The #hate, #prejudice, #stereotyping, #Mistrust etc On the political class stems from the lack of BASIC knowledge of #Governance & resulting INABILITY of our citizens to QUESTION our #ElectedRepresentatives !
Governance / Law Making is taught to 4th-6th graders across the globe !
No big deal if a person is a #MLA of a constituency.
What MATTERS is that is She/He the
M ost L oved A rasiyalvathi
of that constituency😅🙏🏾
If your people don't LOVE you cutting across party lines then the post has little value.
Respect #Democracy
QUESTION your ElectedRep 🙏🏾
தவெகவின் இன்றைய ஸ்டிக்கர், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிறுவனத்தின் மீது!
நாளைய ஸ்டிக்கர் திமுக ஆட்சியில் கோவையில் பிரம்மாண்டமாக கட்டிய பெரியார் அறிவுலகத்தின் மீது!
திமுக ஆட்சியில் கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பதையும், நிறுவனங்களைத் திறந்து வைப்பதையும், திமுக அரசின் திட்டங்களின் பெயரை மாற்றுவதையும், அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதையும் தவிர்த்து, உருப்படியாக ஒரே ஒரு வேலையாவது செய்து காட்டுங்கள் மூடர் கூட்டத்தின் டம்மி முதல்வர் அவர்களே!
Chennai folks there is a citizen's protest against the SIR and Gyanesh Kumar happening tomorrow at
* Rajarathnam Stadium in Egmore
* starting from 10 am.
Please make your way there, spread the word, forward this on your whatsapp groups and RETWEET this far and wide!
இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.
இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.
ஆர்ப்பாட்டம் முடித்து வந்த எனது கொளத்தூர் @DMKITwing அணியை சேர்ந்த உடன்பிறப்பு திரு செந்தில் - பகுதி ஒருங்கிணைப்பாளர் , கொளத்தூர் தொகுதி திமுக ஐடி விங், கிட்ட இருந்து கழகக் கொடியை பிடுங்கி தரையில் போட்டு மிதித்து அராஜகம் செய்த TVK வினர் தட்டி கேட்ட
திமுகவினர கைது செய்து வண்டியில் அழைத்துச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அம்போ என்று அப்படியே விட்டுவிட்டு சென்ற அவர்களை கைது செய்த போலீசார்..
பின்பு லோக்கல் போலீஸ்
GH ல அவசர அவசரமாக சேர்த்து கை உடைந்தவரை அரைகுறையாக கட்டு மரத்து போற ஊசி போட்டு அமைச்சர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் உடனே அனுப்பிவிட்ட கொடூரம்...
மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @PKSekarbabu & மேயர் @PriyarajanDMK உடனே சென்றதால் மீடியாவுக்கு தெரிந்து விடக்கூடாது என்ற பயத்தில் விட்டு விட்ட போலீஸ்..
இதுதான் விஜய் ஆட்சியின் லட்சணம் விஜய் போலீஸின் லட்சணம்...
@mkstalin@Udhaystalin@arivalayam@TRBRajaa
கழக அரசால் கொண்டுவரப்பட்ட அறிவுலகத்தில், கழக அரசின் திட்டத்தின் பெயர் இருக்கக் கூடாதா? இதையெல்லாம் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வருகிறது? கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கிறதா? விஜய் அவர்களே, ஒரு திட்டத்தைக்கூட சொந்தமாகச் செய்யத் துப்பில்லாத டம்மி விஜய் அவர்களே, பெயர் மாற்றம், மடைமாற்றம் செய்ய மட்டும் தான் உங்களுக்குத் தெரிகிறது
🚨List of project halted/status unknown after new TVK Govt took over :
1. Parandur Airport & Aerocity - Halted
2. Metro extension to Parandur - Halted
3. Sports City - Halted
4. ECR Flyover - Halted
5. Guindy-Velachery flyover - Halted
6. Cuddalore Sipcot Expansion - Halted
7. Hosur Tidel Park - Design ready, Environment Clearance filed. Stuck at tender stage
8. Hosur Knowledge Corridor- No work started
9. Coimbatore Cricket Stadium - No Bidders
10. Last Stretch of Chennai Peripheral Ring Road - Tender Cancelled
11. 1,000 AC Electric Buses - Tender Canceled
12. Mini Buses for CMRL - No Bids
13. Cheyyar Sipcot Ph-3 - Scrapped
நீதிமன்றம்: தல குனிஞ்சி நடங்க பார்த்திபன்!
பாமாயில் விநியோகிக்க நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதில் மாபெரும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக, தவெக அரசின் டெண்டர் ஒதுக்கீட்டு உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது!
விதிமுறைகளைப் பின்பற்றி நேர்மையாக ஒரு டெண்டரைக் கூட விடத் துப்பில்லாமல் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியது ஏன்? உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ரகசியமாகத் தீபாவளி 'பரிசு' (டெண்டர்) கொடுத்ததன் பின்னணியில் நடந்த Party Fund டீலிங் என்ன?
ஒருபுறம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற விலையில் வாங்க டெண்டர் விட்டு மின்சாரத்தில் மெகா கொள்ளை, மறுபுறம் சாமானிய மக்கள் பயன்படுத்தும் ரேஷன் பாமாயிலிலும் கை வைக்கும் அளவுக்கு உங்களது Party Fund பசி உச்சத்திற்குச் சென்றுவிட்டதா?
#TVKFailsTN
Another day, another desperate attempt to erase Thiru M.K. Stalin’s legacy!
Insecurity can make you erase a name. It cannot make you earn the respect that name commands!
Muthuvel Karunanidhi Stalin will always be people’s முதல்வர்!!
#DMK4TN#TVKVijayFails#Dravida_Senai
மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார்.
நமது #DravidianModel அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம்.
அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்.
#AbdulKalam
மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது.
இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.
ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?
இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
#DeltaFarmers #Cauvery #MetturDam
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.