பட்டாசு vs சாராயம்.
இந்து மத பண்டிகையான தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் சிவகாசியில் உள்ள 8.0 லட்சம் குடும்பங்களுக்கு சில ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் , ஆனால், பட்டாசு வெடித்தால் சுற்றுசூழல் மாசுபடும் என அனைத்து FM சேனல்களிலும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் செய்து வருகிறது. பள்ளி மாணவர்களை மிரட்டி பசுமை தீபாவளி என மரக்கன்ற��� நட செய்கிறது சனாதன ஒழிப்பு திராவிட மாடல் அரசு.
இதுவே, தீபாவளி அன்று சாராயம் குடித்தால் உடல்நலம் பாதிக்கபடும் என விளம்பரம் செய்யாமல் இருப்பது ஏன் ? திமுக பொருளாளர் பாலு, திமுக எம்பி ஜகத்ரட்சகன் குடும்பம் என ஒரு சில திமுக குடும்பங்களுக்கு பல நூறு கோடி லாபம் கிடைக்க வேண்டுமே, இதற்காக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவலர்களை பணியில் அமர்த்தி சாராயம் விற்கிறது திராவிட மாடல் அரசு.
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இரு��ருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இது போன்ற விருதுகள் மேலும் உத்வேகத்தை அளிக்கும். ஆசிரியர் பணியில் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்!
தாய்க்கு பெயரிட பாக்கியம் பெற்ற தனையன் நம் அரசியல் பேராசான் பேரறிஞர் அண்ணா நம் மாநிலத்துக்கு "தமிழ்நாடு" என்று பெயரிட்ட நாள் இன்று.
இத்திருநாளில் பேரறிஞரின் புகழும் தமிழின் ��ுகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும். #தமிழ்நாடு_நாள்
கேரள மாநிலத்த��ன் முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திரு.உம்மன் சாண்டி காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
அண்டை மாநில முதல்வர் என்ற வகையில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் நட்பு கொண்டிருந்தவர் உம்மன் சாண்டி அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைச் சந்தித்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று விரும்பியவர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி அவர்களின் மறைவு கேரள மாநில மக்களுக்கு மட்டுமின்றி, தென்மாநில மக்களுக்கும் பேரிழப்பாகும்.
உம்மன் சாண்டி அவர்களை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். #OommenChandy