பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.
தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் @AIADMKOfficial கழகத்தின் மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா அவர்கள், நம் கழகத்திற்காக மெட்டமைத்த பிரச்சாரப் பாடல்கள் என்றைக்கும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் சரி, நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னும் சரி, தேவா அவர்கள் நமக்காக பாடிய பிரச்சாரப் பாடல்களே கழகத்தின் குரலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், நம் இயக்கத்தின் அறைகூவல் குரலாக அன்புச் சகோதரர் தேவா அவர்களின் காந்தக் குரல் திகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
“தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
#Deva
@AIADMKOfficial
சாவாப் பாடல்கள் தந்த
தேவா மறைந்துவிட்டார்
தேனிசைத் தென்றல்
நின்று போயிற்றா?
நெஞ்சு கனக்கிறது
தன் பேச்சு மூச்சு
அனைத்திலும்
இசையாகவே இருந்தவர்
சங்கீதத்தோடு
இங்கிதம் தெரிந்தவர்
பண்ணிசைக்கத் தெரிந்த
பண்பாளர்
அவரோடு நான் பணியாற்றிய
அண்ணாமலை, பாட்ஷா
அருணாசலம், வாலி, குஷி,
நேருக்கு நேர், ஆசை,
பஞ்ச தந்திரம் முதலிய
நூற்றக்கணக்கான படங்களின்
பாட்டு வெற்றிக்கு
தேவாவே காரணம்
தேவாவின் இசையைப்போல்
ரஜினிக்கு வேறு யாரும்
பொருந்தவில்லை என்றுதான்
ரசிகர்கள் பேசுவார்கள்
என்ன சொல்வது?
எனக்கு என் விரல்களில்
ஒன்று போய்விட்டது
அவரை இழந்துவாடும்
குடும்பத்தார்க்கும்
ரசிகர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்
கவலைப்படாதே சகோதரா
என்று பாடியவனே!
இன்றுநான் கவலைப்படாமல்
என்ன செய்ய?
#Deva | #தேவா
கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில்
“The Dravidian Phoenix”
எனும் நம் கழகத்தின் வரலாற்றை பேசும் ஆங்கில நூலை
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்றைய தினம் வெளியிட உள்ளார்கள்.
@DrVpb
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!
இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!
புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
@AIADMKOfficial
கடமைகளை மறந்துவிட்டு,
காலையிலேயே கால் கடுக்க ’இளைஞர்கள்’ தவம் கிடக்கலாமா?
திரையரங்குகள் பொழுதுபோக்கிற்கான இடங்களாக இருக்கலாமே தவிர, பொழுதையே போக்கும் ’புகலிடங்கள்’ ஆகிவிடக் கூடாது!
................................................
போட்டிகள் நிறைந்த இந்நவீன காலத்தில் ’பொழுதுபோக்கு’ என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் தினசரி வழக்கம் அல்லது கடமையாகக் கருத இயலாது; வாரத்திற்கு ஒருநாள் அல்லது மாதத்திற்கு இருநாள் என்பது இயல்பானது. தொடர் வேலைக்குப்பின் ஓய்வு என்பதை மாற்றி, வேலை நாள் முழுவதையுமே பொழுதுபோக்குகின்ற வகையில் இன்றைய இளைஞர்கள் திரையரங்குகளை நிரப்பும் அபாயம் வளர்ந்து வரும் போக்கு நம் இளைஞர் சமுதாயத்திற்கு அழகல்ல!
காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரையிலும் உழைத்த பிறகு, இரவு உணவை முடித்துவிட்டு, 8 மணி நேர உறக்கத்திற்கு பிறகு, அதிகாலையில் உற்சாகமாக எழுந்து பணியை துவங்கினால், அது கல்வியோ, தொழிலோ, வணிகமோ, வளர்ந்து பெருகும். ஆனால் திரை - கவர்ச்சி மோகத்தில் கல்வி, குடும்பப் பொறுப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, காலை எட்டு மணிக்கே திரையரங்குகளை நோக்கிப் படையெடுப்பது வளர்ந்து வரும் நம் பாரத தேசத்திற்கு பேராபத்தானது.
தமிழ்நாடு கடந்த 60 ஆண்டுகளாகத் திரைக் கவர்ச்சிக்கு ஆட்பட்ட அரசியலால் சூழப்பட்டுள்ளது. அதன் விளைவாக, அண்மையில் நடந்த தேர்தலில் எவ்வித அரசியல், சமூக, பொருளாதார சித்தாந்தமும் இல்லாமல், வெறும் திரைக் கவர்ச்சியால் மட்டுமே ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இது தொடருமேயானால், தமிழக இளைஞர் சமுதாயம் எண்ணிப் பார்க்காத பேரழிவைச் சந்திக்க நேரிடும்.
நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு பெரும் விலை பேசப்படுகிறது. ஆனால், நிஜங்களைத் தவிர்த்து நிழல்களைப் பிம்பப்படுத்துவதற்கு, பழமைப்பட்டுப் போன பல திரை நடிகர் - நடிகையர் கூட்டம் வீதிக்கு வந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே இளைஞர் சமுதாயம் மது, போதை, புகைப் பழக்கத்திற்கு ஆட்பட்டு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இப்பொழுது திரை என்ற போதையும் வலிந்து திணிக்கப்படுகிறது. புத்தகம் படிப்பது, பூங்காக்களுக்கு செல்வது, குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிப்பது என்று பொழுதைப்போக்க நல்வழிகள் பல உண்டு. அதைவிடுத்து, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் என்னதான் அவர்கள் உற்சாகப்படுத்திவிடப் போகிறார்கள்?
என்னதான் தனக்கு பிடித்த நடிகர், நடிகையாக இருந்தாலும், நூறு ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் பிரீமியம் கொடுத்து வாங்கிச் சென்று, திரையரங்கு வாசல்களிலே திரண்டு நிற்பது இளைஞர் சமுதாயத்திற்கு அடுக்குமா?
வாரத்தில் ஆறு நாட்களும் உழைப்பவராக இருந்தால் வாரத்தின் இறுதி நாளில் மாலையில்கூட திரையரங்குக்குச் செல்லுங்கள்; அது உடலுக்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கட்டும்; வாரமெல்லாம் பணியால் ஏற்படுகின்ற மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருக்கட்டும். ஆனால் அதற்கு மாறாக, உங்கள் முன்னால் இருக்கக்கூடிய பணிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, காலையிலேயே கால் கடுக்கத் திரையரங்குகளிலே முடங்கி கிடப்பது நியாயமாகுமா?
திரைப்படங்கள் பொழுதுபோக்காக இருக்க வேண்டுமே தவிர, பொழுதையே போக்கிவிடும் சாதனமாக இருக்கக்கூடாது. உழைப்பை விரயமாக்குவதற்கும், அறிவை மழுங்கடிப்பதற்கும் உண்டான ஆயுதமாக இருந்துவிடக்கூடாது.
கற்க வேண்டிய வயதில் கற்பதற்குப் பதிலாக, உழைக்க வேண்டிய வயதில் உழைப்பதற்குப் பதிலாக, உடல்நலம் பேண வேண்டிய வயதில் உடல்நலம் பேணுவதற்குப் பதிலாக, உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைத் திரையரங்குகளிலும் நடிகர் - நடிகைகளின் கவர்ச்சியிலும் அழித்துக்கொள்ளாதீர்கள்.
நிழல்கள் நிஜங்களாகாது; நிஜங்கள் நிழலாகிப் போய்விடக்கூடாது. இளைஞர்களே, கவர்ச்சியில் இருந்து மீண்டு வாருங்கள்.
ஜீரோக்களெல்லாம் ஹீரோக்களாக்குவதற்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளாதீர்கள்.
நாளை என்ற நாள் ஒன்று உங்களுக்கு இருக்கிறது. நல்ல முன்மாதிரிகளாக வளருங்கள்; தவறான முன்மாதிரிகளை உருவாக்கி விடாதீர்கள்.!
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.10.2026
கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது!
Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற இந்துக் கடவுளுக்குரிய பாடலைப் பாடி விட்டார் என்பதற்காக, சில இஸ்லாமியர்கள் அச்சிறுமிக்கு மிரட்டல் விடுப்பதை ஆளும் @TVKPartyHQ அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கிறிஸ்துவ மதத்தை பின்னணியாகக் கொண்ட, திரு. KJ யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களையும், திருமதி. LR ஈஸ்வரி அவர்களின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. இவ்வளவு ஏன், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பக்திப் பாடல்களையும் பாடியுள்ளனர், இன்றளவும் பாடி வருகின்றனர்.
"கலை" என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம்.
அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுமட்டுமன்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் அச்சிறுமிக்கு துணையாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் தென்கோடியில்
எளிய குடும்பத்தில் பிறந்து,
வடகோடியில் தமிழர்களின்
பெருமையை நிலைநாட்டிய
மக்களின் குடியரசுத் தலைவர்!
"சாதிக்க வேண்டும்" என்ற கனவும், "உறுதியாக சாதிப்போம்"
என்ற நம்பிக்கையும்,
அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர்!
"கனவு காணுங்கள்" என்ற உன்னத வரிகளால் கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் நம்பிக்கையை விதைத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
அவர்களின் பிறந்தநாளில்...
அவர் வகுத்துத் தந்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து,
வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
@AIADMKOfficial
அவர் நடந்தார், அவர் டிராக்டர் ஓட்டினார், அவர் டீ குடித்தார்,அவர் கார் கதவைத் திறந்தார், காரில் ஏறினார் என்றெல்லாம் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்