பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்த��டுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை. எப்போதும்போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்க���க என்றும் குரல் கொடுப்பது என் பணி.
திராவிட மாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த த���குதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் அவர்களின் வழியில் மக்கள் பணி என்றும் தொடரும். 🖤❤️
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் நடந்த கோர சம்பவம் தொடர்பாக சிலர் எழுப்பும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் இதோ உள்ளது. கண்ணுடையோர் காண்க!
#JusticeForKarurVictims
அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?
- மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள் அறிக்கை
“உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ��ம் தமிழ் உறவுகள்’’ என கரூர் துயரத்திற்கு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
நாம் முதலமைச்சராக இருந்த போது தொலைக்காட்சியைப் பார்த்துத்தானே ஆட்சி செய்தோம். இப்போது இருக்கிற முதலமைச்சர் நேரில் போகிறாரே? என்ற விரக்தியில், இயலாமையில் உளற ஆரம்பித்திருக்கிறார்.
கரூர் சம்பவத்திற்கு ஆணையத்தை அரசு அமைத்ததை Eyewash ஆணையம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது அமைத்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பழனிசாமியின் Eye மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட Eyewash-தானா?
சமூக ஊடகங்களில் எந்தமாதிரியான சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என்பது தெரியாதா? உங்கள் கட்சியின் ஐடி விங்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் இறந்த போதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே. நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள். பொம்மையை வைத்து அரசியல் செய்த வரலாற்றை எழ��தியவர்கள்தானே நீங்கள் இதுபோன்ற நாடகங்களை நடத்திப் பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோஷூட்டாகத் தெரியும். பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.
அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். இதே செப்டம்பர் 29-ம் தேதி 11 ஆண்டுகளுக்கு முன்பு அழுகாச்சியோடு ஓர் அமைச்சரவை பதவியேற்பு நாடகம் நடந்தது பழனிசாமிக்கு தெரியுமா? சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் த��்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதனால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?
***
#AdmkFails
தமிழகமே அழுகிறது... அமைச்சர் அழுதால் நாடகமா?
கரூர் துயரத்தில் பங்கெடுப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. சிலருக்கு இது வெறும் அரசியலாகத் தெரிவது வேதனை. கண்ணீருக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.
#இதுநாடகமல்லமனிதம்#KarurTragedy
மரியாதைக்குரிய அண்ணன் @draramadoss அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.
வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை க���ட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்.
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தோர் - உடல்நலம் குன்றியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும் - மருத்துவக்குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களி���் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
குறிப்பிட்ட அரசியல் கட்சி கூட்டத்த��ற்கு அவர்கள் கேட்ட இடத்தையே, காவல்துறை அனுமதி அளித்தது. குறிப்பிடப்படும் இதர இரண்டு பகுதிகள் இதைவிட குறுகலானவை. மேலும் அனுமதி கோரிக்கையில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்ட நிலையில். கூடுதலாக கூட்டப்பட்ட கூட்டத்தால் இந்த பெருந் துயரம் ஏற்பட்டுள்ளது.
#KarurTragedy
கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது.
நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை ��ோக்கியே இருக்கிறது.
முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்…
மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்…!!
என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்
மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் @revanth_anumula அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் ஆகியோரும்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும்
சட்டமன்ற உறுப்பினர்களும்
நீதியரசர்களும்
பத்திரிகையாளர்களும்
எழுத்தாளர்களும்
கல்வியாளர்களும்
சமூக செயற்பாட்டாளர்களும்
திரைக் கலைஞர்களும்
விளையாட்டு வீரர்களும்
அரசு அலுவலர்களும்
மாணவர்களும்
வார்த்தெடுத்த ஆசிரியப் பெருமக்களும்
வளர்த்தெடுத்த பெற்றோர்களும்
எல்லோரும் ஒன்று கூடினார்கள்! அழுதார்கள்! மகிழ்ந்தார்கள்! ஊக்கமளித்தார்கள்! கல்வியைக் கொண்டாடினார்கள்! ���😘😘
கல்வியை மறுத்தவர்களும் மறுப்பவர்களும் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க. அரசுப் பள்ளி பிள்ளைங்க மேலே ஏறி வாறாங்க…
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
நம் விளையாட்டு வீரர் – வீராங்கனையருக்கு திராவிட மாடல் அரசின் ஊக்கமும் – உற்சாகமும், ஒவ்வொரு ஆடுகளத்தையும் வெற்றிக்கான களமாக்கி வருகிறது.
