இன்றைய தினம் (14.07.2026, செவ்வாய்க்கிழமை), திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், காசம்பட்டி கிராமத்திற்கு சொந்தமான அழகர் கோவில் வழிபாட்டு உரிமை, கடந்த 17 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. நமது வழிபாட்டு உரிமையும், ஆன்மீக மரபும் யா��ாலும் பறிக்கப்பட முடியாதவை.
இந்த நிலையில், இன்று காசம்பட்டி கிராமப் பெரியோர்களை நேரில் சந்தித்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளை கேட்டறிந்தேன். இழந்த வழிபாட்டு உரிமையை சட்டரீதியாகவும், அமைதியான முறையிலும் எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த விரிவான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கினேன்.
பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அநீதிக்கு விரைவில் ஒரு சுமுகமான மற்றும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். காசம்பட்டி கிராம மக்களின் நியாயமான ஆன்மீக உரிமை மீட்டெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு உறுதுணையாக தோளோடு தோள் நின்று போராடுவோம்!..
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தமிழ் மண்ணில் முதன்முதலில் ஒலித்த சிம்மக்குரல், நம் மதிப்பிற்குரிய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்க��ின் பிறந்தநாள் இ��்று!
அண்ணல் அம்பேத்கருக்கும் முன்பே, லண்டன் வட்டமேஜை மாநாடுகளில் (1930 - 1932) கலந்துகொண்டு, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்குரிமையும், முறையான பிரதிநிதித்துவமும் வேண்டும்" என்று பிரிட்டிஷ் அரசிடமே நெஞ்சுறுதியோடு வாதிட்ட மாபெரும் ஆளுமை அவர்.
1893-லேயே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ‘பறையன்’ என்ற இதழைத் தொடங்கி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சென்னை மாகாணச் சட்டசபை உறுப்பி��ராக (1923 - 1936) இருந்தபோது, பொது நீர்நிலைகளில் அனைவரும் தண்ணீர் எடுக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவரக் காரணமாய் இருந்தவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 'பூனா ஒப்பந்தத்தில்' அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து கையெழுத்திட்ட பெருமைக்குரியவர்.
"தன்னம்பிக்கை கொள்ளுங்கள், கல்வி பயிலுங்கள், உரிமைகளுக்காகப் போராடுங்கள்" என்று தன் வாழ்நாளெல்லாம் உழைத்த அந்தச் சமூகப் போராளியின் வழியில் நடப்போம். சாதியற்ற, சமத்துவமான சமுதாயத்தைப் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்!
வீழ்ந்துக் கிடந்த சமூகத்தை நிமிர்த்திய அந்தச் சரித்திர நாயகருக்கு எங்களின் வீரவணக்கங்களும், பிறந்தநாள் வாழ்த்துகளும்!
இன்றைய தினம் 28.06.2026, ஞாயிற்றுக்கிழமை - தமிழர் தேசம் கட்சியின், மாநில, மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு, பொன்னி அரங்கத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த, கூட்டத்திற்கு தலைமையேற்று, கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்து, நிர்வாகிகளிடம் விரிவான விவா��ம் நடத்தினேன்!. மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
எனது அன்பான முத்தரையர் சமுதாயச் சொந்தங்களுக்கும், சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கும், என் அன்பான வணக்கங்கள்.
நமது வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு எடுத்துச் செல்��வும், சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஒரு வலிமையான, அர்ப்பணிப்புமிக்க தலைமை தற்போதைய தேவையாக உள்ளது.
அந்த வகையில், சங்கத்தின் வளர்ச்சிக்காகத் த��்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, சமுதாயப் பணியே தன் மூச்சு என வாழும் தகுதியான ஒருவரை உங்களின் முன்னிலையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நமது வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் "மாநிலத் தலைவராக" மதிப்பிற்குரிய சகோதரர் திரு. நடராஜன் பூசாரி அவர்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுகிறார்!
மாநிலத் தலைவர் என்பது வெறும் பதவியல்ல; அது ஒட்டுமொத்த சமுதா���த்தையும், சங்கத்தையும் சரியான பாதையில் வழிநடத்தும் ஒரு பெரும் பொறுப்பு.சங்கத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கடைக்கோடித் தொண்டன் வரைக் கொண்டு சேர்த்து, இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவது இப்பதவியின் முக்கியத்துவமாகும்.
