மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (28.07.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (28.07.2026) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
மண், மொழி, மானம் என்று மாவீரம் பேசும் திமுகவின் முகமூடியே முகமாக இருப்பதை நிரூபிக்க, ஏராளமான தரவுகள் இருக்கின்றன. இதற்கான அழிக்கவியலா தரவுகளே, தேசிய கீதத்திற்குப் பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பெற்ற நிகழ்வுகள்.
கடந்த 24.9.2024ஆம் தேதி, சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 166ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 04.10.2023ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 85ஆவது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் தி.மு.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் கலந்துகொண்டும், 14.10.2024ஆம் தேதி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39ஆவது பட்டமளிப்பு விழாவில் தி.மு.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கோவி. செழியன் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகள். இவற்றில் எல்லாம் கலந்துகொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டு, தமிழ்நாட்டின் மரபை மீறிய விழாக்களை மண், மொழி, மானம் காக்கும் கொள்கைவழி நின்று சிறப்பித்துள்ளனர்.
மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியில் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்ற 02.08.2021ஆம் தேதி தமிழகச் சட்டப் பேரவையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் திறக்கப்பட்ட தமிழகச் சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவிலேயே, முதலில் தேசிய கீதமும் இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்போதும் தமிழகச் சட்டமன்றத்தின் மரபை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தைக் கொள்கைப் பேரியக்கமாகக் காத்து நின்றதும் தி.மு.க.தான்.
ஆனால், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்கிற 28.01.2026 தேதியிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையையும் பொருட்படுத்தாமல், தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் உணர்ந்து தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையின் மரபையும் மாண்பையும் காக்கும் வகையில் 18.06.2026ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆளுநர் உரை நிகழ்ச்சியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, தமிழகச் சட்டப்பேரவையின் மரபும் மாண்பும் காப்பாற்றப்பட்டது.
அது மட்டுமின்றி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விழாவையே, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாததை ஏற்க முடியாது என்று கூறிப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில்தான் இதுபோன்ற தமிழ் காக்கும் முயற்சி தொடர்கிறது என்பதை மக்கள் அறிவர். வழக்கம்போல இதில், திமுக கண்ணை மூடிக்கொண்டு கதறவே செய்யும்.
தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும், தமிழகச் சட்டமன்றத்தின் மரபைச் சீர்குலைத்தும், தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்தியும் மக்கள் விரோத ஆட்சி நடத்திய தி.மு.க.வின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மக்கள் ஆதரவில் அமையப்பெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் பேணிக் காக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற முழக்கம், நம் தமிழ்நாட்டு மண்ணின் உயிர் முழக்கம். எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம். மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம். தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.
மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களின் சாலைகளை உல்லாசநிதியின் உரைகளைப்போல ஓட்டைக்குழிகளாக மாற்றி நாள்தோறும் கடத்தப்பட்டு வந்த வளச்சுரண்டலை ஆட்சிக்கு வந்த முதல்நாள் முதல் சிரமேற்கொண்டு தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.
அதன் தொடர்ச்சியாக, குவாரிச்சுரண்டலுக்கு சம்மட்டி அடிகொடுக்கும் வகையிலும், 3 மாதங்களுக்கு எல்லையோர மாநிலங்களுக்கு கட்டுமானப்பொருள் ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது!
இதன் மூலம் தமிழ்நாட்டுக்குள் கட்டுமானப்பொருட்களின் இருப்பை அதிகரிக்க முடியும். இப்படி அதிகரிப்பதன் மூலம் அந்த பொருட்களின் விலைவாசி குறையும். புதிய கட்டுமானங்களுக்கான தொடக்கவிழாக்கள் அதிகமாக நடைபெறும் இப்பருவகாலத்தின் பலன்களை சாமானிய மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
The Text of the D.O. Letter dated 28.7.2026, addressed to the Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modi, from the Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay, regarding Mekedatu Dam.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026) தலைமைச் செயலகத்தில், என்டிடிவி (NDTV) தலைமைச் செயல் அலுவலர் திரு. ராகுல் கன்வால், நிர்வாக ஆசிரியர் திரு. ஷிவ் அரூர், அரசியல் பிரிவு ஆசிரியர் திருமதி வசுதா வேணுகோபால், நிகழ்வுகள் பிரிவுத் தலைவர் திரு. ராகுல் ஷா, கருத்துக்கணிப்பு நிபுணர் திரு. பிரதீப் குப்தா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026) தலைமைச் செயலகத்தில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் திரு. ஆர். சுகுமார், தேசிய அரசியல் பிரிவு ஆசிரியர் திருமதி சுநேத்ரா சௌத்ரி, உதவி ஆசிரியர் திரு. விஜய் கார்த்திக் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026) தலைமைச் செயலகத்தில், வேலூர், கிருத்துவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஐ. ராஜேஷ், இணை இயக்குநர் டாக்டர் தீபக் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் திரு. துரை ஜாஸ்பர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026) தலைமைச் செயலகத்தில், வேலூர், விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன், துணைத் தலைவர்கள் டாக்டர் சங்கர் விசுவநாதன், டாக்டர் சேகர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி. செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.