அந்த வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்த 819 வீரர் – வீராங்கனையருக்கு ரூ.21.40 கோடி மதிப்பிலான High Cash Incentive-ஐ இன்று வழங்கினோம்.
குறிப்பாக, World Speed Skating Champion தம்பி ஆனந்த்குமாருக்கு ரூ.1.80 கோடியும், FIDE World Grand Swiss 2025-இல் பட்டம் பெற்று - அரசு வேலையையும் பெற்ற Grand Master தங்கை வைஷாலிக்கு ரூ.75 ஆயிரமும் ஊக்கத்தொகையாக இன்று வழங்கினோம்.
மேலும், நால்வருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணை��ளையும் வழங்கினோம்.
விளையாட்டில் நம் வீரர்கள் திக்கெட்டும் சாதனைகளைப் படைக்க என்றும் துணை நிற்போமென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@SportsTN_ @Atulyamisraias #JMeghanathaReddyIAS #AshokSigamani
இந்த தமிழ்மண்தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது!
இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது!
எட்டுக் கோடித் தமிழ் மக்களின் ஆற்றலும் ஆதரவும் நமக்குப் பக்கபலமாக இருக்கிறது!
இதே உறுதியுடன் போராடுவோம்!
போராடித் தலைநிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம்!
கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமை��்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
---
கரூரில், இன்று (17-09-2025) நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையின் விவரம் வருமாறு:
இது முப்பெரும் விழாவா, விரைவில் நாம் சந்திக்க இருக்கும் வெற்றி விழாவா...!
இது கரூர் அல்ல; திராவிட முன்னேற்றக் கழக ஊர்! கொட்டும் மழையில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், இதே நாளில் வடசென்��ைப் பகுதியில் அமைந்திருக்கும் ராபின்சன் பூங்காவில் கழகத்தைத் தொடங்கி வைத்தார்கள். அவ்வாறு தொடங்கி வைத்த இந்தக் கழகம், 75-ஆம் ஆண்டுகாலம் மட்டுமல்ல, நூற்றாண்டும் நாம் காணப் போகிறோம்.
உங்களிடம் பேசுவதைவிட, இந்தக் கொட்டும் மழையிலும் உங்களின் எழுச்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று எனக்கு உணர்வு ஏற்பட்டிருக்கிறது! என்ன உணர்ச்சி! என்ன ஆர்வம்!
என் உயிரோடு கலந்திருக்கும் ��ுத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளே உங்களுக்கு என் முதல் வணக்கம்!
உடல்நிலை காரணமாக வர முடியாத சூழ்நிலையில், இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு என் வணக்கம்! அவர் வரமுடியாத காரணத்தினால் தலைமைப் பொறுப்பைக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு ஏற்றுக் கொண்டிருக்கிறார், அவருக்கும் என் வணக்கம்! முதன்மைச் செயலாளர் கே.என். நேரு அவர்களே! துணைப் பொதுச் செயலாளர்கள் - ஐ. பெரியசாமி அவர்களே! திருச்���ி சிவா அவர்களே! ஆ. இராசா அவர்களே! என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களே! அந்தியூர் செல்வராஜ் அவர்களே! மாண்புமிகு துணை முதலமைச்சர் – இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட – மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே! வரவேற்புரை ஆற்றிய கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் என்னுடைய இனிய சகோதரர் - அருமை சகோதரர் – பாசமிகு சகோதரர் – ஆற்றல்மிகு சகோதரர் செயல்வீரர் செந்தில்பாலாஜி அவர்களே! ஆற்றல்மிகு மாவட்டக் கழகச் செயலாளர்களே! நாடாளுமன்ற – சட்டமன்ற முன்னாள் - இந்நாள் உறுப்பினர்களே! உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே! அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களே! செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளே! பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள விருதாளர்களே! பல்வேறு அணிகளின் செயலாளர்களே! பொறுப்பாளர்களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
இந்த ஆண்டு முப்பெரும் விழாவைக் கரூரில் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு, அருமைச் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்கள், என்னிடம் வந்தார். நானும் ஒப்புதல் அளித்தேன்...
