ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது இவ்வெற்றி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
அவர் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நாட்டின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும்போது உயிரிழந்த பெண் தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தடகள வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும்.
எதிர்காலத்திலும் இத்தடகள வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
#AsianGames2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் திரு.ம.வேல்முருகன் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, சுமார் 40 கி.மீ. தூரத்திற்குத் தனது உயிரைப் பணயம் வைத்து, காரின் மேற்கூரையில் படுத்தபடியே சென்று தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுசென்ற கடத்தல்காரர்களைக் கைதுசெய்யக் காரணமாக இருந்த அவரது துணிச்சலைப் பாராட்டினார்.
#CMJosephVijay
தனது பணியைப் பலரும் பாராட்டும் வகையில் செயல்பட்ட கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு.ம.வேல்முருகன் அவர்களை நேரில் அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பாராட்டினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் திருமதி பி.ராதிகா சக்கரவர்த்தி, I.Po.S., அவர்கள் மற்றும் அவரது கணவரும், அசாம் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான முனைவர் பி.கல்யாண் சக்கரவர்த்தி, இ.ஆ.ப. ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்தில், சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-Madras) இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், சிறப்புப் பணி அலுவலர் கர்னல் எஸ்.பார்த்தசாரதி, ஆலோசகர் திரு.வி.சேகர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற நீதியரசர் முனைவர் இரா. ந. மஞ்சுளா, திருமதி ஆ. சுகந்தி, இ.ஆ.ப. (ஓய்வு) ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., உறுப்பினர் திரு.ஏ.ஆர்.மாஸ்கர்னஸ், உறுப்பினர் (சட்டம்) திருமதி ஏ.முத்து சாரதா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்து, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்
#CMJosephVijay
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை திருமதி பி.டி. உஷா அவர்கள் 1984-ஆம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும்.
அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
#AsianGames2026
ரூ.10.25 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
#CMJosephVijay
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.