கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மாமன்னர் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களை, திருச்சி விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தேன்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி, தமிழர் தேசம் கட்சியின் வாக்குச்சாவடி நிர்வாகிகள், முகவர்கள், உறுப்பினர்கள் பங்குபெற்ற வாக்குச்சாவடி நிலை குழு கூட்டம் அறந்தாங்கி நூர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தலைமையேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்!
@CP_10_99 @KKSelvakumaroff வேற்று சமூகமாக இருந்தாலும் "பட்டியலினத்தைச் சேர்ந்த திருமகனாருக்கு" குருபூஜை விழா கொண்டாடுறீங்க பாருங்க 👌.
(கொழுத்தி போடுவோம்🎇🎆)
நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில்,தமிழர் தேசம் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது,அதில் கலந்து கொண்டேன்..
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
அன்பிற்கினிய அனைவருக்கும்
#விநாயகர்_சதுர்த்தி நல் வாழ்த்துகள்!
-----------------------------------------
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்!
இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை அருள்வாய்.
தன்னுடைய அரசியல் எதிரிகளை பலிவாங்க ஆளும் வர்க்கமும்,குற்றத்தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் இயந்திரத்தனமாக காவல்துறையும் குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி வருவதற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் கேள்விகள் காவல்துறையின் தலையில் விழுந்த பெரிய குட்டு.இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி-2024 ல், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையோடும் பெருமையோடும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை துவக்கி வைத்திருக்கும் சிங்கப் பெண் மனு பாக்கருக்கு வெற்றி வாழ்த்துகள்💐
#ParisOlympics2024
@realmanubhaker
#இரங்கல்_செய்தி
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மதுக்கூர் ஒன்றியம் விக்ரமம் கிராமத்தை சேர்ந்த ராதிகா மற்றும் அவருடன் சென்ற அவரது 10 வயது மகன் மோனிஷ்-ம் மேலும் எதிரே இருசக்கரம் ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் விக்னேஷ் மூவரும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தினரின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான மிதவேகத்தில் வாகனங்களை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதிய உணவு திட்டத்தை தமிழகம் காண வழிவகுத்து ஏழைகளுக்கும் கல்விக்கண் திறந்த கர்மவீரர், நாடுபோற்றும் நல்லாட்சியை நல்கிய பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழாவாக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அருமைச் சகோதரர் @GK__Vasan அவர்களுடைய அழைப்பினை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமான தமிழர் தேசம் கட்சி சார்பில் கலந்து கொண்டு சிறப்பித்தேன்.
மாநில சுயாட்சி பற்றி வகுப்பெடுக்கிற திமுக அரசுக்கு மாநில உரிமைகள் எதுவென்று தெரியாதா?!
மற்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு புத்தி சொல்லுகின்ற திராவிட மாடல் அரசு,சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மட்டும் மத்திய அரசை கைக்காட்டி தப்பித்துக் கொள்வது ஏன்?!
பெருகிவரும் கள்ளச்சாராய விற்பனையையும் அதனைத் தொடர்ந்துவரும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்திட,தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்தக்கோரி 28.06.2024 வெள்ளியன்று தமிழர்தேசம் கட்சியின் சார்பில் மாநிலந்தழுவிய மாவட்ட அளவிலான கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்
சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதுதான் காவல்துறையின் வேலையா?
தஞ்சை மாவட்ட காவல்துறையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் முதல்வர் அவர்களே?!
இன்று (04.02.2024) மாலை,
பேராவூரில் சமநீதியார் தலைமையில் இழந்ததை மீட்கவும் இருப்பதை காக்கவும் நடக்கவிருக்கும் "இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு" வெல்லட்டும்! சிறக்கட்டும்!
#இராமநாதபுரம்_மாநாடு#தமிழர்_தேசம்_கட்சி@KKSelvakumaroff
இன்று மாலை பேராவூரில் (இராமநாதபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்),
தமிழர் தேசம் கட்சி நடத்தும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு வெல்லட்டும்! சிறக்கட்டும்!!
#இராமநாதபுரம்_மாநாடு
கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி!
கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் நிறுவனரும் தலைவருமான கே.கே.செல்வகுமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி!
@KKSelvakumaroff#தமிழர்_தேசம்_கட்சி
https://t.co/6GJXYeEF5K via @YouTube