த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.
திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர்.
அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா?
முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?
முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?
புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
12 மணிக்கு வப்பாட்டி வீட்டுக்கு போயிட்டு வரும் போது தற்குறிக்கு இவரு பேசுனது ஞாபகம் வந்து காலையில் 5 மணிக்கு போய் இவரு வீட்டுல போய் நின்னுருக்காங்க எவல்துறை 😂
BREAKING | தவெக ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக பொருளாதார நிபுணர் கலையரசன் கைதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
#SunNews | #TVK | #Kalaiyarasan | #MKStalin
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
இன்னும் எத்தனை கொலைகள் நடக்கும் இந்தக் கோமாளிகள் ஆட்சியில்?
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்னும் பெண்ணை மர்ம நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம், இந்த ஆட்சியில் மக்களுக்கு இனி எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதையே உணர்த்துகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4 நாட்களில் 7 கொலைகள் நடந்திருப்பதற்கு காவல்துறை மற்றும் அதனை கையில் வைத்திருக்கும் டம்மி முதலமைச்சரின் தோல்வியே காரணம்.
அடிக்கடி சாலைகளில் டாடா காட்டும் முதலமைச்சர், சட்டம் ஒழுங்கிற்கும் ஒரேயடியாக டாடா காட்டிவிட்டதால், ரவுடிகள் Casual-ஆக கொலை செய்துவிட்டு டாடா காட்டி தப்பிக்கின்றனர்.
பழிவாங்கவும் - பழிபோடவும் ஆளாய் பறக்கும் இந்த அரைவேக்காடு ஆட்சியாளர்கள், மக்கள் பலியாவதை எப்போது தடுப்பார்கள்? Dummy CM சொன்ன Efficient Officers எல்லாம் எங்கே போனார்கள்?