#NewsUpdate | "தோழமைக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்து இருக்கிறோம் என்ற பொருளில் அமைச்சர் ராஜ்மோகன் சொல்லி இருக்க வாய்ப்பில்லை.”
-விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
#SunNews | #VCK | #TVK
பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?
அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?
முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!
ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.
மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!
#Pattinapakkam #Secretariat #FishermenProtest
என் மாண்புக்குரிய மதிப்புக்குரிய @BussyAnand சார் மீது எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட வெறுப்போ, பகையோ கிடையாது.
தற்போது என்னுடைய பெயரை பயன்படுத்தி ��ரவி வரும் ஆடியோக்கள் குறித்து தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். அவை என்னுடைய குரல் அல்ல. அவை போலியாக உருவாக்கப்பட்ட ஆடியோக்கள்
என்னுடைய பெயரையும், குரலையும் தவறாக பயன்படுத்தி குழப்பத்தையும் அவதூறையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற உள்ளடக்கங்கள் பரப்பப்படுவது தீய சக்திகள் வேலையே
உண்மையை அறியாமல் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம்.
உண்மை வெல்லட்டும்.
தவெகவின் அதிகாரப்பூர்வ மறுப்பு செய்தி:
சமீபத்தில் அமைச்சர் பற்றி ஒரு தனிப்பட்ட நபர் voice of sarath பேசும் ஆடியோ ��மூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த ஆடியோவில் பேசியிருக்கும் நபருக்கும் கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் சம்பந்தமும் கிடையாது. அவர் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளராக பேசி வருகிறார்.
அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் யூடியூப் போன்ற சேனல்களில் பேசுவதற்காக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட நபர்களை தவிர அதாவது தமிழக வெற்றிக்கழக மாநில சமூக ஊடக செய்தி தொடர்பாளர்கள்
தமிழன் ராகுல்காந்தி (எ) ராகுல்காந்தி
தியாகராஜன்
நரேஷ்குமார் ராஜேந்திரன்.
இந்த மூவரைத் தவிர ஆதரவாளர்கள் என்ற முறையில் யார் பேசினாலும் அதற்கும் கட்சிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ✅
அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என இருவகையில் சமூக வலைதளங்களில் விவாதம் நடக்கிறது என்பதை நம் கட்சி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் புரிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தவெக follow செய்யும் RSS formula!
ஒருவர் கட்சிக்காக ஊர் ஊராகச் சென்று வக்காலத்து வாங்குவார். ஆனால், அவர் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால், "அவர் எங்கள் கட்சிக்காரரே இல்லை, அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை" என்று கைழுவி விடுவது RSS, பாஜகவின் உத்தி. அதையேதான் இப்போது தவெகவும் செய்கிறது.
சொல்வதெல்லாம் உண்மை புகழ் Voice of Sarath என்பவருக்கும் தவெகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையாம். ஆனால், இவர் யூடியூப் சேனல்களில் தவெகவின் பிரதிநிதியாகத்தானே தொடர்ந்து பேசிவருகிறார்?
எல்லாவற்றுக்கும் மேலாக, @tn_factcheck இயக்குநராக இருக்கும் @GuRuThalaiva team-இல் இதே சரத் முக்கிய அங்கமாக உள்ளாரே?
கடந்த கரூர் சம்பவத்திலும் தவெக-வுக்கு ஆதரவாகப் பேசி தானே கைதானார்? அப்போ���ு அவர் தவெக இல்லை என்று ஏன் சொல்லவில்லை? பாலியல் விவகாரத்திலும் சிக்க��னாரே அப்போது கூட அவருக்கும் தவெகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லவில்லையே. தவெக-வில் இருப்பதற்கு அடிப்படை தகுதி அது என்பதால் அமைதியாக இருந்தீர்களா? சமீபத்தில் Galatta YouTube சேனலில் நடந்த விவாதத்திலும் தவெக-வுக்காக தானே பேசினார். அப்போதெல்லாம் தவெகவுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லவில்லை. இப்போது அமைச்சர்களின் வண்டவாளத்தை தெருவில் இறக்கிவிட்டார் என்பதற்கா���தான் இந்த பதற்றமா?
தவெகவுக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றால், அரசின் முக்கியக் குழுவில் அவர் எப்படி இடம்பெற்றார்? அமைச்சர்கள் @RameshOffcl, @sarath0828 -ஐ சந்தித்து அவருடன் தோளில் கை போட்டு பேசும் அளவுக்கு செல்வாக்கு இருக்கிறதே. தவெக தொண்டர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனால் ஆதரவாளராக உள்ளவருக்கு இவ்வளவு பவர் என்பது நம்பும்படியாக இருக்கிறதா?
சிக்கலில் மாட்டினால் தப்பிப்பதற்காக இத்தனை நாள் கட்சிக்காக உழைத்தவர்களை காவுகொடுக்கும் இந்த கேடுகெட்ட பிழைப்புக்கு, நீங்கள் கட்சியை ஆரம்பிக்காமலேயே இருந்திருக்கலாம். உங்கள் கட்சிக்காக அதிகமாக அவதூறு பரப்பியவர்களில் முக்கியமானவரை கழற்றி விட கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். ஆனால், இந்த விவகாரம் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை விசாரணை கண்டிப்பாக நடத்தப்பட்டு உண்மை மக்களுக்கு சொல்லப்பட வேண்டும்!