உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்நாளில், மரக்கன்றுகளை நட்டு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நெகிழிப்பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம். நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும்.
இயற்கையைக் காப்போம்;
நம் எதிர்காலத்தை வளமாக்குவோம்!
#WorldEnvironmentDay
#NowForClimate
#CMJosephVijay
எனது 6 வயது மகள் மேகாவை முதல்முறையாக அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளேன். இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில், #விஜய் யின் அரசு நம்பிக்கை அளித்த நிலையில் 2 ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துள்ளேன். #TVKVijay#Vijay@CMOTamilnadu
"டாஸ்மாக் கடைகளில் மாமுல் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது... இது பணியாளர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி அளித்துள்ளது..." டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பேட்டி
#TamilNadu | #TASMAC | #WorkersAssociation | #PolimerNews
மின்வெட்டு அறிவிப்பு!
நாளை சனிக்கிழமை (06.06.2026) அன்று மின் வாரியத்தின் முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை சென்னையின் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
முக்கிய பகுதிகள்:
🔹 சோத்துப்பெரும்பேடு
🔹 பல்லாவரம்
🔹 பஞ்செட்டி
🔹 தில்லை கங்கா நகர்
🔹 ராமாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் (மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் உட்பட)
மதியம் 2:00 மணிக்குள் பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும்.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1
#TNPDCL #TNEB #TANGEDCO #TamilNadu #PowerSupply
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (5.6.2026) சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (5.6.2026) தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் காயிதே மில்லத் அவர்களின் துயிலிடத்தின் மீது மலர்ப் போர்வை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
https://t.co/BshdjRcvl8
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
CM சார் எங்களுக்கு நீதி வேணும்.. 1 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேனரை பிடித்து கொண்டு வந்த குடும்பத்தினரால் பரபரப்பு
#Ranipet#Landissue#CMvijay#NewsTamil24x7
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.