பொதுக்கூட்டம் என்று சொல்லி, மாபெரும் எழுச்சி மாநாட்டையே இங்கே ஏற்பாட��� செய்திருக்கிறார், செயல்வீரர் செந்தில்பாலாஜி அவர்கள். நாம் கோடு போடச் சொன்னால் ரோடு போடுவார்... நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ரோடு போட்டு, அந்த ரோட்டு மேல்தான் நான் வாகனத்தில் வந்தேன்!
மேற்கு மண்டலத்தில் நம்முடைய எதிரிகளுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக இருப்பவர்தான், நம்முடைய செந்தில் பாலாஜி அவர்கள்! அதனால்தான், அவர் வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியவ��ல்லை என்று, அவரை முடக்கப் பார்த்தார்கள்! ஆனால், அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்து காட்டுவார்!
நான் உறுதியாகச் சொல்கிறேன்… கழக வரலாற்றிலேயே, இப்படியொரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது! கொட்டுகின்ற மழைய��க இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக் கொண்டு நாற்காலிகளைத் தலையில் வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே... இது ஒன்றே சாட்சி! இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்று உழைத்த அருமைச் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் – அவருக்குத் துணை நிற்கும் கரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்���ுகள்! தலைமைக் கழகத்தின் சார்பில் இருகரம் கூப்பி என்னுடைய நன்றியையும் அத்தனை பேருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்!
14 வயதில் கருப்பு - சிவப்பு கொடி பிடித்து, கழகம் – கழகம் என்று உழைக்கத் தொடங்கிய என்னை, இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்தவர்கள் நீங்கள்! ஓயாமல் உழைக்கும் உதயசூரியன்களான உங்களை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் எனக்கு புது எனர்ஜி வந்துவிடும்! காட�� - மேடு, இரவு - பகல், மழை - வெள்ளம், அடக்குமுறைகள், போராட்டங்கள், சிறைச்சாலைகள் என்று, நீங்கள் அனைவரும் போராடித்தான், என்னைத் தலைவர் ஆக்கி இருக்கிறீர்கள்!
மக்களின் ஆதரவுடன், இன்றைக்கு நாடே திரும்பிப் பார்க்கும் நம்முடைய திராவிட மாடல் அரசையும் நீங்கள்தான் உருவாக்கி, என்னை முதலமைச்சர் பொறுப்பில் உட்கார வைத்தீர்கள்! உங்களைச் சந்திப்பதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி!
முப்பெரும் விழா என்றால், பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியார் பிறந்தநாள் - பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் - அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான நாள் - ஆகிய மூன்றையும் சேர்த்து, இந்த திராவிட மாதத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறோம்.
இந்த விழாவில், நாம் கடந்து வந்��� பாதையைத் திரும்பிப் பார்த்து, அதிலுள்ள மேடு - பள்ளங்களைத் திருத்திக் கொள்ளவும், நாம் அடுத்து செல்லவுள்ள பாதையை - வெற்றிப் பாதையாகச் செப்பனிடவும் ஓரிடத்தில் ஒன்றுகூடியிருக்கிறோம்!
கூடிக் கலையும் விழாவாக இல்லாமல், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, கருத்தாழமிக்க எண்ணங்களை பகிர்ந்து, கொள்கைகளைக் கூர்தீட்டும் நிகழ்ச்சியாக இது நடந்து கொண்டிருக்கிறது!
அதனால்தான், திராவிடக் ��ொள்கைகளை தூக்கிப் பிடித்து உழைத்தவர்களுக்கு மரியாதை செய்து, விருதுகள் வழங்குகிறோம்!
