திருத்தணியில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிற பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள சந்தையை, கலைஞர் காய்கறி அங்காடி என பெயரை மாற்ற திருத்தணி நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் பெயரில் இருப்பதை மாற்ற வேண்டாமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், இந்த பெயர் மாற்றத்தினால் இதை எதிர்கட்சிகள் அரசியலாக்குவதை தவிர்க்கும் வகையில், இக்கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைவர் திரு @SPK_TNCC
குஜராத் ஜாம்நகர் உயிரியல் பூங்காவில் ஃபோட்டோஷூட் செய்ய நேரம் ஒதுக்கும் பிரதமர் @narendramodi அவர்களே, தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள். ஏன் தமிழக மீனவர்கள் பற்றி பேசவோ அல்லது சிந்திக்கவோ உங்களுக்கு நேரமில்லையா...???
திரு @annamalai_k அவர்களே நீங்கள் கூறிய 'உடனடி தீர்வு' என்பது இதுதானா?.
"தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்"
https://t.co/WoPUD34S6F
மோடி அரசாங்கம் புதிய வருமான வரி சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இந்த சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், வருமான வரி அதிகாரிகள் உங்கள் டிஜிட்டல் கணக்கை அணுகும் உரிமையைப் பெறுவார்கள் என்று செய்தி கூறுகிறது.
அரசு அதிகாரிக்கு சிறிது சந்தேகம் இருந்தால் போதும் எப்போது வேண்டுமானாலும், உங்கள் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள், வங்கி கணக்கு, வர்த்தக கணக்குகளை சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதிக்க முடியும்.
இது மிகவும் ஆபத்தானது.
மோடி அரசு ஏற்கனவே நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
இப்போது, இந்தச் சட்டத்தின் உதவியுடன், அது விரும்பும் எவரையும் துன்புறுத்தி அழிக்க முடியும்.
இந்தச் சட்டத்தை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த முடியும்.
இது ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.
- இந்தச் சட்டம் ஜனநாயகத்தின் மதிப்புகள் மீதான தாக்குதல்
- இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனியுரிமை உரிமையின் மீதான தாக்குதல்.
இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் திரு. @girishgoaINC அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. @SurajMNHegde தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @SPK_TNCC மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தி பேசியும் மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து கோவைக்கு வருகை தரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
📍காந்தி பூங்கா | கோவை
#GoBackAmitShah
Video Courtsey : @News18TamilNadu
கோவைக்கு வருகை தரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்களின் கண்டன உரை
📍காந்தி பூங்கா | கோவை
#GoBackAmitShah
Video Courtsey : @News18TamilNadu
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தி பேசியும் மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து கோவைக்கு வருகை தரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
📍காந்தி பூங்கா | கோவை
#GoBackAmitShah
"TNCC EXPANDS GRASSROOTS PRESENCE WITH “GRAMA (VILLAGE) CONGRESS COMMITTEE PROGRAM” TODAY WITH ISSUING OF PHOTO ID CARDS TO THE VILLAGE & WARD COMMITTEE OFFICE BERAERS"
As per the directions of the congress working committee and as per the wishes of our visionary leaders Shri. Rahul Gandhi Ji, we have started a massive revamping program to strengthen our organisational units at the village and grassroots levels. TNCC have constituted a committee comprising of a chairman, seventeen members state level coordination committee, parliamentary convenors for all the 39 parliamentary constituencies and two coordinators each for all the 234 assembly segments. At present we have deployed a task force of 1000 dedicated congress men assigning specific areas to coordinate the revamping exercise and to form village committees in all villages in Tamil Nadu.
In continuation of this program, today Photo ID cards issuing programs were organized for Village committee office bearers & members, and Ward committee office bearers at Sriperumbudur and Manimangalam Panchayat, Manimangalam (Village) of Kanchipuram (Dt), also at Pallavaram of Tambaram Corporation in Chengalpattu North (Dt.). The photo ID cards were issued by AICC Secretary Shri Suraj M.N. Hegde, Former TNCC President Shri K.V. Thangkabalu, Village Congress Formation Committee Chairman Shri S. Peter Alphonse in the presence of TNCC President Mr. Selvaperunthagi MLA. It was attended by DCC Presidents, Ex.MPs, Ex- MLA’s, Parliament Coordinators, Assembly Convenors, DCC Observers and party cadres.
In the evening at Aryankulam Panchayat, Nanguneri Assembly constituency, Tirunelveli (Dt.), the ID cards were issued to village committee office bearers & members. It was issued by AICC Secretary Shri Suraj M.N. Hegde, Former TNCC President Shri K.V. Thangkabalu, Village Congress Formation Committee Chairman Shri S. Peter Alphonse, in the presence of TNCC President Mr. Selvaperunthagi MLA. The event was organized by and Nanguneri MLA Shri Ruby R. Manoharan. CLP Leader Shri S. Rajeshkumar MLA, Former Union Minister Shri R. Danushkodi Adithan, DCC Presidents, Ex.MPs, Ex-MLA’s, Parliament Coordinators, Assembly Convenors, DCC Observers and other cadres attended the program.
@INCIndia@kharge@RahulGandhi@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@SurajMNHegde@Pawankhera@INCSandesh
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப் பெருந்தகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
#Kanniyakumari#Congress
15.02.2025: Public Meeting on "Gandhi, Nehru, Ambedkar, and the Constitution:
Later in the evening today, in connection with the Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan Abhiyan, The Tirunelveli District Congress Committees organized a Public Meeting in Tirunelveli, Palayamkottai on the theme "Gandhi, Nehru, Ambedkar, and the Constitution.”
