In this interview with PTI, I’ve expressed my thoughts about diverse issues like this year’s Budget, the Reform Express, why the world wants to do business with India, the NDA Government’s efforts for MSMEs, StartUps, the emphasis on defence and more.
கோவை ஈச்சனாரியி���் உள்ள சிறப்புமிக்க விநாயகர் திருக்கோயிலில் வழிபாடு செய்தேன். மக்கள் அனைவரும் எல்லா நலனும் வளமும் பெற்று இன்புற்றிருக்க ஸ்ரீ விநாயகப் பெருமான் துணை நின்று அருள்புரிய வேண்டினேன்.
அப்போது, கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு. சந்திரசேகர் அவர்களும், முன்னாள் எம்.எல்.ஏ திரு. சேலஞ்சர் துரை அவர்களும் உடன் இரு��்தனர்.
இன்றைய தினம் சென்னை, புரசைவாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட கீதம் உணவகத் திறப்புவிழாவில் கலந்துகொண்டேன்.
உணவகத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும், கீதம் குழுமத்துக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்ற��்தை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகையை அறிவித்த பிரதமர் திரு. @narendramodi அவர்களின் மக்களுக்கான மத்திய அரசு!
‘உண்மையின் உரைகல்லாக’ திகழும் தினமலர் நாளிதழ், இன்று தனது 75 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து, பவள விழாவைக் கொண்டாடுகிறது.
கோடிக்கணக்கான வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற தினமலர் நாளிதழ், அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவதிலும், அரசியல்வாதிகளின் மீதான விமர்சனங்களை தைரியமாக முன்வைப்பதிலும் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.
தமிழக மக்களிடையே தேசிய சிந்தனையை தொடர்ந்து பரப்பி வரும் தினமலர் குழுமத்துக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், உறங்காப்புலி என்று போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் ��ினைவுதினம் இன்று!
இந்தியா விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அத���த் தொடர்ந்து, 1957 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 முறை, உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியிலும், 1971 ஆம் ஆண்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வென்று மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களும், உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் பகுதிகளில், தன்னுடைய முயற்சி���ால் அரசுக் கல்லூரிகளை கொண்டு வந்ததுடன், தன் சொந்த நிலத்தை கல்விக்காகக் கொடுத்து பல மாணவர்களின் கல்விக் கண் திறந்தவர்!
இன்றைய நாளில், திரு.மூக்கையா தேவர் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்!
பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், ஜிஎஸ்டி வரி குறைப்புகளால் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் பஞ்சரத்ன நன்மைகள் குறித்து விளக்கினார். இதில் இந்திய குடிமக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த உதவும் நன்மைகளும் அடங்கியுள்ளது.
இன்றைய தினம், தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட பசுமை ஹைட்ரஜன் பைலட் ஆலையை மாண்புமிகு கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. @sarbanandsonwal அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
"கப்பலோட்டிய தமிழன்" என்று வரலாறு போற்றும், சுதேசி இயக்கத்தின் சுடரொளி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில், அவரின் வீரத்தையும், தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்..!
விவசாயத்தை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு ஒரு வரப்பிரசாதமாகும்..!
விலைவாசி உயர்வால் காங்கிரஸ் ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நடுத்தர மக்கள் என அனைவரும் தற்போது பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு நடவடிக்கையால் பயன் அடைகிறார்கள்.