பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய திருமதி. ஜானகி அவர்கள், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர்.
தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது.
இன்று கரூரில் மேடை…
இல்லை இல்லை… 41 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட இம்சை அரசன் வண்டியில் ஏறிய இன்றைய முதலமைச்சர், “கூட்டுக் களவாணிகள்” என்ற தரங்கெட்ட சொல்லை பயன்படுத்தியுள்ளார்.
யார் கூட்டுக் களவாணிகள்?
திமுக-வை எதிர்த்து 234 தொகுதிகளிலும் களம் கண்டு, இன்று வரை தனித்த அடையாளம் கொண்ட எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்களா?
அல்லது, திமுக-வின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீங்களா?
“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்?
ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பிம்ப முதல்வர் தான் நீங்கள்!
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் எத்தனை மக்களை சந்தித்தீர்கள்? மக்களுக்கான அரசியல் என்று என்ன பேசினீர்கள்?
குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல கூட அல்ல- மிட்டாய்க்கு அடம் பிடிப்பது போலவே அடம் பிடியுங்கள் என்று கூறி தவறான வழியில் வாக்கு கேட்ட நீங்கள் எல்லாம் பேசலாமா?
கரூர் துயரம் நடந்த போது “ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? விழுப்புரத்தில் முன்பொரு முறை பார்த்த உங்கள் ஓட்டத்தை திருச்சி விமான நிலையத்தில் தமிழகமே பார்த்ததே?
கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியா ஆடியோ லாஞ்ச் மேடையில் “Blastu Blastu” என்று போட்டீர்களே… அது என்ன “ஜனநாயகக் குத்தாட்டமா?” மக்கள் துயரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் குத்தாட்டம் போட்ட நீங்கள் எங்களைப் பற்றி பேசுவதா?
@AIADMKOfficial மக்கள் நலத் திட்டங்கள் வழங்குவதில் ISI முத்திரை கொடுக்கும் அளவிற்கு மக்களுக்கு அள்ளிக் கொடுத்த பொன்விழா கண்ட இயக்கம்.
டயருக்கு அடியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கெல்லாம் எங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை!
“ஊரிலேயே நான் மட்டும் தான் ஒரே உத்தமன்” என்பது போல பிரசங்கம் செய்யும் இன்றைய முதலமைச்சர், அவ்வளவு பெரிய உத்தமராக இருந்தால், தனிப் பெரும்பான்மை இல்லாத, திமுக-வின் தயவில் அமையும் ஆட்சி எனக்கு தேவையில்லை என்று உதறிவிட்டு மறு தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? அதற்கு வக்கில்லாதவருக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு?
அதுவும் இன்றைய உரையில் ஒரு முதலமைச்சர் பேசக்கூடாத மொழியில் அவர் பேசுகிறார் . வெட்கக்கேடு!
இது தான் மக்களுக்கான அரசியலா?
இதனால் மக்களுக்கு எதாவது நன்மை இருக்கிறதா?
நீங்கள் கரூரில் “ஓடு ஓடு ஓடு” என்று பாடிக்கொண்டிருந்த வேளையில், ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முக்கிய முதலீடு தமிழ்நாட்டை விட்டு போனதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதைப் பற்றி எதாவது பேசுவீர்களா?
நாள்தோறும் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என மக்கள் அவதிப் படுவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவீர்களா?
அதெல்லாம் இல்லை.
@CMOTamilNadu அவர்களே- எதிரிகளே இல்லை என்று 6 மாதத்திற்கு முன்னால் சொன்ன கட்சி இன்று தோல்வியை சந்தித்து எதிர்கட்சி வரிசையில் இருக்கிறது.
நான் எப்போதும் சொல்வது போல, காலச்சக்கரம் சுழலும்- இன்று கீழே இருப்பது நாளை மேலே வரும்!
(Or in Your Words, “வாழ்க்கை ஒரு வட்டம்!”)
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்!
ஆட்சி இருக்கும் ஆணவத்தில் தரம் தாழாதீர்கள்!
மக்கள் பகுத்தறிந்து பார்த்தால் இந்த ஆட்சி இமைப் பொழுதில் பல்லிளித்து விடும்!
We are waiting..!!
(பி.கு. : #KarurTragedy வழக்கில் நீங்கள் சொல்வது மட்டுமே வேதவாக்கு அல்ல. CBI விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அதன் உண்மைகள் எல்லாம் வெளிவந்த பிறகு எது யார் தவறு என்பதெல்லாம் மக்களுக்கு புரிய வரும். அதுவரை, Wait and See!)
"அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட, சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம்"
என வீரமுழக்கமிட்டு,
ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளைத்
தன் நெஞ்சில் தாங்கி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன். @AIADMKOfficial
பள்ளிக்கூடங்களில் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டியளித்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், இன்று கரூரில் முதலமைச்சர் பேசிய வீடியோவை, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட டிஜிட்டல் வகுப்பறைத் திரைகளில் ஒளிபரப்புவது கீழ்த்தரமான செயல்.
தொடர்ந்து பள்ளிக்கூடங்களை அரசியல் கூடங்களாக மாற்றும் த.வெ.க-வின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை,கரூர், திருச்சி கிழக்கு, ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களின் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் விஜயின் செயல்கள் கடை தேங்காய் எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி உள்ளது!!
- முன்னாள் அமைச்சர் திரு. @djayakumaroffcl அவர்கள்
இருள் கவ்விய இளைய நெஞ்சங்களில் எல்லாம் நம்பிக்கை தீபங்களை ஏற்றி வைத்த ஆசான் வலம்புரி ஜானின் நினைவு நாள் இன்று!
எல்லா இரவுகளும் விடிகின்றன!
#வலம்புரிஜான்#ValampuriJohn
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
AIADMK, PMK, BJP, AMMK - All counting agents be alert and do not leave until 4 pm
Many seats will go until final rounds, many seats will be decided by 1000 votes or less.
Each seat matters.
I am not part of counting agents. But this time counting agents role is very very important especially in tight corner seats
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும்; கண்துஞ்சாது அயராது தேர்தல் பணியாற்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
வாக்கு எண்ணிக்கை முடியும்வரை மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் அயராது பணியாற்றிட வேண்டுகிறேன்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி நமதே!
#அண்ணாதிமுக_WINNING!
#நல்லாட்சி_COMING!
@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் எனக்காக பணியாற்றிய அதிமுக நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
- அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
@RajBhalajioffl
#Sivakasi | #KTRajendrabalaji | #Election2026 | #TNelection | #NaalaiNamadhe | #NaalaiNamadheTn |
நன்றி..நன்றி.. நன்றி
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களுக்கும்,
தேர்தல் பணியாற்றிய தொகுதி பொறுப்பாளர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், வழக்கறிஞர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட கழக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும்,
மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
-------------------------------
டாக்டர்.பா.சரவணன் M.D.,
கழக மருத்துவ அணி இணைச்செயலாளர்