இந்த ஆண்டு, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான விருதைக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும் - நாடாளுமன்ற குழுத் தலைவருமான என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி பெற்றிருக்கிறார். அவர், பார்த்தால் கனிமொழி; நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை ம��ழி! திராவிட இயக்கத்தின் திருமகளாக - பெரியாரின் பேத்தியாக – பார்லிமெண்ட்-இல் ஒலிக்கிறார்!
அடுத்து, பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை நம்முடைய அண்ணன் சுப. சீதாராமன் அவர்கள் பெற்றிருக்கிறார். அரசு ஊழியராக இருந்த இவரை, “ராஜினாமா செய்துவிட்டுல் கழகப் பணியாற்ற வா” என்று நம்முடைய தலைவர் கலைஞர் அழைத்தார். எப்போதும் தலைவர் கலைஞரின் சொல்லைத் தட்டாத உண்மையான தொண்டர் அண்ணன் சுப. சீதாராமன் ���வர்கள்!
அடுத்து, தமிழினத் தலைவர் கலைஞர் பெயரிலான விருதை நூற்றாண்டு கண்டவரான அண்ணன் சோ.மா. ராமச்சந்திரன் அவர்கள் பெற்றிருக்கிறார்! மிசா காலத்தில் ஓராண்டு காலம் என்னுடன் ஒரே கொட்டடியில் இருந்தவர், அண்ணன் சோ.மா. ராமச்சந்திரன் என்பது எனக்குக் கிடைத்த பெருமை!
அடுத்து, புரட்சிக் கவிஞர் - பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலான விருதை மறைந்த அண்ணன் குளித்தலை சிவராமன் அவர்களது குடும்பத்தின��் பெற்றிருக்கிறார்கள்! கலைஞர் அவர்கள் முதன்முதலாகப் போட்டியிட்ட குளித்தலை தொகுதிக்காரர் அவர்! அவருக்கு சிறப்புச் செய்ய அறிவித்த இந்த விருதை, அவர் பெற முடியாமல் போயிருந்தாலும், நம் இதயங்களில் நிறைந்திருக்கிறார்!
அடுத்து, இனமானப் பேராசிரியர் பெயரிலான விருதை அண்ணன் மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். தலைவர் கலைஞர் இட்ட கட்டளைகளைத் தவறாமல் நிறைவேற்றிய செயல்வீரர் அவர்! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாமல் பாடுபட்டவர்! இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருப்பவர்!
அடுத்து, எனது பெயரிலான விருதை அண்ணன் பொங்கலூர் பழனிசாமி அவர்கள் பெற்றிருக்கிறார்! மொழிப் போராட்டம் உருவாக்கிய தளகர்த்தர்களில் ஒருவர்! கொங்கு வேளாளர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல���ல் சேர்க்க அவருடைய லெட்டர் பேடில்தான், 'கோரிக்கை ஏற்கப்பட்டது' என்று தலைவர் கலைஞர் தன் கைப்பட எழுதினார்.
அடுத்து, முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் பெயரிலான விருதைப் பெற்றிருப்பவர், மூத்த பத்திரிகையாளர் - எழுத்தாளர் - ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்கள்! திராவிட இயக்கம் வலியுறுத்தி வரும் சமூகநீதியை - மானுடப் பற்றை - மனித உரிமைச் சிந்தனைகளை - ஆங்கில ஊடகங்களில் எழுதி வருபவர் மரியாதைக்குரிய ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்கள்.
அதேபோன்று, கழகத்தின் வெற்றிக்கும் புகழுக்கும் அடித்தளமாக – ஆணிவேராக இருக்கும், ஒன்றியம் – பகுதி – நகரம் – பேரூர்க் கழகங்களில் சிறப்பாகப் பணியாற்றிய உடன்பிறப்புகளும் இங்கு விருது பெற்றிருக்கிறார்கள்.
விருது பெற்ற அனைவருமே ஒவ்வொரு விதத்தில் பெருமைக்குரியவர்கள். விருது பெற்ற அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பிலும் - கழக உடன்பிறப்புகள் சார்பிலும் - உங்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன்!
திறமை - உழைப்பு - அறிவு - ஆற்றல் - ஆகியவற்றை ஒருங்கே பெற்ற தீரர்களின் கோட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிநின்று, தமிழினத்தின் எழுச்சிக்காக, தமிழ்நாட��டின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்கிறவர்கள் நாம்!
