தேச🇮🇳நலனை கருத்தில் கொண்டு மற்றும் பாரத பிரதமர்@narendramodi 🇮🇳 நரேந்திர மோடி ஜி அவர்கள் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக பாரதத்தை வழிநடத்திட எனது உழைப்பும் IJK🇦🇹தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு❤️💛💙 எனது ஜனநாயக கடமை செலுத்தினேன். #PhirEkBaarModiSarkar#ModiVision2047#ModiKaParivaar
#தவெக அரசு அறிவித்துள்ள மக்கள் நலன் சார்ந்த திட்டத்திற்கு #தமாகா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு திட்டங்களை வெற்றி பெற்று பொறுப்பேற்று பிறகு அத்திட்டங்களை படிப்படையாக நிறைவேற்றி வருவது பாராட்டுக்குரியது
@CMOTamilnadu@TVKVijayHQ
திருச்சிற்றம்பலம்
அரியபெரும் பொருளாகி நின்றான் தன்னை
அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
இரண்டு மாதங்கள் கடந்தும் விவசாயிகளைச் சென்றடையாத குறுவைத் தொகுப்பு – சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்?
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 134 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பு இன்று வரை வந்துசேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறுவை சாகுபடி மற்றும் அதனையொட்டி நடைபெறும் பணிகளுக்காக வழங்க வேண்டிய குறுவைத் தொகுப்பு, குறுவை சாகுபடியே முடிவடைந்து அறுவடை செய்யும் தருவாயிலும் வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இயந்திரங்களின் மூலம் நடவு செய்ததற்கான ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்தும், விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பின் நோக்கத்தையே சிதைக்கும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே, வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியையும் தவெக அரசு முழுமையாக நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், சாகுபடிச் செலவு அதிகரிப்பு, இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு, குறுவைத் தொகுப்பையும் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவது, விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்தக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் அலட்சியம் காட்டாமல், அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு முழுமையாகவும், உடனடியாகவும் விவசாயிகளைச் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் தாமதமின்றி நிறைவேற்றி, விவசாயிகளின் கடன் சுமையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
🚩ஓம் எனும் பிரணவ மந்திர கந்தனே என் முருகனே!
யாவும் நீயென யாக்கை உனக்கென நாளும் காத்திடு குமரனே!
அழகு என்றால் முருகு எந்தன்
ஆதி தமிழன் தெய்வமே!
அறுபடைக்கும் முதல்வன் நீயே
செந்தில் ஆண்டவ தெய்வமே!🚩
#முருகாசரணம்#ஷண்முகாசரணம்
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.