தமிழில் பிறமொழிக் கலப்பின்றி எழுதும் வழக்கத்தைத் தொடங்கி, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தமிழறிஞர் மறைமலை அடிகள் என்று, அவருடைய பிறந்தநாளில் புகழுரை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களே, தான் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளதுதான் பெருங்கொடுமை. பிறமொழி கலவாது மறைமலையடிகள்
தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்! ஆம், சரிதான். ஆனால் நீங்கள் எதற்கு வழிகாட்டியாக திகழ்கிறீர்கள் முதல்வர் அவர்களே? தமிங்கலம் பேசுவதற்கா?
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடுமொழியாக்க நீங்கள் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்தது வரவேற்கத்தக்கதுதான்! ஆனால், உங்கள் ஆட்சியில் தமிழ்த்தெருவில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க காலக்கெடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே? அதை எப்போது நிறைவேற்றப்போகிறீர்கள்?
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஒலிக்கத்தான் உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், உங்களுடைய அரசு நினைத்தால் இப்போதே தமிழ்நாட்டிலுள்ள தெருக்களில் தமிழில் பெயர்பலகை வைக்க முடியும்.
தற்போது, உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், உடனடியாக தமிழ்நாட்டு தெருக்களில் தமிழில் பெயர்பலகை வைப்பதை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)
இனஅழிவின்போது என்னுடன் கரம்கோர்த்து, இன விடுதலைக்கான அரசியல் பெரும் பயணத்தில் என் தோளுக்குத் துணையாக நிற்கும் முன்களத் தளபதி!
தன்னுடைய எழுத்தாளுமை, பேச்சாற்றல், களச்செயல்பாடு என எல்லா திறன்களையும் கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட ஆற்றலாளன்!
தனது அன்பொழுகப் பழகும் பாங்காலும், அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையாலும் எல்லோரது அன்பையும் பெற்ற பண்பாளன்!
எப்போதும் என்னுடைய எண்ணவோட்டமறிந்து, செயல்திறன் ஆற்றும் அன்பு இளவல்!
என்னுடைய உயிர்க்கினிய உடன்பிறந்தான்!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்,
ஆருயிர் தம்பி வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்களுக்கு என்னுடைய அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
@manisenthilntk
ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க,
அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி,
இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்!
தான் உயிரோடு இருந்த நாள் வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற தன்னிகரில்லா படைத்தளபதி!
தாயகம் காக்க விடுதலை நெருப்பாய் வெடித்துச் சிதறிய மாவீரன் சுந்தரலிங்கனாரின் இணையில்லா வீரத்தையும், ஈடில்லா ஈகத்தையும்
போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று தாய்மண்ணைக் காப்போம் என்ற உறுதியினை ஏற்போம்!
வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!