2019-ஆம் ஆண்டுமுதல், நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். சாதாரண வெற்றி அல்ல; எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் 2026-இலும் நிச்சயம் தொடரும்! திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்!
நான் பெருமையுடன் சொல்கிறேன்... இந்தியாவில் ஆயி���க்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கிறது... எந்த இயக்கத்திலும் உங்களைப் போன்ற கொள்கை உணர்வுடைய தொண்டர்கள் இருக்க மாட்டார்கள்... இப்படி கடுமையாக உழைக்கவும் மாட்டார்கள்... “கழகம் நம்மைக் காத்தது! நாம் கழகத்தை காக்க வேண்டும்” என்று உழைக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழக��்தைத் தோற்கடிக்க முடியாது! உங்களுக்குத் தலைமை தொண்டனாக இருப்பது, என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பேறு!
உங்கள் உழைப்பைத் தொடர்ந்து கொடுத்து, திராவிடம் உயர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று 2026 தேர்தலிலும் நீங்கள் களப்பணியாற்ற வேண்டும்! அதன்மூலமாக, தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது என்று நாம் புது வரலாறு படைக்க வேண்டும்! வரலாறு படைக்கலாமா! தயாராகி விட்டீர்களா!
அதற்காகத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று ஒரு பரப்புரையை முன்னெடுத்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று - அனைத்து வீடுகளுக்கும் சென்று, ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை நம்முடைய இயக்கத்தில் ஒன்றிணைத்திருக்கிறோம்!
ஒரு கோடி குடும்பங்கள் நம்மை நம்பி இணைந்திருக்கிறார்கள் என்றால், அந்த நம்பிக்கைக்கு என்ன காரணம்? தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்! அதற்குத் துணையாக இருப்போம் என்று அவர்களும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது எந்தக் கொள்கை என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்... அது, காவிக் கொள்கை! இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்தக் கொள்கைக்கு எதிராக திராவிடம் – இந்த இயக்கம் போராடிக்கொண்டு இருக்கிறது! இன்றைக்கு அந்தக் கொள்கையின் அரசியல் முகம் - பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசுடன் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம்!
இரண்டு நாட்களுக்கு முன்புகூட, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன பேசியிருக்கிறார்? “கடந்த அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியதே பா.ஜ.க.தான்” என்று உண்மையைப் பேசியிருக்கிறார்! அந்தக் கைப்பாவை அரசை, தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறியத் தி.மு.க.தான் காரணம் என்று நம்மீது வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்! அதனால்தான், தொடர்ந்து நமக்கு இவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! அதைப் பார்த்து பயந்து முடங்கிவிடுவோம் என்று நினைத்தார்கள்...
தி.மு.க. – என்ன மிரட்டலுக்கு பயப்படுற கட்சியா? இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி, ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்க��் நாம்! 75 ஆண்டுகால ஹிஸ்டரி இருக்கிறது நமக்கு! அதற்குப் பிறகு, தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே - “தி.மு.க.வை அழிப்போம் – ஒழிப்போம்” என்று சொன்னார்கள்! இப்போதும், சிலபேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே... ”தி.மு.க.விற்கு நாங்கள்தான் மாற்று” என்று... என்ன மாற்றப்போகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப்போகிறார்கள���? நம்முடைய கொள்கைகளைவிடச் சிறந்த கொள்கைகளை யாராவது பேசுகிறார்களா? மாற்றம்... மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள்... மறைந்து போனார்கள்... ஆனால், தி.மு.க. மட்டும் மாறவில்லை! தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றைக்கும் மறையவில்லை! இதுதான் தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்! நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம்! நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது!
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, எவ்வளவோ நெருக்கடியில் வந்தோம்... ஒருபக்கம் நிதிப் பற்றாக்குறை, இன்னொரு பக்கம், கொரோனா பெருந்தொற்று, இதையெல்லாம் மீறி, நான்கரை ஆண்டுகளில் இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு, ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்த்து – வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் ஒரே மாநிலம் எது என்று ��ேட்டால், “தமிழ்நாடு” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் அளவுக்கு, முதன்மை மாநிலமாக முன்னேற்றி இருக்கிறோம்!
