நாடு போற்றும் அறிவும், மக்கள் போற்றும் அன்பும், பதவிகள் வந்த போதெல்லாம் பணிவும் நிறைந்த இந்தியாவின்
மேனாள் குடியரசுத் தலைவர்,
பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழை வணங்குகிறேன்.
“கனவு காணுங்கள்; அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்” என்ற
அவரது உயரிய சிந்தனை,
இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
அவரது எளிமை, தேசப்பற்று, அறிவியல் பங்களிப்பு மற்றும் இளைஞர்கள் மீதான நம்பிக்கை என்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.
@AIADMKOfficial
அடிச்சி ஓட விடுங்க அண்ணா @DrVpb இந்த வீணாப்போன தண்டங்கள
வெறும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துட்டு AC - யில் படுத்துறங்கும் காம சக்திக்கு எப்படி ஏழையின் வலி தெரியும்?
நேற்று காஞ்சிபுரம் குன்றத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் அண்ணன் பழனி Ex. MLA தலைமையில் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் V. சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த Script ஐ முழங்கி தள்ளியுள்ளார்.
என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அள்ளி தந்த கவர்ச்சி வாக்குறுதிகளை மீண்டும் ஒருமுறை வாக்குறுதியாக கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மீண்டும், மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, "தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என்று அநாகரீகமாக பேசுவது போன்ற தனது Trademark பேச்சுக்களையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.
நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதல்வருக்கு, தன்னை பார்க்க வந்து இறந்தவர்களுக்கோ அவரது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கேட்க கூட மனது வருவதில்லை. மாறாக, தங்களை நம்பி மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வரும் மக்களை உசுப்பேத்தி ரசிக மனநிலையிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
மேலும், தீர்ந்து போன சக்தியில் இருந்து குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வர் அவர்களே, Party Fund பற்றி பேசினால் திமுக ஓடுவது உண்மைதான். ஆனால், உங்கள் Party யினர் செய்யும் முறைகேடுகள் நாளொறு வண்ணம் செய்திகளில் வருவதை நீங்கள் பார்ப்பதில்லையோ!? முடிந்தால் பாருங்கள்..
நடிகரை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்டபம், உறவினர்களுக்கு அரசு வேலை.
What bro, it's very wrong bro!!
#(ஏ)மாற்றம்
தமிழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்களின் கனவு பறிபோகும் விதமாக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதால் 600 MBBS இடங்களை இழக்கிறார்கள் தமிழ்நாடு மாணவர்கள்.
திமுக ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், தவெக ஆட்சி அமைத்த இரண்டு மாதங்களில் இதனை தடுத்திருக்கலாம். அல்லது மாற்று வழியாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எப்படி தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க ஒப்புதல் அளித்து, அதில் 50% இடங்களை அரசிற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் செயல்படுத்தினாரோ, அதே போல நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாடு அரசிற்கு குறிப்பிட்ட சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திருக்க வேண்டும். ஆனால் இதனையும் தவெக அரசு செய்ய தவறிவிட்டது.
ஆகவே, @AIADMKOfficial பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் போல தனித்துவமாக 7.5% உள் இட ஒதுக்கீடு, ஒரே ஆண்டில் 11 மருத்துவமனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்து மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியாவிட்டாலும் அந்த மருத்துவ இடங்களை தக்க வைக்க கூட முடியாமல் மாற்று கட்சிகளையே குறை கூறி கொண்டிருந்தால் என்ன சொல்வது.
ஆகவே, தவெக அரசு எங்களது கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தபடுவது தொடர்பாக வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில் வலியுறுத்துகிறோம்.
#MBBS #MedicalCollege #DeemedUniversity
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சட்டமன்றத் தொகுதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதால், இன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தத் தகவலைக் கட்சி தலைமையிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துவிட்டேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களால்தான் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன்.
யாரும் எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம். சுடுகாட்டுக்குச் சென்றாலும் செல்வேனே தவிர, மாற்று இயக்கத்திற்குச் செல்ல மாட்டேன்.
- ஆற்காடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. @ADMKRanipet அவர்கள்