இந்துமதத்தின் மீது உங்களுக்குள்ள அதீத வெறுப்பே, உங்கள் சரிவிற்கு வழிவகுக்கும் திரு. @Udhaystalin!
உங்கள் முதல் சட்டமன்ற உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நீங்கள் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. இந்துக்களின் மீது தொடர்ந்து நீங்கள் கல்லெறிவது கடும் கண்டனத்திற்குரியது.
துணை முதல்வராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு "சனாதனத்தை ஒழிப்பேன்" என்று நீங்கள் ஒருமுறை பொதுவெளியில் பேசி, இந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம். எனவே, நீங்கள் அரசியலில் மென்மேலும் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணர்வை வெட்டி எறிந்துவிட்டு, உண்மையான மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியம். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவரவர் மத அடையாளங்களும் நம்பிக்கைகளும் அதிமுக்கியம் என்பதை நீங்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு இந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, "மத" யானையின் மீது அரசியல் சவாரி செய்ய முயன்றால் மீள முடியா பாழுங்குழியில் வீழ்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும், அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்திருக்கும் முதல்வர் திரு. விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் பகிரப்பட்ட இந்த வெறுப்புப் பிரச்சாரத்திற்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதைத் தான் தமிழகம் தற்போது ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.
நம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படையாக விளங்கும் திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை, இன்றைய தினம் நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுடன் இணைந்து தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அருள்மிகு முருகப்பெருமானின் திருவருளால் பாரத மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று, அமைதி, செழிப்பு மற்றும் ஆனந்தம் நிரம்பிய வாழ்வு வாழ வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தேன்.
இன்றைய தினம் மிகவும் நினைவாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது. என் பேரன் சித்தாந் நாகேந்திரன் தன் சிறிய வயதிலேயே எழுதிய முதல் சிறுகதைப் புத்தகமான “Lavender And Her Mother” இன் முதல் பதிப்பை இன்று நான் பெருமையுடன் வாங்கிக் கொண்டேன்.
இத்தனை இளம் வயதிலேயே அவர் எடுத்துள்ள இந்த படைப்பாற்றல் மிக்க முயற்சி எனக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் ஆழ்ந்த பெருமையையும் அளிக்கிறது. அவரின் எழுத்துப் பயணம் தொடர்ந்து சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் கலந்து கொள்ளும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரம்மாண்ட NDA கூட்டணி மாநாடு மதுரை மாவட்டம் மண்டேலா நகரில் வரும் மார்ச் 1 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான மாநாட்டு திடலில் இன்று கால்கோள் நடும் விழாவில் நம் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
நம் NDA கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில் நம் பாரதப் பிரதமரின் வருகை அதை மேலும் உறுதி செய்து இந்த விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி பட்டறை-2026” அனைவரையும் அழைக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் SG.சூர்யா அவர்கள்.
🗓️ Date: February 15th, 2026 (Sunday)
⏰ Time: 07:30 AM – 04:00 PM
📍 Venue: SRM Campus, Dr. T.P. Ganesan Auditorium, Mini Hall – 2, Potheri, SRM Nagar, Kattankulathur, Chennai – 603203.
Event Registration Form: https://t.co/nDtBSWz1C8
For Enquiry / Registration: +91 9940312311 (WhatsApp Only)
— BJP Youth Wing, Tamil Nadu
@SuryahSG@SGSuryahOffice@BJP4TamilNadu
இன்றைய தினம் அருள்மிகு நம் தமிழ் கடவுள் முருகனின் சிறப்பு தினமான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வேண்டினேன்.
மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ முருகப்பெருமானை மனம் உருகி வேண்டிக் கொண்டேன்.
மீண்டும் நீதியே வென்றது…!
🔥 தீபத்தூண் தீபம் ஏற்றுவதற்கே…!
🚩 வெற்ற வேல் முருகனுக்கு அரோகரா
“சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்”
என்ற பெயரில்
தமிழக அரசு சொல்லிய பொய் வாதங்களை
சிறுபிள்ளைத்தனம் என்று
நீதிமன்றமே தூக்கி எறிந்துள்ளது.
வெற்றிவேல்…!
முருகனுக்கு அரோகரா…! 🔥🚩
“மக்களின் மனங்களில் என்றும் வாழும் கேப்டன்…”
தமிழ் திரையுலகின் புரட்சிக் கலைஞர்,
ஏழை எளிய மக்களின் நம்பிக்கைக்குரிய குரல்,
நடிகராகவும், அரசியல் தலைவராகவும்
தன்னலமற்ற சேவையால் தனி முத்திரை பதித்த
மறைந்த கேப்டன்விஜய்காந்த அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி அஞ்சலி செலுத்துகிறேன்
தன்னுடைய சகோதரர் உயிர் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியவில்லை
#இரங்கல்செய்தி
திருப்பரங்குன்றம் -தீபத்தூணில்
தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தீக்குளிப்பு..
பூர்ணசந்திரன் என்பவர் இறைவனடி சேர்ந்தார்..
அன்னாரின் ஆத்மா நற்கதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்..
