"8-ஆம் நூற்றாண்டின் காலப் பெருவெளியில் ஒரு காவியப் பயணம்.
பரிமுகனின் விகசிப்பில் உருப்பெற்ற ‘காம்போஜ மல்லன்’, பல்லவ சாம்ராஜ்யத்தின் தொன்மைச் சிறப்பையும் கம்பீரத்தையும் காலத்தின் திரையைக் கிழித்து நம் மனக்கண் முன் நிறுத்தும் ஒரு கலைப்படைப்பு.
கடல் கடந்த தென்கிழக்கு ஆசியக் கரைகளிலிருந்து, போரின் வடுக்களைத் தாங்கி நின்ற காஞ்சி மாநகர் வரை விரியும் கதையின் பிரம்மாண்டமும், அதை ஆசிரியர் பின்னியுள்ள விதமும் பிரமிக்க வைக்கின்றன. வரலாற்றுச் சான்றுகளின் ஆழத்தையும், அரசதந்திரத்தின் தீர்க்கத்தையும் ஒருங்க�� பிணைத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஆன்மாவையும் அதன் தியாகத்தோடும் கடமையுணர்வோடும் ஜீவனுள்ளதாய் உதிர்த்திருக்கிறார் நூலாசிரியர்.
நூலில் மிளிரும் வரைபடங்களும் சித்திரங்களும் பண்டைய கடல்வழிப் பாதைகளையும் எல்லைகளையும் நம் கண்களுக்கு விருந்தாக்குகின்றன. ஆசிரியரின் சொல்லாட்சி, வெறும் எழுத்துக்களாக அ��்லாமல், அசைந்தாடும் வரலாற்றுச் சித்திரங்களாகவே நம் விழிகளுக்குள் விரிகின்றன.
இக்காவியம் தந்த பேரெழுச்சி, கதையின் நாயகனாம் மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் எழுப்பப்பெற்ற காஞ்சி வைகுந்தப் பெருமாள் திருக்கோவிலின் திவ்ய தரிசனத்திற்கு என்னை உந்தித்தள்ளியது. அம்முன்னோனின் கலைவண்ணமான மூன்று அடுக்கு மாட அமைப்பைக் காண விழைந்த வேளையில், ஆலயம் புனரமைப்பில் இருந்ததால் முழு தரிசனம் வாய்க்காமல் போயிற்று. இருப்பினும், அக்கோவிலின் கதவுகள் திறக்கப்படும் நாளில், கல்லில் வடிக்கப்பட்ட அவ்வரலாற்று அதிசயங்களைக் கண்டு மெய்சிர்க்க மீண்டும் அங்கே தஞ்சமடைவேன்.
வரலாற்று நேசர்களும் இலக்கியப் பிரியர்களும் தவறவிடக்கூடாத ஒரு கம்பீரமான காவியப் படைப்பு."
- தேவேந்திரன், வாசகர்.
இந்தியா என்பது ஒரு நாடு என்பதைத் தாண்டி, தனித்துவமான த���்துவங்கள் மற்றும் ஆன்மிகக் கோட்பாடுகள் கொண்ட ஒரு தொன்மையான நாகரிகம். இவை, இன்றைய உலகில் ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய கலாசாரத்தின் சிந்தனை மரபுகளிலிருந்து பெருமளவில் வேறுபடுகின்றன. இந்திய ஆன்மிக மரபுகள் ‘தர்மம்’ என்ற அடிப்படைக் கருத்திலிருந்து தோன்றுகின்றன. மேற்கத்திய சிந்தனைச் சூழலில் ‘தர்மம்’ எனும் கோட்பாட்டைக் கொண்ட கலாசாரம் பின்பற்றப்படவில்லை.
‘Being Different: An Indian Challenge to Western Universalism’ என ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலின் தமிழ்மொழியாக்கமான ‘வேறுபட்டிருத்தல்’ எனும் இந்த நூலில் சிந்தனையாளரும் தத்துவவியலாளருமான ராஜிவ் மல்ஹோத்ரா, இந்தியக் கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் மேற்கத்திய உலகிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வேறுபாடுகளை நேர்மையாகவும் ஆழமாகவும் ஆராய்கிறார். இந்தியா ஆய்வு செய்யப்படும் பொருளாக இருந்த நிலையிலிருந்து மாறி, தனது தர்மக் கண்ணோட்டத்திலிருந்து மேற்கத்திய உலகத்தை ஆராய்ந்து இரு தரப்பினரும் தங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கொண்டிருக்கும் பல பரிசோதிக்கப்படாத நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
ஆழமான, சிந்தனையூட்டும் வாதங்கள் நிறைந்த இந்தப் புத்தகம் இந்திய நாகரிகத்தின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் வாசிக்கவே��்டிய முக்கியமான புத்தகமாகும்.
