சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
என் அன்பு தலைவர்.... மக்கள் தலைவர்.... தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணன் @annamalai_k ... அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐🙏🙏🙏
#KAnnamalai
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதி திமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில், கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் திரு கே.என்.நேருவுக்கு நெருக்கமான நபராகவும் அறியப்படுபவர் இந்த ரமேஷ்.
தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர். இன்னும் எத்தனை மாநிலங்களில், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர், திராவிட மாடலை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது, கேரள மாநில காவல்துறையினர் விசாரணையில் தெரிய வரும்.
சேலம் கோட்டை பகுதியில் உள்ள தோக் சால் திருமண மண்டபத்தின் செயலாளரான திரு. நௌமான் என்பவரை, கோட்டை பகுதி திமுக செயலாளர் இப்ராஹிம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சியளிக்கிறது.
திமுகவினர் ரவுடித்தனம் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்கு, தமிழகம் முழுவதுமே மோசமான சூழலில் இருக்கிறது. ரவுடித்தனம் செய்தால், நாளை திமுகவில் அமைச்சராக்குவார்கள் என்ற எண்ணத்தில், திமுக நிர்வாகிகள் அனைவருமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கொட்டம் இன்னும் இரண்டு மாதங்களில், தமிழக மக்களால் நிரந்தரமாக அடக்கப்படும்.
சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில், கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருப்பது, தமிழகத்திற்கே தலைகுனிவு. புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், மிக, மிக அதிகரித்துள்ளன. சமீபத்தில், திருத்தணி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில், ஒரு வடநாட்டு இளைஞரை, இளம் சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளியை பார்த்தோம். அதன் பிறகாவது, இந்தச் சொரணையற்ற திமுக அரசு, கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் திமுகவில் பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் திரு @mkstalin, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பள்ளிகளில், தற்போது போதைப்பொருள் புழக்கமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. பிறகு எப்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்?
16 வயது சிறுவனுக்குக் கூட கஞ்சா கிடைக்கும் இடம் தெரிந்திருக்கிறது. சென்னை மாநகரக் காவல்துறைக்கு இன்னும் தெரியவில்லை என்பது எட்டாவது உலக அதிசயம்.
தமிழக பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். திமுக ஆட்சியில், நமது குழந்தைகள் எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையே நீங்கள் தான் காப்பாற்றியாக வேண்டும். இன்று அரசுப் பள்ளி வரை வந்துவிட்ட கஞ்சா புழக்கம், நம் வீடு வரை வர வெகுநாட்கள் ஆகாது. இந்தக் கையாலாகாத திமுக அரசையோ, அதன் ஏவலாளியாகவே மாறிவிட்ட தமிழக காவல்துறையையோ, இனியும் நம்பி பலனில்லை. குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை தயவுசெய்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வைத்திருங்கள்.
இந்த போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும்.
சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது. முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன.
முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு மாய உலகத்தில் அமர்ந்து கொண்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பித்துச் செல்வதல்ல முதலமைச்சரின் பணி.
கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கம், சமூகத்தில் மிகப் பெரிய அவலத்தை ஏற்படுத்தியிருப்பது, பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளிப்படையாகியிருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசின் கையாலாகாத்தனம், அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது.
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்ளும் இழிநிலை இருக்கிறது. அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு. பிறகு எப்படி குற்றம் செய்பவர்களுக்குப் பயம் வரும்? சாதாரண பொதுமக்களுக்குத்தான் பயம் வருகிறது.
திமுக ஆட்சியின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம்.
சேலம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே, திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும், "நான் அமைச்சர் ஆள், ஆட்சி எங்களுடையது” என்று கூறி காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதால், மேச்சேரி காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக நிர்வாகிகள், சட்டத்தையும், காவல் துறையையும் அச்சுறுத்துவது சாதாரணமாகி விட்டது. திமுக ஆட்சியில், சட்டம், திமுகவினரின் முறைகேடான செயல்பாடுகளுக்கே துணை நிற்கிறது.
திமுக கட்சியில் இருந்தால், என்ன குற்றம் செய்தாலும் நடவடிக்கை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது திமுக ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றுமொரு உதாரணம். குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், உடனடியாக இந்த சட்ட விரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவே சட்டமும், காவல்துறையும். ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்குத் துணை நிற்பதற்கு அல்ல.
100 நாள் வேலைவாய்ப்பை..... 125 நாட்களாக உயர்த்திய.,... பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் நல்லாட்சியை குறை கூறும்...... தமிழ்நாட்டின் ...திருட்டு திராவிட கூமுட்டை கோமாளி ஆட்சியாளர்களே..... இந்த தமிழகத்தில் அறியாத மக்களை இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் ஏமாற்றுவீர்கள்.......🤦
இன்றைய தினம், நாடாளுமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் உரையாற்றிய மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள், திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றலாம் என தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக, திமுக கொண்டு வந்துள்ள பதவிநீக்க தீர்மானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், தனது வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ளவே திமுக இதை செய்திருப்பதாக கூறினார்.
காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கியுள்ள நிலையில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?
இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
@KalyaanBJP_ உனக்கு என்னடா நீ ஒரு பைத்தியம்.... உன்னை எல்லாம் ஒரு ஆளுன்னு கட்சியில வச்சிருக்காங்க பாரு.... அந்த வார் ரூம் ஓனரோட கால் தூசிக்கு ஆக மாட்டேன் போய் வேற வேலை மயிரை பாரு