🚨 தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது! ⚠️
இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு #தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்!
ஆகஸ்ட் மாத GST பு���்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை.
2025 ஆகஸ்டில் ₹10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் GST வசூல், 2026 ஆகஸ்டில் ₹10,189 கோடியாகக் குறைந்துள்ளது.
அதாவது -1% சரிவு! 📉
ஆனால் இதே காலகட்டத்தில்:
🇮🇳 இந்தியா +9%
கர்நாடகா +13%
குஜராத் +15%
தெலங்கானா +16%
உத்தரப் பிரதேசம் +19%
மகாராஷ்டிரா +8%
தமிழ்நாடு மட்டும் -1%!
சாதாரண மக்களுக்கு இந்த GST எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்?
ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% SGST மூலமாக மட்டுமே வருகிறது !
வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டு��்.
ஆனால் ஆகஸ்ட் மாத GST காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு!
“ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம்.
உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது,
தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
இது நிச்சயம் ��ரு முக்கிய ��ச்சரிக்கை! ⚠️
இந்த நிலை தொடர்ந்தால்:
பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்?
மேலும் கடன் வாங்கப் போகிறார்களா?
வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?
அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா?
வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்!
இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு ���ாங்க முடியாது!
🚨 இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா?
இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும் !
தமிழகத்தில் முதலீட்டை அதிகரிப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் செல்கிறார். தற்பொழுது நடிகையும் லண்டனில் இருக்கிறார். இந்த இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.