The meeting was chaired by TNCC President Shri K. Selvaperunthagai MLA in the presence of Former Union Finance Minister Shri P. Chidambaram, MP, AICC Secretary Shri Suraj M.N.Hegde. CLP Leader Shri S. Rajeshkumar, MLA, Tirunelveli MP Shri Robert Bruce, TNCC Treasurer and Nanguneri MLA Shri Ruby R. Manoharan, Former TNCC President Shri K.V. Thangkabalu, https://t.co/wWKVhnjiZN, Former Union Minister Shri R. Danushkodi Adhitan, https://t.co/wWKVhnjiZN along with DCC Presidents, functionaries, and cadres took part.
@INCIndia@kharge@RahulGandhi@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@SurajMNHegde@Pawankhera@INCSandesh
அறிக்கை
ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற மோடி ஆட்சியில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை வஞ்சிக்கிற போக்கு தொடர்வதையே இவரது பேச்சு உறுதிப்படுத்துகிறது. அரசமைப்பு சட்டப்படி பல மாநிலங்களின் ஒன்றியத்தை தான் பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். அரசமைப்பு சட்டப்படி ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல், பொது பட்டியல் என மூன்று பிரிவுகளாக அதிகாரங்கள் பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் கல்வியை பொறுத்தவரை பொதுப் பட்டியலில் உள்ளது. பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் குறித்து ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் மாநில அரசை கலக்காமல் முற்றிலும் புறக்கணித்துவிட்டு பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து அபகரித்து வருவது கூட்டாட்சி தத்துவத்தை உதாசீனப்படுத்துகிற செயலாகும்.
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும், அதில் கூறப்பட்டுள்ள மும்மொழி கொள்கையின்படி நடைபெறுகிற இந்துத்துவாவை புகுத்துகிற பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்கவேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியதை பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் ஏற்க மறுத்து கடிதம் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை 1959 இல் வழங்கப்பட்ட நேரு உறுதிமொழியின் அடிப்படையில் 1968 முதல் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கையின் மூலமாக மும்மொழி திட்டம் என்ற போர்வையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நேரு உறுதிமொழிக்கு எதிராக இந்தி பேசாத தமிழக மக்கள் மீது திணிக்க ஒன்றிய கல்வித்துறை முயற்சி செய்கிறது.
தர்மேந்திர பிரதான் கூற்றுப்படி சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 2024 - 25க்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடியை ஒன்றிய கல்வித்துறை வழங்க மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அத்திட்டத்தினால் பயன்பெறுகிற 40 லட்சம் மாணவர்களும், 32 ஆயிரம் ஆசிரியர்களும் ஊதியம் பெற முடியாமல் இருக்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒன்றிய அரசு 60 சதவீதம், மாநில அரசின் பங்கான 40 சதவீதம் நிதி பகிர்வின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய கல்விக்கொள்கையை ஏற்காத ஒரே காரணத்திற்காக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மறுப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது புதிய கல்விக்கொள்கையின் மூலமாக நவோதயா பள்ளி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் மும்மொழி திட்டம் கடைபிடிக்கப்படுவதால் அன்றைய தமிழக அரசு அத்திட்டத்தை ஏற்க மறுத்து விட்டது. அதற்காக அன்றைய ஒன்றிய அரசு கல்விக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று கூறாமல் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்க முடியாது என்று கூறுவதற்கு மாநில அரசுக்கு இருக்கிற உரிமையை மறுக்கிற வகையில் பழிவாங்கும் போக்கோடு கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பது கூட்டாட்சியை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.
சமீபத்தில் காசியில் தமிழ் சங்கமம் மிகுந்த பொருட்ச்செலவில் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் தமிழுக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் முருகன் கூறியிருக்கிறார். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்த ஆதாரத்தின்படி மத்திய சமஸ்கிரத பல்கலைக்கழகத்திற்கு 2017 முதல் 2022 வரை ரூ.1,074 கோடி சமஸ்கிரத மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே காலத்திற்கு முதன் முதலில் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு ஒன்றிய பாஜக அரசு 2017 முதல் 2022 வரை ரூ. 22.94 கோடி தான் ஒதுக்கப்பட்டது. அதேபோல் தமிழ், கன்னடம் ஆகிய தென்னக மொழிகளுக்கு தலா ரூ. 3 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேசிய மொழிகளாக அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள 22 மொழிகளை சமமாக கருதாமல் 18400 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிரத மொழிக்கு ஒன்றிய அரசு நிதியை வாரி வழங்கிவிட்டு, 8 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழிக்கு சொற்பமான நிதியை வழங்கிவிட்டு ஒன்றிய அரசு காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்துவதை விட ஒரு கபட நாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் விரோதமாக செயல்படுகிற ஒன்றிய பாஜக அரசின் வேஷத்தை கண்டு தமிழக மக்கள் என்றைக்கும் ஏமாற மாட்டார்கள். அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டிய ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மிகப்பெரிய அநீதியாகும். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சாவாலாகும். இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்.
@INCIndia@kharge@RahulGandhi@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@SurajMNHegde@Pawankhera@INCSandesh@KRajuINC