வேறுபட்டிருத்தல் - மேற்கத்தியப் பொதுமைவாதத்திற்கு ஓர் இந்தியச் சவால், ராஜிவ் மல்ஹோத்ரா, தமிழில்: ஶ்ரீதர் திருச்செந்துறை, ரூ 720
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க https://t.co/UZIj6E4eoE
போன் மூலம் வாங்க 81480 66645
இருபதாம் நூற்றாண்டின் தெலுங்கு இலக்கியப் பரப்பில், சுதந்திரத்துக்கு முந்தைய தெலுங்குப் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பையும் அவர்களது புனைகதை உலகையும் ஆழமாக ஆராயும் முக்கியமான விமர்சன நூல் இது.
சமூகக் கட்டுப்பாடுகள், பெண்ணியக் குரல்கள் மற்றும் தத்துவப் பின்புலங்களை அடிப்படையாகக் கொண்டு தெலுங்குப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை இந்த நூல் மிகத் தீவிரமாகப் பகுப்பாய்வு செய்கிறது. கற்பனை உலகிற்கும் நிஜ வாழ்க்கைக்குமான உறவை அவர்களின் எழுத்துகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை விரிவாக விளக்குகிறது.
வெறும் விமர்சனப் பார்வையைத் தாண்டி, தெலுங்கு இலக்கிய வரலாற்றை மீட்டெடுக்கும் மிக முக்கியமான ஆவணப் பதிவாக, 1908 முதல் 1959 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த தெலுங்கின் முதல் தலைமுறைப் பெண் நாவலாசிரியர்களின் புனைகதை உலகை இந்த நூல் பகுப்பாய்வு செய்கிறது.
தெலுங்குப் பெண் எழுத்தாளர்களின் ��டைப்புகளை ஆழமான கல்விசார் நோக்கில் அணுக விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான ஆய்வு நூல்.
ஆன்லைனில் வாங்க https://t.co/F1kDZ8WJQ9
ஈரோடு புத்தகத் திருவிழா - 2026
சுவாசம் பதிப்பகம்
அரங்கு எண்: 3
நேரம்: 11:00 AM - 9:00 PM
இடம்: சிக்கய்யா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு.
31.7.2026 முதல் ஆகஸ்ட் 11 வரை
எட்டாம் நூற்றாண்டில் சாளுக்கிய இளவரசன் இரண்டாம் விக்ரமாதித்யனின் படையெடுப்பில் நிலைகுலைந்து வீழ்கிறது பல்லவப் பேரரசு!
காஞ்சி மாநகரையும் பல்லவப் பேரரசையும் மீட்கக் காஞ்சியின் சான்றோர்கள் வாரிசு தேடிப் புறப்படுகிறார்கள். பல தலைமுறைகளுக்கு முன்பு, பல்லவ இளவரசன் பீமவர்மன் காஞ்சியி��் இருந்து காம்போஜம் சென்று அங்கு நிறுவிய பல்லவக் கிளை வம்சத்தை நோக்கித்தான் அந்தப் பயணம் அமைந்தது.
அங்கு 13 வயது இளவரசனாக வளர்ந்து கொண்டிருந்த பரமேஸ்வர பல்லவ மல்லன் தன் தொப்புள்கொடி உறவான காஞ்சியின் அழைப்பை ஏற்று, தாயகம் திரும்பி, பல்லவப் பேரரசை மீட்டு, மேலும் இருநூறு ஆண்டுகள் காஞ்சியில் பல்லவர்களின் செங்கோலை நிலைக்கச் செய்தான். அவனே ‘காம்போஜ மல்லன்’ இரண்டாம் நந்திவர்மன். அவனைப் பற்றிய காவியமே இந்தச் சரித்திர நாவல்!
வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை நயத்துடன் ஆசிரியர் பரிமுகன் இப்புதினத்தை விறுவிறுப்பாக புனைந்துள்ளார்.
காம்போஜ மல்லன், பரிமுகன், முன்னட்டை ஓவியம்: ல.கி., சுவாசம், ரூ 930
ஆன்லைனில் வாங்க https://t.co/ilwPyLQK3R
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘ரீல்ஸ்’ பார்ப்பது அன்றாட விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. ‘ரீல்ஸ் பார்ப்பதில் என்ன பெரிய அபாயம் வந்துவிடப்போகிறது?’ என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் சில அதிர்ச்சி கலந்த பதில்களையும் அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கிறது.
குறுகி�� நேரமே ஓடக்கூடிய ரீல்ஸ் என்னும் குறுங்காட்சிகள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தி, நம் நினைவுத் திறனில் தொடங்கி செயலூக்கம் வரை எத்தனை பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதை எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறார் உளவியலாளரான D.I. ரவீந்திரன்.
ரீல்ஸ் என்னும் புதைகுழிக்குள் நம்மை அறியாமலேயே சிறைபட்டுக் கிடக்கும் நம் பரிதாபகரமான நிலையைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து விடுபடவும் இந்தப் புத்தகம் உதவும்.
ரீல்ஸ் பொழுதுபோக்கா புதைமணலா?, டி.ஐ.ரவீந்திரன், சுவாசம், ரூ 180
ஆன்லைனில் வாங்க https://t.co/M6S2JCYY2l
நெஞ்சிலோர் நண்டு – சுதாகர் கஸ்தூரி எழுதிய மிக முக்கியமான புத்தகம்.
இந்தப் புத்தகம் ஆண்களுக்கு வரக்கூடிய, அதாவது லட்சத்தில் ஒருவருக்கோ அல்லது ஆயிரத்தில் ஒருவருக்கோ மட்டுமே ஏற்படக்கூடிய அபூர்வமான மார்பகப் புற்றுநோய் பற்றியது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுதாகர் கஸ்தூரி எனக்கு ஃபோன் செய்து, தனக்கு இப்படி ஒரு நோய் வந்திருப்பதாக, அதாவது மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னபோது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அதிலும் ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் என்று சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. அவர் சொல்லும் வரைக்கும் இப்படியொரு நோய் இருப்பதே எனக்குத் தெரியாது.
அப்போது அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. உண்மையில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சுதாகர் கஸ்தூரியை எனக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தெரியும். அடிக்கடி பேசியிருக்கிறோம். அவருடைய புத்தகங்களை நாங்களே வெளியிட்டிருக்கிறோம். அவர் முதல் புத்தகம் எழுதியபோது படித்துப் பார்க்கச் சொல்லி எங்களுக்கு அனுப்பியிருந்தார். அந்த அளவுக்கு பழக்கம் உண்டு. 'மரத்தடி' குழுவில் இருந்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவரும் திருநெல்வேலிக்காரர் என்பதால் இயல்பாகவே நல்ல நட்ப��� இருந்தது.
அவர் இந்த புற்றைப் பற்றிச் சொன்னபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதன்பின்னர் அவ்வப்போது அவரைத் தொடர்புகொள்வேன். அதிகமாகத் தொந்தரவு செய்யவில்லை. ஒருமுறை பேசும்போது, "இப்போது எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அப்போது, "கிட்டத்தட்ட இந்த நோயிலிருந்து வெளியே வந்துவிட்டேன். பெரும்பாலும் எல்லாமே சரியாகிவிட்டது" என்று சொன்னார்.
அப்போது நான், "இதைப் பற்ற�� நீங்கள் ஒரு புத்தகம் எழுத வேண்டும்" என்று சொன்னேன். அவர் உடனே அதற்கு சம்மதித்தார். அவருக்கு ஏற்கெனவே அந்த எண்ணம் இருந்ததா என்று தெரியவில்லை. நான் சொன்னவுடன், "கொஞ்சம் நேரம் கொடுங்கள்" என்றார். பிறகு 2026 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தபோது மீண்டும் கேட்டேன். "எழுத ஆரம்பித்துவிட்டேன். கண்டிப்பாகத் தருகிறேன்" என்றார். அந்தப் புத்தகம் இப்போது வெளியாகியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், முதலில் ஆண்களின் மார்பகப் புற்றுநோய் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியாது. பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாக மார்பகப் புற்றுநோயைப் பலரும் நினைக்கிறார்கள். ஆண்களுக்கும் இது வரலாம் என்பது பலருக்கும் தெரியாததால், இந்தப் புத்தகம் உண்மையிலேயே ஒரு Eye-opener.
இரண்டாவது, இந்தப் புத்தகம் முழுவதும் பேசும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவரைவிட (அல்லது அதே அளவுக்கு) பாதிக்கப்படுவது அவருடைய குடும்பம். "இது சரியாகுமா? சரியாகாதா? இவர் மீண்டு வருவாரா?" என்ற தெரியாமல், இது தரும் மன உளைச்சல், இதைக் கடந்து வருவது சாதாரண விஷயம் அல்ல.
இதை நான் நேரில் பல நண்பர்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஏற்கெனவே சொல்���ியிருக்கிறேன்; என்னுடைய நண்பணின் மகன் பன்னிரண்டு வயதில் ரத்தப் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட மீண்ட பிறகு, புற்று மீண்டும் தாக்கி எங்களை விட்டுப் பிரிந்தான்.. அந்தக் குடும்பம் இரண்டு ஆண்டுகள் அனுபவித்த வேதனையை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். (அந்த வலி எழுப்பிய கேள்விகளே நான் எழுதிய 'கர்மன்' என்ற நாவல்.)
என்னுடைய நெருங்கிய நண்பரின் குடும்பத்தில் ஒரே குடும்பத்தைச் ���ேர்ந்த ஐந்து பேர் புற்றுநோயால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் புற்றுநோய் தரக்கூடிய மன அழுத்தம், வேதனை பற்றி எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது. அந்த Stressஐ அளவிடவே முடியாது.
சமீபத்தில் Palliative Care பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தேன். அது விரைவி��் தமிழில் வரப்போகிறது. அந்தப் புத்தகத்தை யார் வெளியிடுகிறார்களோ, அவர்கள் அதைப் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள். நல்ல முக்கியமான புத்தகம் அது.
அந்தப் புத்தகத்திற்கும் இந்தப் புத்தகத்திற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இரண்டு புத்தகங்களும் நோயாளியை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கின்றன.
இந்தப் புத்தகத்தில், சுதாகர் கஸ்தூரி எந்த அளவு���்கு இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார், அவருடைய குடும்பத்தினர் எப்படி உறுதுணையாக இருந்தார்கள், நண்பர்கள் எப்படி துணையாக இருந்தார்கள் அல்லது சிலர் எப்படி விலகிச் சென்றார்கள், சமூகத்தில் இருக்கும் தவறான நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், "இது தொற்றுநோய்" போன்ற பல கற்பிதங்கள்—இவை அனைத்தையும் மிகத் தெளிவாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அதைவிட முக்கியமான விஷயம், இத���தனை பிரச்சினைகள், இத்தனை எதிர்மறை அனுபவங்கள் இருந்தாலும், இந்தப் புத்தகம் விதைப்பது Positive Thinking.
புற்றுநோய் வந்துவிட்டால் மருந்து வாங்குவது, மருத்துவமனைக்குச் செல்வது, செலவுகள், நீண்ட நேரம் காத்திருப்பது, பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பது, எதிர்மறையான முடிவுகள் வருவது, மீண்டும் போராட வேண்டிய நிலை, தனிமையில் உட்கார்ந்து "இனி என்ன செய்��து?" என்று சிந்திப்பது—இவை அனைத்தையும் சொல்லிக்கொண்டே, இந்தப் புத்தகம் ஒரு நேர்மறை நம்பிக்கையையும் இணையாக விதைக்கிறது. அதுதான் இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய பலம்.
"உங்களால் முடியும். உங்களால் ஜெயிக்க முடியும். இதைத் தாண்டி வர முடியும்." அதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைச் செய்தி.
புற்றுநோய் வந்தவுடன் ஒவ்வொருவரின் மனத்திலும் எழும் முதல் கேள்வி, "ஏன் எனக்கு மட்டும் இப்��டி?" என்பதுதான். உண்மையில் எந்த நோயாக இருந்தாலும், குறிப்பாக புற்றுநோயாக இருந்தாலும், முதலில் எழுவது இந்தக் கேள்விதான். இந்தக் கேள்வி இந்தப் புத்தகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது. நான் குறிப்பிட்ட Palliative Care புத்தகத்திலும் மிக முக்கியமான கேள்வியாக "Why Me?" என்பதே பேசப்படுகிறது.
"ஏன் எனக்கு இப்படி வந்தது?" என்பதைத் தாண்டி, "நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேனே!", "என் குடும்பம் என்ன செய்யப் போ���ிறது?", "பொருளாதார ரீதியாக நான் என்ன செய்வேன்?" என்ற எல்லா கேள்விகளையும் கடந்து, "நான் ஜெயிக்க முடியும்; இதைத் தாண்டி வர முடியும்; ஒரு Survivor-ஆக வாழ முடியும்" என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகம் வலிமையாகச் சொல்கிறது.
அதை சுதாகர் கஸ்தூரி மிகவும் அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
புற்றுநோய் பற்றிய ஒரு புரிதல் அவருக்கு ஏற்கெனவே இருந்ததாலும், அவர் ஒரு சிறந்த சிந்தனையாளராக இருந்ததாலும், இந்த நோயை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் பிரமிக்க ��ைக்கிறது. அவர் மருத்துவர்களுடன் பேசிய விதம், மருத்துவ அறிக்கைகள் வந்தபோது அவற்றைப் புரிந்துகொண்டு விவாதித்த விதம், நோயைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொண்ட விதம்—இவை அனைத்தும் இந்தப் புத்தகத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது வெறும் வலியை மட்டும் சொல்லும் புத்தகம் அல்ல. அதையும் தாண்டி, எப்படி நம்மால் நோயை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகம். அந்த அடிப��படையில், 'நெஞ்சிலோர் நண்டு' மிக முக்கியமான நூல்.
புத்தகத்தை வாங்க https://t.co/wZOkejPhHF
போன் 81480 66645
திடீரென ஒரு நாள் ஒரு நெருங்கிய நண்பர், அதுவும் ஆண், அழைத்துத் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
***
ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருமா? இந்தக் கேள்வியே அதிர்ச்சியாக இருக்கிறதா?
மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே வரும் என்ற தவறான புரிதலுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக, தனக்கு ஏற்பட்ட மார்பகப் புற்றுநோய் பாதிப்பையும், அதை எதிர்கொண்ட விதத்தையும் இந்தப் புத்தகத்தில் சுதாகர் கஸ்தூரி தெளிவாக விவரிக்கிறார்.
எதிர்பாராத தருணத்தில் புற்று கண்டறியப்பட்ட���ு முதல், கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வரை, தான் கடந்து வந்த வலியின் பாதையை இதில் பதிவு செய்துள்ளார். உடல் வேதனைகளைத் தாண்டி, அவர் சந்தித்த உளவியல் போராட்டங்களையும், அவற்றிலிருந்து மீண்டதையும் விளக்குகிறார் ஆசிரியர்.
இந்தப் புத்தகம் ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.
நெஞ்சிலோர் நண்டு - மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட ஓர் ஆணின் அனுபவக் குறிப்புகள், சுதாகர் கஸ்தூரி, சுவாசம், ரூ 190
ஆன்லைனில் வாங்க https://t.co/wZOkejPhHF
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
***
அந்த நண்பருக்கான பிரார்த்தனை வீண் போகவில்லை. எல்லாம் அவனருள்.
2026 தமிழகத் தேர்தல் களம் எல்லாத் தேர்த��்களையும் போலப் பரபரப்பாகக் காணப்பட்டாலும் முடிவைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் ஆளுங்கட்சியான தி.மு.க வெல்லும் என்றே கணித்திருந்தனர். ஆனால் இளைய தளபதி விஜய் தன்னுடைய திரைப்படத்தைப் போலவே ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்துத் தேர்தல் களத்தை ஓர் அதிரடித் திரைப்படம் போல மாற்றி, நிஜ வாழ்விலும் தான் ஒரு கதாநாயகன்தான் என்று நிரூபித்தார்.
எப்படி இந்த வெற்றி சாத்தியமானது என்று எல்லோரும் அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் இருக்கும் வேளையில், அது குறித்து இந்தப் புத்தகம் அலசுகிறது.
இந்த அசாத்திய வெற்றியின் பின்னால் உள்ள வியூகங்கள், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள், எதிர்பாராச் சம்பவங்கள், அரசியல் விளையாட்டுகள், மக்களின் மனநிலை, ஜென் ஸி எனப்படும் புதிய தலைமுறையினரின் அரசியல் பார்வைகள், அறுபது ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் தோல்விக்கான காரணங்கள் - இவற்றை இந்தப் புத்தகம் ஆராய்கிறது.
அரசியல் ஆர்வலர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இந்த நூல் ஒரு சுவையான விருந்து.
ஜோசஃப் விஜய் என்னும் நான், ஜி.எஸ்.சிவகுமார், சுவாசம், ரூ 230
ஆன்லைனில் வாங்க https://t.co/ZDHyvWy2OM
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
ஞானம் அடைவதற்குப் பல வழிகளை நாம் வரலாற்றில் காண்கிறோம். அனைத்து வழிகளும் உடலின்பத்தைத் துறப்பதையும் ஆசையைக் கைவிடுவதையும் ஞானத்தை அடையும் வழிகளாக அறிவுறுத்திக்கொண்டிருந்த வேளையில், இன்பத்தைத் துய்ப்பதன் மூலமாக ஞானத்தை அடையும் வழியைப் போதித்தது தந்த்ரா.
இதனாலேயே கடுமையான வி���ர்சனங்களையும் பெற்றது இந்த வழி.
• தந்தரா போதித்தது என்ன?
• இன்பத்தைத் துய்ப்பதன் மூலம் ஞானம் அடைய முடியுமா?
• தந்த்ராவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையா?
இந்தக் கேள்விகளுக்கான முழுமையான விளக்கங்களைத் தெளிவுடன் எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம்.
தந்த்ரா - ஞான விளக்கம், ப.சரவணன், ரூ 330
ஆன்லைனில் வாங்க https://t.co/HpqF0zeFkO
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
மேலைநாட்டுச் செவ்விலக்கியங்களில் மிக முக்கியமான ஹோமரின் ‘இலியட்’ காவியத்தைச் சுருக்கமாக வாசித்து ரசிக்கும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
அழகி ஹெலனால் கிரேக்கத்திற்கும் டிராய் நகருக்கும் இடையே உருவாகும் வரலாற்றுப் புகழ்பெற்ற யுத்தத்தை மையமாகக் கொண்டதே இலியட். நண்பனை இழந்த வலியில் கிரேக்கப் படையின் மாவீரன் அக்கிலீஸ் கொள்ளும் ஆவேசம், டிராய் நாட்டின் தளபதி ஹெக்டரின் தியாகம், கிரேக்கர்களின் தந்திரமான 'மரக்குதிரை' (Trojan Horse) போரில் மாண்ட மகனின் உடலை யாசிக்கும் தந்தை பிரியமின் உருக்கமான வேண்டுகோள் எனப் பத்தாண்டுக் காலப் போரின் உக்கிரத்தையும், போர்க்களத்தின் நிகழ்வுகளையும், அதனூடான மானுட உணர்வுகளையும் விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நூல்.
மூலப் பிரதியின் வீரியமும், க��ாபாத்திரங்களின் தவிப்பும் சற்றும் குறையாமல் சுருக்கித் தந்துள்ளார் ஆசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன். யுகங்கள் கடந்தும் அழியாத ஒரு வரலாற்றுப் பேரிலக்கியத்தை மிகக் குறுகிய காலத்தில் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.
ஹோமரின் இலியட் - காவியச் சுருக்கம், அனந்தசாய்ராம் ரங்கராஜன், ரூ 190
ஆன்லைனில் வாங்க https://t.co/GHd9gRL61D
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
ஒடிஸி திரைப்படம் வரவிருக்கிறது. உலகெங்கும் பலத்த எதிர்பார்ப்பு இந்தத் திரைப்படத்துக்கு. கிறிஸ்டோஃபர் நோலன் என்றாலே பரபரப்புதான்.
***
கிரேக்க இலக்கியத்தின் சிகரமான ஹோமரின் ‘ஒடிஸி’, நவீன வாசகர்களின் வாசிப்புக்கேற்ப எளிமையான நடையில் இந்தப் புத்தகத்தில் புத்துயிர் பெற்றுள்ளது.
இதாகா நாட்டின் மாவீரனான ஒடிஸியஸ், தன் தாயகம் நோ��்கிய பயணத்தில் எதிர்கொள்ளும் அதி பயங்கரமான அரக்கர்கள், கடவுள்களின் சாபம், இருபது ஆண்டுக்காலப் பிரிவின் துயரங்கள் உள்ளிட்ட பல உணர்ச்சி அலைகளைக் கொண்ட பெருங்காப்பியத்தைச் சுருக்கமாக விவரிக்கும் படைப்பே இந்தப் புத்தகம்.
மூலத்தின் ஆன்மாவையும் உணர்ச்சிகளையும் துளியும் சிதைக்காமல், அந்தச் செவ்விலக்கியத்தின் சுவை குன்றாமல் சுருங்கக் கொடுத்துள்ளார் ஆசிரியர் அனந்தசாய்ராம் ��ங்கராஜன். தாமரை உண்பவர்களின் (lotus eaters) வஞ்சக மாயைகள், தன் கணவன் ஒடிஸியஸுக்காகக் காத்திருக்கும் பெனிலோப்பின் ஏக்கம் என இக்காவியத்தின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் இதில் பதிவு செய்திருக்கிறார்.
காலத்தால் அழியாத ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தை விரைவாக உள்வாங்கிக் கொள்ள இந்தக் காவியச் சுருக்கம் பேருதவியாக இருக்கும்.
ஹோமரின் ஒடிஸி - சுருக்கப்பட்ட வடிவம், அனந்தசாய்ராம் ரங்கராஜன், ��ூ 190
ஆன்லைனில் வாங்க https://t.co/Zx1IslFFxQ
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
மகர சடகோபன் எழுதிய 'ஸ்ரீ ராமானுஜர் - கோவில் முதல் குடிசை வரை' நூல் அறிமுகம். நன்றி தினத்தந்தி.
சுவாசம் பதிப்பக வெளியீடு.
#swasam_reviews
அச்சுப் புத்தகத்தை வாங்க
https://t.co/ACe1Eg3nK1
அமேசானில் வாங்க
https://t.co/ZbcDnKo2HF
போன் மூலம் வாங்க 8148066645
மனத்தின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் வரலாற்றின் சுவடுகளைக் கற்பனைத் தூரிகை கொண்டு உயிர்ப்பிக்கும் அழ���ிய படைப்பு இந்தக் குறுநாவல் தொகுப்பு.
காலத்தின் திரையை விலக்கி, நம் முன்னோர்களின் வீரத்தையும் காதலையும் தியாகத்தையும் இன்றைய வாசகர்களின் மனத்திற்கும் ரசனைக்கும் நெருக்கமாகக் கொண்டுசேர்க்கும் ஒரு காலப்பயணம் இது.
வரலாறு என்பது வெறும் தகவல்கள் அல்ல, அது உணர்வுகளின் சங்கமம் என்பதைப் பறைசாற்றும் இக்கதைகள், உங்களை அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
தமிழக வரலாற்றின் பொன்னேடுக���ில் மறைந்திருக்கும் உண்மைச் சம்பவங்களை அவற்றின் அடிப்படை மாறாமல், அதே சமயம் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறார் எழுத்தாளர் சின்னக் கண்ணன்.
ஆடு கண்ணா ஆடு - குறுநாவல் தொகுப்பு, சின்னக் கண்ணன், சுவாசம், ரூ 240
ஆன்லைனில் வாங்க https://t.co/RZQFwnJMiG
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
தமிழ் இலக்கிய வரலாற்றில் நாடகங்களுக்கு முக்கியமான பங்கு எப்போதும் உண்டு. தமிழ் நாடகக் கலைக்குப் பங்காற்றிய கலைஞர்களைப் பற்றி இந்தப் புத்தகம் பருந்துப் பார்வையில் ஆவணப்படுத்துகிறது. அதே சமயம், மேற்கத்தியக் கலைஞர்கள் குறித்தும், அந்நாடகங்கள் நம் நாட்���ில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பதிவு செய்கிறது.
சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் முதல் தற்கால நவீன நாடக ஆளுமைகள் வரை நாடகக் கலையின் வளர்ச்சிக்குத் துணை நின்ற கலைஞர்களையும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.
தமிழ் நாடக வரலாறு - ஒரு பருந்துப் பார்வை, தஞ்சை எழிலன், சுவாசம், ரூ 190
பக்தி என்னும் உணர்வு நிலையை விளக்கிச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இறை உணர்வும் அப்படித்தான். அப்படிப்பட்ட இறை உணர்வை மொழி மூலம் இன்னொருவருக்குக் கடத்திவிடுவதன் உச்சமே, அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதி.
கந்தர் அனுபூதியை இன்றைய தலைமுறைக்குப் புரியும் வகையில், தற்காலப் பேச்சு மொழியில், எளிமையான விளக்கங்களோடு, ஓர் உரையாடல் போல முன்வைக்கிறது இந்நூல்.
வாழ்க்கையில் ஏற்படும் தடைகளுக்குப் பயந்து, வாழ்க்கைக்கே பயந்து, ஏதேதோ தவறான பாதைகளில் அகப்பட்டு உழலும் தற்கால இளைஞர்களுக்கு, வாழ்க்கை நெறிகளையும் வாழ்வின் உண்மையையும் பக்தியின் முக்கியத்துவத்தையும் அவற்றின் வழி நிகழும் அற்புதங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
கந்தர் அனுபூதி முருகனைப் பற்றியது மட்டுமல்ல. நம் சுயத்தை உணரச் செய்யும் அற்புதப் படைப்பு.
கந்தர் அனுபூதி - தற்கால இளைஞர்களுக்கான விளக்கம், சேகர் சந்திரசேகர், சுவாசம், ரூ 200
ஆன்லைனில் வாங்க https://t.co/hPjnGSZo91
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
புகழ்பெற்ற வங்காள எழுத்தாளரான பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலத்தில் எழுதிய முக்கியமான நாவல், ‘ராஜ்மோகனின் மனைவி’. ஹேமாங்கினி – மதங்கினி எனும் இரு சகோதரிகளைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த யதார்த்தவாத நாவல், ��ாதல், பாசம், பேராசை, வன்மம், துரோகம் என்ற பல உணர்ச்சிகளின் வழியே பயணிக்கிறது.
மனித மனங்களுக்குள் ஏற்படும் உணர்ச்சிகள் மற்றும் பேராசைகள் எவ்வாறு நம்மைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கின்றன என்பதை ஆழமாகவும் எளிமையாகவும் சொல்கிற நாவல் இது. கதை சொல்லலின் இடையே வெளிப்படும் அங்கதச் சுவை இந்த நாவலில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்று.
ஆங்கில மூலநாவலின் சுவை குன்றாமல் வானதி இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ராஜ்மோகனின் மனைவி, பங்கிம் சந்திர சட்டர்ஜி, தமிழில்: வானதி, ரூ 200ஆன்லைனில்
ஆன்லைனில் வாங்க https://t.co/P54mXUANgz
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
மண்ணின் அழுக்கைச் சுமந்து, மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வலிகளும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் அனு��விக்கும் ஒடுக்குமுறைகளும் இந்த நாவலில் ரத்தமும் கண்ணீருமாகப் பதிந்திருக்கின்றன.
சாதியப் பாகுபாடுகளைச் சாம்பலாக்கத் துணியும் பெண்களின் எழுச்சியும், மனிதாபிமானத்தின் போராட்டமுமே இந்த நாவல். வீட்டுச் சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்காமல், அநீதிக்கு எதிராகக் களம் காணும் பெண்களின் உலகத்தைக் கண்முன் கொண்டு வருகிறது இந்தப் படைப்பு.
தான் கண்டு கேட்டறிந்தவற்றை மையமாகக் கொண்ட�� இந்த நாவலைச் செம்மையாகப் படைத்திருக்கிறார் ஜெயந்தி கார்த்திக்.
மலக்குழி (நாவல்), ஜெயந்தி கார்த்திக், ரூ 250
ஆன்லைனில் வாங்க https://t.co/hfgmq9992g
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
உலகம் முழுவதையும் ஓர் அறைக்குள் அடைக்க முடியுமா? முடியும்! ஒரு சிறந்த நூலகத்தின் மூலம்.
வாசிப்பே ஒரு மனிதனை முழுமையாக்குகிறது. அந்த வாசிப்பை நமக்கு வசதியா��த் தருவதற்காக அமைந்தவையே நூலகங்கள். அப்படிப்பட்ட நூலகங்களின் முக்கியத்துவம் என்ன, அவை எப்படி அமையவேண்டும், மக்கள் அதனைத் தங்களுக்கு ஏற்றவிதமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கடமை என்ன என்று நூலகம் குறித்த பல அறிவு சார்ந்த, துறை சார்ந்த கேள்விகளை எழுப்பி, அதற்கான சரியான விளக்கங்களையும் கூறுகிறது இந்தப் புத்தகம்.
புத்தகங்களும் வாசிப்பும் உலகத்தில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்தின, மனிதர்களுக்கு வாசிப்பு ஏன் முக்கியம், உலகின் தலைசிறந்த நூலகங்கள், தற்கால வாசிப்பின் நிலை, சிறை நூலகங்களின் அவசியம் எனப் பல தலைப்புகளில் இந்தப் புத்தகம் சிறந்த கருத்துகளை முன்வைக்கிறது.
‘நூலகம்’ மூலம், ஒரு பெரும் வாசிப்பு நிலவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.
நூலகம் - வாசிப்பை நேசிப்போம், அ.தீ.ரமேஷ்கார்த���க், ரூ 160
ஆன்லைனில் வாங்க https://t.co/0lQk1mk06S
ஃபோன் மூலம் வாங்க 81480 66645
ஆஸ்தான கோலாகலம் என்பது பழங்காலத் தமிழ்க் கணித நூல்களுள் ஒன்று.
இன்றைய நவீன யுக ஆசிரியர்களும் மாணவர்களும் தொழில்நுட்ப உதவியோடு செய்யும் கணக்குகளை, நம் தமிழர்கள் எவ்வித வசதிகளும் அற்ற காலத்திலேயே மனக் கனக்கின் அடிப்படையிலும் கை விரல்களின் உதவிகொண்டும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். சாதாரண வீட்டுக் கணக்குகள் மட்டுமின்றி, பெரும் வியாபாரம், சந்��ைக் கணக்கு, நாட்டுக் கணக்கு, படைக் கணக்கு உள்ளிட்ட பலவிதமான கணக்குகளைச் செய்ய அவர்கள் கடைப்பிடித்த கணித சூத்திரங்களை விவரமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம்.
கூட்டல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகள் அந்தக் காலத்தில் எந்த விதத்தில் செய்யப்பட்டன, அதற்கான வாய்பாடுகள் என்ன, நம் முன்னோர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் இந்தப் புத்தகம் தெளிவுற ���டுத்துச் சொல்கிறது.
ஆஸ்தான கோலாகலம் - உரையுடன், சுசீந்திரன், சுவாசம், ரூ 230
ஆன்லைனில் ஆர்டர் செய்ய https://t.co/nPfy7DrdLC
ஃபோன் மூலம் வாங்க 81480 66645