#வெற்றிசின்னம்குக்கர்
ADMK தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் #AMMK சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய, மாண்புமிகு கழக பொதுசெயலாளர், மக்கள்செல்வர், திரு டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்று மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொண்டேன்
கருங்குளம் ஒன்றியம், தெய்வச்செயல்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தேன். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#AMMK#TTVDhinakaran#NDAlliance
தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
நிலத்தை நஞ்சாக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும், ரசாயன உரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இயற்கை விவசாயத்தை இயக்கமாக முன்னெடுத்துச் சென்ற ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில் தொடர்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம்.
#வெற்றிசின்னம்குக்கர்
கழகப் பொதுச்செயலாளர் திரு #TTVDhinakaran அவர்களின் வழிகாட்டுதலோடு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தேன். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்
தலைமைக் கழக அறிவிப்பு:
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகின்ற 23.04.2026 வியாழக்கிழமையன்று நடைபெறுவதை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் 06.04.2026 முதல் 18.04.2026 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு, தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள்.
#வெற்றிச்சின்னம்குக்கர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அருமை சகோதரர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.மோகன் அவர்களை இன்று காலை, நம்ம MLA R சுந்தரராஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
#NDA#ADMK#BJP#AMMK
பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொல்லாமையும், பிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமையுமே உண்மையான அறம் என்பதை எடுத்துரைத்ததோடு, தன் சுக வாழ்க்கையைத் துறந்து, அகிம்சையைப் பின்பற்றி, இயற்கை சக்திகளோடு இணைந்து அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று போதித்த பகவான் மகாவீரர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.
அறநெறியினையும், ஆன்மீக நெறியினையும் தவறாது பின்பற்றி அதன் மாண்பை உலகிற்கே பறைசாற்றிய மகாவீரர் பிறந்த இந்த நாளில், அவரது போதனைகளைப் பின்பற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த பரமக்குடியைச் சார்ந்த திரு செல்வம் அவர்கள் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.செல்வம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். @PMOIndia@CMOTamilnadu
#வெற்றிசின்னம்குக்கர்#NDAAlliance
நேற்றைய தினம் சென்னையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர், திரு நயினார் நாகேந்திரன் அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்று உரையாடினோம்.
#AMMK#TTVDhinakaran@NainarBJP