அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தெரு தெருவா கத்தி கத்தி சொன்னாப்ல சீமான் அண்ண.. ஒருத்தனும் கேட்கல.. அது இப்போ அப்படியே நடக்குது😭😭😭😤😤
அரசியல் ஆசான் சீமான். 🙏
"10 லட்சம் கோடி ரூபாய் மொத்த நிலுவைக் கடன்" - வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர்.
சன் நியூஸ் செய்தியை எல்லாம் நம்ப மாட்டோம் என துள்ளும் அணில் குஞ்சுகளே..
இது புதிய தலைமுறை செய்தி. பெண்களை உங்க கட்சி ஆளு மதிக்கற லட்சணம் இதுதானா?
'இதையும் நம்ப மாட்டோம். BBC, CNN, Al Zazeera சொன்னாத்தான் நம்புவோம்'னு உருட்ட போறீங்களா?
இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்த தவெக திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் கைது…
ஈவ்டீசிங் என்ற வார்த்தையு மறந்தே பல வருசமாச்சு தவெக வால் புத்துயிர் பெற்று இருக்கு ..
செம்ம மாற்றம் 🔥🔥🔥🔥
Breaking
திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
முதல்வர் விஜய்யின் ஆளும் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது
ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்து வருகிறது
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை -
தவெக ஒன்றிய செயலாளர் கைது
பேருந்திற்காக காத்திருந்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் கைது
Time Changes 🤯
Remember the viral sadhu who stood in front of a water cannon during the Nabanna Abhiyan in 2024?
Today, CM Suvendu saw him, hugged him, and later asked his colleagues to take care of his health 🥹
Suvendu Adhikari doesn't forget. 🧡
மாம்பழ விவசாயிகளின் பக்கம் மனசு வையுங்கள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே!
சென்ற வாரம் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்ட மாம்பழ விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் மாம்பழங்களுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால் டன் கணக்கில் மாம்பழங்களை சாலைகளில் கொட்டி தங்களது ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தினார்கள். அதேபோல் இன்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விலை வீழ்ச்சியால் மாம்பழங்கள் குப்பையில் கொட்டப்பட்டிருக்கின்றன.
இம்முறை இப்பகுதிகளில் நல்ல மழை பெய்த காரணத்தால் விளைச்சல் அதிகமாகி விட்டது. இந்த சூழ்நிலையை தனியார் மாம்பழக் கூழ் ஆலைகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அடிமட்ட விலைக்கு மாம்பழங்களைக் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கும் கடுமையான நிதி நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர்.
கடன் வாங்கி, கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களின் விலை மதிப்பு, அதன் பறிப்புக் கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என கண்ணீர் வடிக்கும் மாம்பழ விவசாயிகளின் வேதனையை முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சற்று கருணையுடன் அணுக வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள், உடனடியாக மாம்பழ விவசாயிகளின் பக்கம் கவனத்தை செலுத்தி மாம்பழங்களுக்கான உரிய விலையை நிர்ணயித்து அவர்தம் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக் காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். திமுகவின் ஆட்சியில் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட தம்பி அஜித்குமாரின் படுகொலைக்கு எதிராக அன்றைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், அதே திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தம்பி ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகாஷ் குற்றமிழைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்வதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என மேடைதோறும் பேசிவிட்டு, திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வெட்கக்கேடானது இல்லையா?
பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது காவல்துறையே அடக்கம் செய்வதெல்லாம் ஏற்கவே முடியாதப் பேரவலம். தவெகவின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன சூலூர் சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாது, அடக்கம் செய்ததும், அதேபோல கும்மிடிப்பூண்டியில் இறந்துபோன சிறுமியின் உடலைப் பொன்னேரிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்திருப்பதும், இப்போது ஆகாஷின் உடலைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்திருப்பதுமான காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது. உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.
ஆகவே, தம்பி ஆகாஷ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, தொடர்புடைய காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், ஆகாஷின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கோவை: சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக அரசின் நடவடிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டம்
#Coimbatore | #CMVijay