நீண்ட காலமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, சமுதாய மக்களுக்காகக் களத்தில் நின்று உழைத்த உன்னதப் போராளி. அடித்தட்டு மக்களின் சுக துக்கங்களில் பங்கெட���த்து, அவர்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் எளிய மனிதர். சங்கத்தின் கொள்கைகளைத் நெஞ்சில் ஏந்தி, கட்டுக்கோப்புடன் இயக்கத்தை வழிநடத்தும் ஆளுமைத் திறன் கொண்டவர்.
நமது சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நி��்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும், புதிய மாநிலத் தலைவர் திரு. நடராஜன் பூசாரி அவர்களுக்கு உங்களது முழு ஒத்துழைப்பையும், பேராதரவையும் நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
"ஒற்றுமையே வலிமை! சமுதாய முன்னேற்றமே நமது இலக்கு!"
அதிமுகவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்துக்கு
சில காலமாக பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த நிலையில்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட கழக ��ெயலாளராக ஞானகலைச்செல்வம் நியமனம்.
சிறப்பான தேர்வு ❤️👌
அதிமுகவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்துக்கு
சில காலமாக பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த நிலையில்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட கழக செயலாளராக ஞானகலைச்செல்வம் நியமனம்.
சிறப்பான தேர்வு ❤️👌
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 3 முக்கிய செய்தி அலைவரிசைகளை தன்னிச்சையாக நீக்கியது வண்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடக சுதந்திரத்தை நசுக்கும் இந்த சனநாயக விரோதப் போக்கைக் கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களை எவ்வித நிபந்தனையுமின்றி, உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும்!..
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மூன்று முக்கிய செய்தி சேனல்களான, @polimernews , @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகிய தொலைக்காட்சிகளை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தனது ஒளிபரப்புத் தொகுப்பிலிருந்து தன்னிச்சையாக நீக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சனநாயகத்தின் நான்காவது தூணாக ���ிளங்கும் ஊடகத் துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்களாட்சியில் மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதும், அரசின் செயல்பாடுகளை நடுநிலையோடு விமர்சிப்பதும் ஊடகங்களின் கடமையாகும். ஆனால், மாற்றுக்கருத்துகளுக்கோ அல்லது தங்களுக்குச் சாதகமற்ற செய்திகளுக்கோ இடமளிக்கக் கூடாது என்ற நோக்கில், அரசு பொதுத்துறை நிறுவனத்தைப் ப��ன்படுத்தி இவ்வாறு சேனல்களை முடக்குவது சனநாயக விரோதச் செயலாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்திற்கு நிலுவை��்தொகை காரணமாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆளும் அரசின் நிர்வாக சீர்கேடுகளால் மக்கள் படும் அவதிகளை இந்த மூன்று செய்தி சேனல்களும் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட மூன்று செய்தி சேனல்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக அரசு கேபிள் அலைவரிசையில் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும். அரசுக்கு எ���ிரான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, ஒளிபரப்பை முடக்குவதன் மூலம் ஊடகங்களை மறைமுகமாக அச்சுறுத்தக் கூடாது.
ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்க உருவாக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம், அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.
கருத்துச் சுதந்திரமும், ஊடகச் சுதந்திரமுமே ஒரு ஆரோக்கியமான சனநாயகத்தின் அடையாளமாகும்.
அதை நசுக்க முற்ப���ுவது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கூண்டில் அடைப்பதற்குச் சமம்.
அரசு தனது இந்த மக்கள் விரோத, ஊடக விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் உடனடியாக அலைவரிசைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
ஆளுங்கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. பொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது.
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும்,விமர்சிப்பதும், இயல்பானது.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த திரு. மாரிதாஸ் என்ற யூடியூபர் அமைச்சர்கள் திரு.ஆதவ் அர்ஜுனா, திருமதி.கீர்த்தனா மற்றும் அதிமுக ச��்டமன்ற உறுப்பினர் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக
சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை இரவோடு இரவாக வீடு புகுந்து கைது செய்துள்ளது.
இதனை தமிழர் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது சனநாயகத்திற்கு விரோதமானது.
சட்டம் ஒழுங்கு மற்றும் போதை கலாச்சாரத்திற்கு முந்தைய அரசுதான் காரணம் என கூறி தட்டிக் கழித்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோ��ப் விஜய்,ஒருவர் விமர்சனம் செய்தார் என்பதற்காக இத்தனை வேகமாக செயல்பட்டு அவரை கைது செய்திருப்பது பழிவாங்கும் போக்கை காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட, யூடியூபர் திரு.மாரிதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்து சனநாயகத்தை காத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
இன்றைய தினம், 05.06.2026, வெள்ளிக்கிழமை - தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, மாநில அரசின் சார்பில், புள்ளிவிவரங்கள் சேகரி��்புச் சட்டம் 2008-ன் படி (The Collection of Statistics Act, 2008) சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Survey) நடத்துவதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் @draramadoss அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம், தலைநகர் சென்னை, தியாகராயர் நகரில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எனது தரப்பு ஆக்க��்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்தேன்!