இதனால்தான், நம்முடைய திராவிட மாடல் அரசைப் பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது! வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். அவர்களின் க��்ணீர் - ஆட்டுக்காக ஓநாய் வடிக்கும் கண்ணீர்! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது எதையும் செய்யாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தெம்போ - திராணியோ இல்லாமல், அடிமை சாசனம் எழுதி கொடுத்தார். பா.ஜ.க தன்னுடன் இருக்கிறது என்று இப்போதும் வாய்த் துடுக்கோடு பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்த���, என்னை ஒருமையில் பேசிக்கொண்டு இருக்கிறார்! கொள்கையில்லாமல் தொடைநடுங்கும் பழனிசாமி அவர்களின் தரத்தை மக்களே எடை போட்டுக்கொள்வார்கள் என்று நானும் விட்டுவிட்டேன்!
ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க.-வை அடகு வைத்திருக்கிறார்! “திராவிடம் என்றால் என்ன?” என்று கேட்டபோது, அதெல்லாம் தனக்குத் தெரியாது என்று சொன்ன அவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை���் பொறுப்பில் இருக்கிறார். அதுதான் வெட்கக்கேடு அ.தி.மு.க. தொடங்கியபோது தங்களின் கொள்கை, ‘அண்ணாயிஸம்’ என்று சொன்னார்கள். அதை இப்போது பழனிசாமி அவர்கள் ‘அடிமையிஸம்’ என்று மாற்றி, ‘அமித்ஷாவே சரணம்’ என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார்.
“முழுமையாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு?” என்று கேட்பார்கள். அதைப்போ�� நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியைப் பார்த்து “காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?” என்று கேட்கிறார்கள்.
இதில் அவரின் தரம்தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா?
ஆனால், மக்களாட்சியில் மக்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் – கடமையும் நமக்கு இருக்கிறது! அதுவும், வெறும் சொல்லால் அல்ல; செயல்களாலும் திட்டங்களாலும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் - விடியல் பயணத் திட்டம் - காலை உணவுத் திட்டம் - புதுமைப்பெண் திட்டம் – தமிழ்ப்புதல்வன் திட்டம் - நான் முதல்வன் திட்டம் - மக்களைத் தேடி மருத்துவம் - இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 - ஊட்டச்சத்தை உறுதிசெய் - தோழி விடுதி - கலைஞர் கனவு இல்லம் - உங்களுடன் ஸ்டாலின் - நலம் காக்கும் ஸ்டாலின் - தாயுமானவர் திட்டம் – அன்புக்கர���்கள் என்று லிஸ்ட் பெரிதாக இருக்கிறது! இதன் பலன்களைப் பற்றி, நான் சொல்வதைவிட இதனால் பயன்பெறும் கோடிக்கணக்கான மக்களே தினமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!
அதுமட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகள் அனைத்தையும் துணிச்சலாக நேருக்கு நேராக எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம்! தொகுதி மறுவரையறை என்று சொன்னவுடனேயே, அதை எதிர்த்து நிற்கிறோம்! கவர்னரை வைத்து நம்மை முடக்க நினைத்தால், சட்டரீதியாக அதை எதிர்த்து நிற்கிறோம்! முக்கியமாக, மாநிலங்கள்தான் வலிமையான நாட்டுக்கு அடித்தளம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, மத்திய அரசு இல்லை; ஒன்றிய அரசு என்று அழுத்திச் சொல்கிறோம்!
இப்படி, போர��டிப் போராடித் தமிழர்களை - தமிழ்நாட்டை தலை நிமிர்த்துகிறோம்! இப்படி தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம்! அதனால்தான் சொல்கிறேன்... பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பட்டாளமே... தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே... தனிநபர்கள் தோன்றுவார்கள் - மறைவார்கள்; கட்சிகள் – வரும் போகும், ஆனால், தமிழ்நாட்டின் தனிப்பெருமை நிரந்தரமானது! தமிழ்மொழியின் சீரிளமை ���ிரந்தரமானது! நம்முடைய மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும்! இந்த தமிழ்மண்தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது! இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது!
