கைது பண்ணா திமுகவை முடக்கிட முடியுமா? இன்டர்நேஷனல் கிரிமினல் மாரி 200 போலீஸ் விட்டு அரெஸ்ட் பண்றாங்க என் மேல பயமா??? இல்ல பயமுறுத்த பாக்குறீங்களா?
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. G. V. Markandayan Mla அவர்கள் பேட்டி.
#DMK#vilathikulam#thoothukudi#gvmforvkm
நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு,சென்னை மெரினாவில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மாண்புமிகு.எதிர்க்கட்சித் தலைவர்,கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
#KalaignarForever
நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நினைவு தினத்தில் அன்னாரின் புகழை போற்றி வணங்குவோம்.
#dmk#kalaingarforever#vilathikulam
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக சுமார் 50 ஆண்டு���ள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 19 ஆண்டுகள், சட்டப்பேரவை உறுப்பினராக சுமார் 60 ஆண்டுகள் பணியாற்றியவர். பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். கணினிப் புரட்சியை இந்தியாவில் முதன்முதலாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர். மேம்பாலங்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பியவர். மாபெரும் தலைவர்களுக்கு அழகிய நினைவுச் சின்னங்களை அமைத்தவர்.
இவ்வாறு எண்ண��்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்திய போது...!
#கலைஞர் #kalaingar
நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8 வது ஆண்டு நினைவு நாளன்று கலைஞரின் நீங்காத நினைவுகளுடன் அவர் காட்டிய திசை நோக்கி என்றும் எங்கள் பயணம் தொடரு���்...
#Kalaingar #கலைஞர்
இன்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில��� வைத்து நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாநகர கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகள் வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய கழக பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிய போது...!
#DMK
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்கள் மீது ஆளும் #தொடைநடுங்கி_அரசு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்து, தூத்துக்குடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் என்னுடன் இணைந்து பங்கேற்று கைது செய்யப்பட்டு, காலை முதல் மாலை வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடக்குமுறைகளால் ஒரு இயக்கத்தையும் ஒருபோதும் முடக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம்.
திராணியற்ற, மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த ஆளும் #தொடைநடுங்கி_அரசு , பொய் வழக்குகள், கைது நடவடிக்கைகள், மிரட்டல்கள் போன்ற அடக்குமுறைகளை ஏவி நமது குரல்களை அடக்கிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறது. அவற்றைக் கண்டு அஞ்சாமல் நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
"ஜனநாயகன்" படத்திற்கும் இன்று என்ன Reels எடுக்கலாம் என்று அக்கறை காட்டும் இந்த #reelsmodel அரசிற்கும், அரசின் பிரதிநிதிகளுக்கும் ஜனநாயகத்தின் மீது அக்கறை என்று வரப்போகிறது...?
கைது செய்��� காட்டும் ஆர்வத்தை கொஞ்சமாவது மக்கள் நலனிலும் காட்டுங்க CM சார் ...! @actorvijay
#TVKFails #DMK #Udhaystalin
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம்.
என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்!
#Kalaignar
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு ��ேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல��� செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்��்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போ��் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல�� கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், த���ிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin @arivalayam
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்ற��் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்!
காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’!
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும�� விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்க��களை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
இன்று சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி - எழும்பூர் வடக்கு பகுதி சார்பில், தலைவர் கலைஞர் அவர்களின் 8வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற “போர��ளி ஓய்வதில்லை��� பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. @PKSekarbabu , கழக மகளிர் அணிச் செயலாளர் திருமிகு. ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் திருமிகு. நாமக்கல் ராணி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தொகுதி மறுவரையறை குறித்தும், காவிரி - மேகதாது அணை பிரச்சனையை திசைதிருப்ப தவெக செய்துவரும் அரசியல் நாடகம் குறித்தும் விளக்கிய போது.
Participated in the launch of The People’s Sanctum: The 100-Year Struggle to Democratize Temples in India by Thiru. @manuraj1983 at the historic Victoria Public Hall, Chennai, today.
The book weaves together the history of the ancient Chola dynasty, the Vaikom struggle, the role of the Constitution, and the ideas of the Dravidian movement in shaping the journey towards breaking barriers to the sanctum and advancing the Madras Model of secularism. It offers an insightful account of the larger project of democratizing temples in India and the long struggle for social justice and equality.
My best wishes to Manuraj for this important work.