@hindumunnani_tn@RSSorg@BJP4TamilNadu
#ThirupparankunramDeepam #HinduMunnani
திமுக அரசின் மதவெறியால் தீபத்தூணிற்கு பதிலாகத் தீப்பிடித்து எரியும் தமிழர்கள்!
திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் திமுக அரசு அதை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த திரு. பூர்ணசந்திரன் என்பவர் மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து சொல்லொண்ணா துயரத்தில் தவிக்கிறேன். திமுக அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
“கடவுளே இல்லை எனச் சொல்லும் பெரியாரின் சிலை முன்பே நான் எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன், அடுத்த ஆண்டிலாவது திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஒளிரட்டும்” என ஆடியோக்களை ஆதாரமாகப் பதிவு செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட திரு. பூர்ணசந்திரன் அவர்களது ஆன்மா எம்பெருமான் முருகனின் செவ்வொளியில் அமைதி பெறட்டும்.
தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம். நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன், அறத்தின் துணை கொண்டு போராட்டக்களத்தில் நாம் கைகோர்த்து நிற்போம். ஆனால், எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது.
எனவே, உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றவை என்பதைக் கருத்தில் கொண்டு இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென உங்கள் அனைவரிடமும் சிரம் தாழ்ந்த கோரிக்கை விடுக்கிறேன்!
முத்தமிழ் இயல், இசை, நாடகம் என மூன்றையும் தனது வாழ்நாளில் உயிர்ப்பித்து, தமிழின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொன்ன முத்தமிழ் காவலர் விசுவநாதம் பிள்ளை அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழ் மொழியின் செம்மையும் செழுமையும் தலைமுறை தலைமுறையாகத் தொடர வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் கல்வி, கலை, சமூக சேவை எனப் பல தளங்களில் அவர் செய்த அர்ப்பணிப்பு, இன்று தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்குகிறது. அவரது சிந்தனைகள், உரைகள், செயல்கள் அனைத்தும் தமிழின் ஆன்மாவை பாதுகாக்கும் காவலாக இருந்தன.
அவரது நினைவு தினமான இந்நாளில், தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த திரு. விசுவநாதம் அவர்களின் புகழை போற்றி வணங்குவோம்.
சமக்கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்த நீதிமன்றம்!
கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட வசதியுடன் தரமான கல்வியை நல்கும் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தனது அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழகத்தில் வரவிடாமல் தடுக்கும் திமுக அரசைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளது மாண்பமை உச்ச நீதிமன்றம்.
நாடு முழுவதும் உள்ள 650 நவோதயா பள்ளிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில், பெயருக்கு மொழியைக் காரணம் காட்டி மறுத்து, தமிழக கிராமப்புற மாணவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது முறையானதல்ல எனச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் பல பள்ளிகள் இருக்கிறதென்றால், கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கான பள்ளியும் இருந்தால் என்ன தவறு என்று சுருக்கென்று கேட்டதோடு, பள்ளிகள் பெருகும் போது தான் முன்னேறும் வாய்ப்புகளும் பெருகும் எனச் சுட்டிக்காட்டி திமுக அரசைத் தலையில் நறுக்கென்று குட்டு வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தனை ஆண்டுகள் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க மாவட்டந்தோறும் நவோதயா பள்ளி அமைப்பதற்காக நிலத்தை @arivalayam அரசு கண்டறிய வேண்டும்.
திமுக அரசு ஒருவேளை இந்த நீதிமன்ற உத்தரவையும் வழக்கம்போல் அவமதித்தாலும் பிரச்சனையில்லை, அடுத்து அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியால் தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளைத் தொடங்கி, தமிழகத்தின் கல்வித் தரத்தை முன்னேற்றி, மாணவர்கள் சிறந்து விளங்கச் செய்யப்படும். இது உறுதி!
இன்றைய தினம் டெல்லியில் வீரத்திலும், கொடைத்தன்மையிலும் சிறந்து விளங்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 'சுவரன் மாறன்' புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில் சிறப்பு தபால் தலையை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டேன், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் அண்ணன் திரு. @CPR_VP அவர்கள் பெரும்பிடுகு
முத்தரையர் தபால்தலையை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் மத்திய நிதயமைச்சர் திருமதி. @nsitharaman அவர்கள், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்கள், முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் திரு.விஸ்வநாதன் அவர்கள், தமிழ் தேசம் கட்சியின் திரு. K K செல்வகுமார் அவர்கள்
கலந்து கொண்டனர்.
Today in Delhi, participated in a special postal stamp event to honor the glory of the great emperor Perumbidugu Mutharaiyar “Suvaran Maran”, who excelled in bravery and generosity.
The Honorable Vice President of India, Thiru @CPR_VP Avl, released the postal stamp in recognition of Emperor Perumbidugu Mutharaiyar.
Finance Minister Smt. @nsitharaman Avl and Central Minister Thiru. @DrLMurugan Avl , Mutharaiyar Munnetra Sangam Leader Thiru. Viswanathan Avl, Tamizhar Desam Party Leader Thiru. KK Selvakumar Avl were also present at the event.