#NeeyaNaana Sunday Episode
Education and Financial Problems
Mostly எல்லாருமே அந்த எப்டிசோட் பார்த்துதிருப்போம்.
பாக்கணும்னா Hostart ல இருக்கு. பாருங்க. பார்த்த அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது, நான் லாம் எவ்ளோ சொகுசா வாழ்ந்து வந்திருக்கேன்னு . அதுல வந்த பசங்க , பொண்ணுங்க பள்ளி / கல்லூரி போய்கிட்டே என்ன வேலை லாம் பாத்ருக்காங்கன்னு சொல்றேன். பால் கறப்பது, அதை வீடு வீடாக விற்பது, கூலி வேலை, கொத்து வேலை, விவசாய கூலி வேலை, காய்கறி மார்க்கெட் லோடு வேலை,செங்கல் சூளை, வீட்டு வேலை,ஜவுளி கடை , மில் வேலை, பழக்கடை, வாழை தார் சுமக்கும் வேலை.இதெல்லாம் உடல் உழைப்பு சார்ந்த வேலை.. அதுல பேசுன எல்லாரும் ரொம்ப சின்ன வயசுல இருந்து செஞ்சிட்டு இருக்காங்க.அதுல வந்த பசங்க கண்ணுல எல்லாருக்குமே சோர்வு நல்லாவே தெரிஞ்சது. காரணம் தூக்கம் ரொம்பவும் குறைவு. நினைச்சி பாக்கிறப்போ பயமும், பதட்டமும் வருது. நான் பள்ளி, கல்லூரி போன சமயத்துல ஓரு Record / Assignment கொடுத்தா அத முடிக்கணும்னு ஒரு உந்துதல் இருக்கும், நேரம் இருக்கும், ஆனால் சோம்பலா இருக்கும். ஆனால் இந்த பசங்க, பொண்ணுங்களுக்கு நேரமே இல்ல. அதுல வந்தவங்க நிறைய பேருக்கு தந்தை இல்லை..அந்த சுமை பெருஞ்சுமை. இருக்கும் போதே கொண்டாடி தீருங்க🙂
அவங்கள பாக்கிறப்போ அவ்ளோ Responsibility தெரியுது. கோபி அண்ணன் @Gobinath_C கண்ணுல தண்ணி வராம எப்படி ஷோ முடிச்சார்ன்னு தெரியல.
ஒண்ணே ஒன்னு தான் அதுல வந்தவங்க எல்லாரும் வாழ்க்கையில முன்னேறி அதே நீயா நானால வந்து ஒக்காரனும்.
நன்றி @TDKtweets
#NeeyaNaana #நீயாநானா #வாழை #Vaazhai
"அப்பா என்பவர் சம்பாதிக்கிறவர் மட்டும் இல்ல, அவர் ஒரு சப்போர்ட்.. அந்த உணர்வுலாம் சொன்னா புரியாது".. நான் அங்க போய் பார்க்கும் போது ப்ளாட்பாரத்துல படுக்க வச்சிருந்தாங்க.. ஆம்புலன்ஸ் சீக்கிரமா வந்துருந்தா கூட காப்பாத்தி இருக்கலாம்.. அங்க குடிக்க தண்ணி கூட கிடைக்கல - விமான சாகசத்தை பார்க்க சென்று இறந்த தன் தந்தையை எண்ணி அழுதுக்கொண்டே வேதனையை கூறிய மகன்
#Chennai | #Airshow | #Father | #Hospital | #PolimerNews