காவிரி விவகாரத்தில் இருந்து திசைதிருப்ப #Delimitation பிரச்சனையை கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு! #FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக.அப்போது ‘விசில் கோலம்’போட்டுக்கொண்டு இருந்தவர்கள்இப்போது திமுகவிற்கு‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்!
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
எதிர்க்கட்சித் தலைவர் இளந்தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் மீதான தவெக அரசின் அராஜக கைது நடவடிக்கையைக் கண்டித்து கல்லக்குடியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கழக தொண்டர்களுடன் நான் கலந்து கொண்டேன்
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது @The_Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.
ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!
https://t.co/6ZAHjmuhJr
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
The DMK strongly condemns the police lathi-charge on the youth of this Nation guided by Cockroach janata Party who attempted to march towards Parliament.
The youth of the Cockroach Janata Party have been staging a continuous peaceful protest at Jantar Mantar in New Delhi for the past month, demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan, holding him accountable for the irregularities in several examinations, including NEET. With the Monsoon Session of Parliament commencing today, the protesters attempted to march towards Parliament. In response, the authorities unleashed repression, with the police carrying out a brutal and indiscriminate lathi-charge.
Those who were peacefully exercising their democratic right to protest have been subjected to an abuse of state power. Voices raised against injustice and in defence of rights can never be silenced through repression.
The Union Government is attempting to suppress what has become a major youth-led movement in the national capital through the use of tear gas, internet shutdowns, and the closure of metro stations.
May the students' struggle for education and justice prevail!
May the NEET examination, which continues to claim the lives and future of students, be abolished once and for all!
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW#47_Years_of_DMKYW@mkstalin@Udhaystalin
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் M. K. Stalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் DMK Youth Wing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சிறுகளப்பூர் கிராமத்தில் தனது ஆட்டுப்பட்டிக்கு சென்ற பெண் மர்மமான முறையில் கை கால் கட்டப்பட்ட நிலையில் கொடுரமாக கொலை செய்யப்பட்டு ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இதுதான் உங்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பா????
பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை என்று கூறி ஆட்சிக்கு வந்த விஜய் அவர்களே நீங்கள் பதவியேற்ற நாளில் இருந்ரு தமிழ்நாட்டில் தினமும் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டு இருக்கிறது அதன் தொடர்ச்சியாக இலால்குடி சட்டமன்ற தொகுதி புள்ளம்பாடி ஒன்றியம்
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel