"தமிழ்நாடு அரசு" என்ற பெயருடன் தமிழ்நாடு அரசு பேருந்துகளைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது!
தமிழ்த் தேசியர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்திய தவெக அரசுக்கு நன்றி.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில், எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.
There is absolutely no match between Annan @TVKVijayHQ and @annamalai_k .
Vijay started a party from scratch , invested his own money , trusted his fans who have become party cadres and won the election with people’s support .
While annamalai used prime minister Modi and Amit Shah for his growth , grew to fame Using BJP and RSS eco system and its hard working cadres , and now trying to project himself as a standalone leader !
Stark difference !
Congratulations to Praggnanandhaa for this remarkable feat!
This is indeed an incredible milestone that highlights his continued excellence.
My best wishes to him for his future endeavours.
@rpraggnachess
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அக்குழந்தை தமிழ் போல இனிமையுடனும், தமிழர் புகழ் போல உயர்வுடனும், நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்!
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்