பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு.
உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.
எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!
#Parliament #MekedatuDam #Cauvery #DeltaFarmers #DMK
அண்மையில் மறைந்த கரிசல் இலக்கிய முன்னோடி - நவீன தமிழிலக்கிய ஆளுமை திரு. பூமணி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
நாகர்கோவில் கிளை சிறையில் காவல்துறையினரின் வன்முறையால் உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இந்த காவல் மரணம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்த பின்னும், முதலமைச்சர் அவர்களிடமிருந்து எந்தவொரு விளக்கமோ அறிக்கையோ இன்னும் வரவில்லை. எந்தவொரு அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டிருக்கும் அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கூட இந்த அரசு முன்வரவில்லை. மொத்தத்தில், எப்போதும் போல இப்பிரச்சனையிலும் பொறுப்பேற்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
ஊழலுக்கு எதிராக பதிவு போட்டா
கைது பண்ணுவிங்களோ
உங்க கொள்கை எதிரியோட
எந்த வகைல எல்லாம் கூட்டு வச்சு இருக்கிங்க
உங்க உறுப்பினர்கள் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம்
அந்த கொள்கை எதிரிக்கு
எப்படி போச்சுனு எக்ஸ்போஸ் பண்ணுறோம்
கைது பண்ணிக்கோங்க
சிஎம் அங்கிள் TVK Vijay
#TVKLies
#TVKVijayFails
#CMVijayFails
#TVKFails
#DMK4TN
இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் - புளியங்குளம் ஊராட்சிக்குட்பட்ட எம். அரசன்குளம் கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-26 கீழ், ரூ. 53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்தேன்.
முன்னாள் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk , சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam , தூத்துக்குடி மாநகர மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் நிகழ்வில் உடன் பங்கேற்றனர்.
இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி - வேப்பலோடையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
முன்னாள் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk , சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam , தூத்துக்குடி மாநகர மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் நிகழ்வில் உடன் பங்கேற்றனர்.
@KanimozhiDMK#கல்வி_வளர்ச்சி_தினம்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான கல்வி கண் திறந்த
கர்ம வீரர் அய்யா #காமராஜரின்,
பிறந்த தினமான #ஜூலை_15
இன்று, "
கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.🙏🙏🙏
புகழ் வணக்கம் அய்யா 🙏
தமிழ் மக்களின் உயர்வுக்கு உழைத்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
அனைவரும் கல்வி கற்க விதையிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அவரது பிறந்தநாளில், அவராற்றிய அரும்பணிகளைப் போற்றி வணங்குகிறேன்.
@mkstalin#கல்வி_வளர்ச்சி_தினம்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான கல்வி கண் திறந்த
கர்ம வீரர் அய்யா #காமராஜரின்,
பிறந்த தினமான #ஜூலை_15
இன்று, "
கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.🙏🙏🙏
புகழ் வணக்கம் அய்யா 🙏
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.
பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்.
உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.
காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது வழியிலான நமது #DravidianModel அரசிலும்,
*காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்,
*பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை,
*திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர்
எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!
@Udhaystalin#கல்வி_வளர்ச்சி_தினம்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான கல்வி கண் திறந்த
கர்ம வீரர் அய்யா #காமராஜரின்,
பிறந்த தினமான #ஜூலை_15
இன்று, "
கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.🙏🙏🙏
புகழ் வணக்கம் அய்யா 🙏
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தமிழ்நாடெங்கும் மூடப்பட்ட 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, மதிய உணவு திட்டம் - இலவச சீருடை - பாடப்புத்தகங்கள் என கல்வி வளர்ச்சிக்கும்,
தொழில்துறை வளர்ச்சி - அணைகள் உருவாக்கம் என தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் காமராசர் ஆற்றிய பங்களிப்புகள் மகத்தானவை.
சென்னை மெரினா சாலைக்கு காமராசர் அவர்களின் பெயரை சூட்டியது - குமரியில் நினைவு மண்டபம் அமைத்தது - காமராசரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைமுறைப்படுத்தியது என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காமராசருக்கு பல்வேறு பெருமைகளைச் சேர்த்தார்கள்.
கலைஞர் அவர்கள் வழியில், நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள், நம் திராவிட மாடல் ஆட்சியின் போது, காமராசர் கல்லூரி மேம்பாட்டுத்திட்டம், பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்ததற்காக காமராசர் அவர்களுக்கு திருவுருவச்சிலை - திருச்சியில் காமராசர் பெயரில் மாபெரும் அறிவுலகம் என காமராசரின் புகழை மென்மேலும் போற்றினார்கள்.
கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
#Kamarajar
குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்.
தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!
#DravidianModel அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!
மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!
வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!
#தென்காசி #மலையடிப்பட்டி
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
#நீதி_வேண்டும் #Custodial_Death
நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் என்பவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
காவல்துறையினரின் வன்முறைக்கு உள்ளாகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் அந்த இளைஞர் உயிரிழந்திருப்பதாக அவரது உறவினர்கள் கூறுவது, இது காவல் மரணமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இம்மரணத்திற்குப் பொறுப்பேற்று, இதில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?