டெல்லி நம்மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?
ஒன்றா – இரண்டா..?
இந்தி மொழியைத் திணிக்கிறார்கள்! நம் மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக் கூட விடுவிக்க மறுக்கிறார்கள்! கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள்!
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையையே பறிக்கிறார்கள்!
ஆனால், அந்நாளும் சரி - இந்நாளும் சரி - எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! ஆதிக்கத்துக்கு இங்கே நோ எண்ட்ரிதான��! திணிப்புக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! மொத்தத்தில் இங்கே பா.ஜ.க.வுக்கு நோ எண்ட்ரிதான்! ஏன் என்றால், இது பெரியார் – அண்ணா – கலைஞர் - செதுக்கிய தமிழ்நாடு!
மூன்று முறை ஒன்றியத்தில் தொடர்ந்து ஆட்சி அமைத்தும், தமிழ்நாட்டில் மட்டும் உங்களுடைய மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லையே... இன்னுமா எங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை?
இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்த முப்பெரும் விழாவை டி.���ி.யில் - சோஷியல் மீடியாவில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குச் சொல்கிறேன்... தலைமுறை தலைமுறையாக நாம் போராடி - எத்தனையோ பேர் உயிரையே தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகள் அனைத்தும், நம் கண் முன்னே பறிபோக அனுமத���க்கலாமா?
பா.ஜ.க.-வை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து, மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கித்தான் நகருவார்கள். ஏற்கனவே, காஷ்மீரில் அதற்கு ட்ரையல் பார்த்துவிட்டார்கள். எப்படி, இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்று ஒரு நிலை உருவானபோது, தமிழ்நாடு போராடி, மொழிப்போர் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியதோ, அதேபோன்று இப்போது ஒரு உரிமைப்போரை நடத்தி நாட்டைக் கா���்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது! இதை நாம் செய்யவில்லை என்றால் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? இதற்குப் போராடவில்லை என்றால் வேறு எதற்குப் போராடுவது? இதுதான் முக்கியம்! இந்தப் போராட்டத்தில் முன்கள வீரனாக உங்களுடன் 23 வயதில் எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயிலுக்குச் சென்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்!
இந்த மேடையில் நின்று உறுதியோடு ��ொல்கிறேன்...
நம்முடைய தாய்மார்கள் – சகோதரிகள் – உழவர்கள் – இளைஞர்கள் – உழைப்பாளர்கள் என்று அனைவரின் நலனையும் காக்கத் தொடர்ந்து உழைப்பேன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் – ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையானதை, தொடர்ந்து ��ார்த்துப் பார்த்து செய்து கொடுப்பேன். நமக்குத் துணையாக தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் விதைத்த இனமான உணர்வு இருக்கிறது! எட்டுக் கோடித் தமிழ் மக்களின் ஆற்றலும் ஆதரவும் நமக்குப் பக்கபலமாக இருக்கிறது! இதே உறுதியுடன் போராடுவோம்!
இப்போது நாம் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு கட்சிக்கான போராட்டமோ - முதலமைச்சர் என்ற பொறுப்புக்கான போராட்டமோ - ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டமோ அல்ல! இது தமிழ்நாட்டுக்கான போராட்டம்! இதற்குத் தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும்!
இந்தக் கரூர் மண்ணில் நின்று, தந்தை பெரியார் பிறந்தநாளில் உரக்கச் சொல்வோம்... “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!” டெல்லிக்குக் கேட்பது போன்று, அனைவரும் சேர்ந்து சொல்ல வேண்டும். “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!”, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!”, “தமிழ்ந���ட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!”. “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”. விடைபெறுவதற்கு முன்னர், அனைத்து தோழர்களுக்கும் அன்பான வேண்டுகோள்! பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் உடன்பிறப்புகள் அனைவரும் உங்கள் ஊருக்கு, வீட்டுக்குப் பத்திரமாக திரும்ப வேண்டும். அதிவேகப் பயணங்கள் வேண்டாம். பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்…
நன்றி! வணக்கம்!
#முப்பெரும்விழா2025