People's welfare, agricultural progress and healthcare advancement! With ₹210.14 crore for government medical infrastructure, ₹5.25 crore in farmer relief and ₹10 crore for mental health facilities, CM @TVKVijayHQ initiatives focus on building a prosperous Tamil Nadu.
#TVKForTN
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (23.11.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், காஞ்சிபுரம் , ஒரகடத்தில் உள்ள PSP மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026–27 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்காக நடைபெற்ற White Coat Ceremony விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.!
மருத்துவப் பணியில் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.J.முனிரத்தினம் அவர்கள், மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் தலைவர் திரு.P.சுப்பிரமணி அவர்கள், துணைத் தலைவர் திரு.S.பிரியதர்ஷன் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் S.ஸ்ரீனிவாசன் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி தொகுதி TVK சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது கூறப்படும் முறைகேடான நடத்தை தொடர்பாக, பெண் IAS அதிகாரி தலைமைச் செயலாளரிடமோ அல்லது வேறு எந்த அரசு அதிகாரியிடமோ இதுவரை புகார் அளிக்கவில்லை என்று மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கறிஞர் ஆர். திரிசூலி தாக்கல் செய்த குற்றவியல் ரிட் மனுவின் விசாரணையின்போது இந்தத் தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தனது புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யத் தமிழகக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், "சட்டமன்ற உறுப்பினர் அந்தப் பெண் IAS அதிகாரிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? இதற்கு உங்களிடம் உள்ள உறுதியான ஆதாரம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "நீங்கள் செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், என்னால் அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாது" என்று நீதிபதி தெரிவித்தார்.
"ஒரு பெண் IAS அதிகாரியால் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறீர்களா?" என்றும் நீதிபதி மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
. "மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காதபோது, காவல்துறை எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
. இதையடுத்து, பெண் IAS அதிகாரியிடமும் தமிழகத் தலைமைச் செயலாளரிடமும் மீண்டும் ஒருமுறை விசாரித்து, புகார் தொடர்பான தகவல்களைச் சரிபார்க்குமாறு மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யனிடம் நீதிபதி கேட்டுக்கொண்டார்.
. இந்த விசாரணையின் முடிவுகளை அடுத்த நாள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
. பெண் IAS அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் மீண்டும் சரிபார்த்து தகவல் தெரிவிக்க வேண்டியிருப்பதால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
#TVK