?
7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?
8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட @arivalayam அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?
9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்!
#JusticeForAjithkumar
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்!
அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும்.
இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.
அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெய்பீம் படம் பார்த்து கண் கலங்கிய @mkstalin அரசின் இன்னுமொரு லாக்அப் மரணம்!
சாத்தான்குளம் மனித உரிமை போராளிகள் எங்கே? "அதிமுக அரசிடம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை!" என அன்று கனல்விழி காட்டி, சுடுமொழி பேசிய @KanimozhiDMK எங்கே? எங்கே?
#lockupdeath#DMKFailsTN
#WATCH | Chennai, Tamil Nadu: AIADMK spokesperson Kovai Sathyan says, "This is not a custodial death. This is the 25th custodial murder since DMK came to power. Ajith Kumar, a security guard with the temple and his brother, who had been called for an inquiry, were exposed to brutality. Ajith Kumar succumbed to the police brutality within the police station itself, and there is a blatant cover-up of evidence that relates to brutality, such as the plastic pipes, chilli powders, and iron rods, which were all removed from the scene. This clearly indicates how rattled the entire scenario is with respect to the police force handling Ajith Kumar... We expect a transparent probe, but however, having known that the last 24 murders, there is no headway, this will be another big cover up from the DMK, but definitely those who are behind will be brought to justice, and AIADMK will stand by those people who demand justice, particularly the Ajith Kumar's family..."
கண்ணீர் வரவழைத்த காட்சி
அஜித்குமார்
என்ற
உயிருக்காக
தேவேந்திரகுலவேளாளள
நண்பனிடம்
ஹரி நாடார்
செய்த சத்தியம்.
ஏலேய்
எங்களுக்கா
சாதிவெறி?
மண்ணின்
மாண்பை
உணர்ந்தவன்
மள்ளன்
மற்றவர்களை போல்
எங்களுக்கு
சாதிவெறி
இருந்தால்
இங்கே
தமிழனுக்கென்று
ஒரு
வரலாறும்
இல்லை..
😓
கள் விவகாரத்தில்
கிருஸ்ணசாமி அவர்களின் சாதி,அவர்களின் பெற்றாேர்களின் சாதிவரை ஆராய்சி செய்த நாம்தமிழர் கட்சியினர்
மடப்புரம் நாடார் இளைஞர் காெலை சம்பந்தப்பட்ட காவலர்களின் சாதியை பற்றி இதுவரை ஆராய்சி செய்யவில்லை யே ஏன்?
மூத்திரLabTestல ஆளு இல்லயா இல்ல இன்னும் மூத்திரமே கிடைக்கலயா?
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இளைஞரணி தலைவர் மற்றும் அன்பு மகன் திரு. வியங்கோ பாண்டியன் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கையில் நீடித்த ஆரோக்கியம், அபரிமிதமான செல்வம் மற்றும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
விசாரணை என்ற பெயரில் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் காவல் மரணங்களை வன்மையாக கண்டிப்பதோடு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் உண்மையான இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
#JusticeForAjithkumar | #NationWithAjith
#JusticeForAjithKumar
What a cruel, gruesome state sponsored murder by #DMK Govt. led by incompetent Chief Minister @mkstalin !
Listen to the people, they know the law & they know #DMK’s dirty politics behind this.
People will vote out DMK in 2026.
கேடுகெட்ட ஆட்சி!!
எளிய மக்களின் உயிர்களை காவு வாங்குகிறது அரச பயங்கரவாதம்!!
பிடில் வாசிக்கிறார் ஆளுமை திறன் துளியும் அற்ற முதல்வர்.
கடுகி ஒழியட்டும் காட்டாட்சி!!