Happy to interact with the MBA students of Firebird Institute. Wishing them all the very best as they embark on their journey of learning and leadership!
Happy to address the students of PSG Institute of Advanced Studies during their induction programme.
Wishing them an exciting journey of learning, growth, and endless possibilities.
Happy to deliver the keynote address for the PGP 2027 batch during their induction programme at Altera Institute, Gurgaon. Wishing the entire batch a wonderful learning journey and great success ahead!
இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தமிழ் சினிமாவை மண்ணின் மணத்தோடும், மனிதர்களின் உணர்வுகளோடும் உலகிற்கு அறிமுகப்படுத்திய மகத்தான படைப்பாளி அவர். அவரது படைப்புகள் தலைமுறைகளை கடந்தும் பேசும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.
என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே…
தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.
“அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது.
அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம்.
நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்!
தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
கட்சியால் எத்தனையோ பலன் அடைந்த துரோகிகள் உயிரோட இருக்கும் போது உண்மையான தொண்டர் ஏன் இந்த அவசர முடிவு மனது வலிக்கிறது
கே.எ.ஸ்.பூக்கடை மகேந்திரன் அதிமுக
ஆழ்ந்த இரங்கல் 😢
தான்
தனது குடும்பம்
தனது வாரிசுகள்
தனது சுற்றுவட்டாரம்
பதவி பணம் அதிகாரம் என கழகத்தால் பயன் அடைந்தவர்கள் மத்தியில் கழகத்திற்காக தனது உயிரை நீத்த திருப்பனந்தாள் பூக்கடை K.S. மகேந்திரன் அதிமுகவின் இறப்பை மனம் ஏற்க மறுக்கிறது.
உன் இறப்பை
மனம் நொந்து வலிக்கிறது இறைவா😭
ஆழ்ந்த இரங்கல் 😭
#இதய_தெய்வமே😭
கழக தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் திரு. K.A.S. மகேந்திரன் அவர்களின் மறைவு செய்தி மனதை கனக்கச் செய்கிறது. மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
ஒரு தொண்டரின் இழப்பு மட்டுமல்ல இது... கணவனை இழந்து ஒரு மனைவி நிற்கிறார். தந்தையை இழந்து ஒரு சிறு குழந்தை நிற்கிறது.
ஆதரவாக ஆயிரம் பேர் வந்தாலும், அப்பா என்று அழைக்கும் அந்த ஒரு உறவை யாராலும் திருப்பிக் கொடுக்க முடியாது. தயவு செய்து கழக நண்பர்கள் யாரும் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
எத்தனை சோதனைகள் வந்தாலும், உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தான் நம்பிக்கை. நீங்கள் தான் மன நிம்மதி. நீங்கள் தான் சந்தோஷம். நீங்கள் தான் அவர்களின் உலகம்.
எது இருந்தாலும், இறுதிவரை உங்களைத்தான் உங்கள் குடும்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
தம்பி மகேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆழ்ந்த இரங்கல் 🙏
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். 🙏
மீளா துயர் தம்பி இது, யாரிடமாவது பேசியிருக்கலாமே! நாங்கள் இருக்கிறோமே! ஆறுதல்படுத்தி தேற்றி இருப்போமே!
இந்த முடிவை நீ எடுத்திருக்க கூடாது தம்பி.
உங்களின் தாய், தந்தையரை எப்படி ஆறுதல்படுத்துவோம்.🙏
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்!
#HBDEdappaadiyaar
Removed all my posts and suggestions regarding this issue on social media. I don’t see a point, since it was not taken in the spirit it was intended.
Best wishes to both sides for your social media fight 🙏
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
The results of the recent state elections have been dramatic by any measure.
But for me, this image will remain the most unforgettable outcome of the elections.
More than 166,000 votes were cast between the two leading candidates in this constituency in Tamil Nadu.
And history was changed by just one vote.
This image should be shown in every school in the country & perhaps around the world.
So that every child understands that when they grow up, the greatest power they may possess is the Power of One.
The power of their one vote.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் மக்கள் தீர்ப்பை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற தவெக தலைவர் @TVKVijayHQ@actorvijay அவர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியும் மரியாதையும்.
மாற்றம் ஒன்றே நிலையானது. Orkut மறைந்தது, Facebook முன்னேறியது, இன்று Instagram காலம். மற்ற பல துறைகளை போலவே, அரசியலும் காலப்போக்கில் விரைந்து மாறி வளர்கிறது.
இந்த மாற்றத்தை உணர்ந்து, நம்மை நாமே புதுப்பித்து, புதிய யுக்தியுடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் தொடங்க வேண்டிய நேரம் இது.
நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்கும் மனிதனுக்கு தோல்வி என்பதே கிடையாது! களத்தில் சந்திப்போம்!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி நமதே!
#அண்ணாதிமுக_WINNING!
#நல்லாட்சி_COMING!
@AIADMKOfficial