Already no representation in mins portfolio.Since Independence, the Mutharaiyar community has never received rep in Rajya Sabha. Will TVK break this long-standing exclusion& provide an opportunity to bring social justice to the ground?
@JhonArokiasamy@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று.
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ��ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத த��ம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று.
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரை���ர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
Mutharaiyars, one of the largest communities in Trichy, Pudukkottai and pockets of central Tamil Nadu, allege they have not received ministerial representation so far in TVK. In the previous DMK government, Alangudi MLA Siva Meyyanathan from the community held a ministerial berth.
TVKs Tiruchy East candidature could possibly go to https://t.co/lT2JN8PEHn. Krishnan who lost to Leema Rose in Lalgudi or his son Siranjeevi, both from the Mutharaiyar community. If TVK secures a win a ministerial berth for the community could become part of the ministerial positions.
பேரன்பிற்குரிய அனைவருக்கும் வணக்கம்!
எதிர்வரும் மே 23,2026 அன்று தஞ்சை மண்ணை தலைநகராக கொண்டு ஆண்ட தகைசால் வேந்தன், தன் வாழ் நாளின் தான் எதிர்கொண்ட 14 பெரும்போர்களிலும் வெற்றி மட்டுமே கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 வது சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் நிலத்தில் மூன்று நூற்றாண்டுகளாக ஆட்சி தந்த முத்தரையர் பேரினத்தில், நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் ஆட்சி காலம் வரலாற்று ஆசிரியர்களால் "பொற்காலம்" என போற்றப்படுகிறது. போருக்கு செல்லும் மன்னர்களெல்லாம் வஞ்சிப் பூவை சூடி, போரில் வென்ற பின் வாகைப் பூ சூடுவது வழக்கம். அனால் நமது பெரும்பாட்டனார் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் போருக்கும் செல்லும் போதே வாகைப் பூ சூடி போரிட்டுள்ளார் என்பது வரலாற்றுப் பெருமை.
மேலும், தமிழர்களின் வீரத்தையும், கொடைத்திறனையும், கலைநயத்தையும், கட்ட��டக்கலையையும், நீர்மேலாண்மையையும், நிலமேலாண்மையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசரின் புகழைப் போற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்னாளில், பேரரசரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இவ்விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
தமிழ் மண்ணின் காவலனுக்கு, 23.05.2026 அன்று முதல் நிகழ்வாக, திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, அதிகாலை 4.30 மணியளவில் காவிரி நீர் கொண்டு அரச முறைப்படி மங்கள அபிசேகமும், மலர் தூவி பெருவணக்கமும் செலுத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து தலைவர்கள் பேரரசருக்கு மரியாதை செய்கின்றனர்.
அதனை தொடர்ந்து, மாலை 5.00 மணியளவில் சிவகங்கை மண் அதிரும் வகையில், பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புடைசூழ, முழக்கங்கள் விண்ணைத் தொட, "சதயவிழா பேரணி” பையூர் தொடங்கி சிவகங்கை அரண்மனைவாசலில் நிறைவடைகிறது. பேரணியின் நிறைவாக, வீரமுத்��ரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பேரரசரின் வீர வரலாற்றையும், நம் உரிமைகளை��ும் முழங்கும் பிரம்மாண்ட "பொதுக்கூட்டம்" நடைபெறுகிறது. அனைத்து தமிழ் சொந்தங்களும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வீரத்தமிழ் பெருவேந்தனுக்கு தங்கள் புகழ்வணக்கத்தை செலுத்த வேண்டுமாய் பேரன்புடன் அழைக்கிறேன்!.. அலைகடலென திரண்டு வாரீர்!.. வாரீர்!..
பேரரசர் பெரும்பிடுகு முத்திரையினரின் 1351வது சதய விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பட்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை அணிவித்து மரியாதை செலுத்திய போது.
#DMKVirudhunagar#DMKAruppukottai
பேரரசர் பெரும்பிடுகு முத்திரையினரின் 1351வது சதய விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பட்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை அணிவித்து மரியாதை ��ெலுத்திய போது.
#DMKVirudhunagar
#DMKAruppukottai