தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் சார்பில் இன்று திருவாகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்றேன்.
60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பண்ருட்டி நகரத்தில் உள்ள 40 வருடத்திற்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள்,மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை புதிதாக அமைப்பது குறித்தும், புதிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் பேசினேன்.
@KN_NEHRU#TNAssembly
2009 ல் ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு கொரோனா நெருக்கடிநிலை அமலில் உள்ள காரணத்தால் குறை���்த எண்ணிக்கையிலான தோழர்களுடன் பண்ருட்டி இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தினேன்.
கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் சூழலில் பண்ருட்டி நகரின் வணிகப் பகுதிகளுக்கு நேரில் சென்று பொது மக்கள், மற்றும் வணிகப் பெருமக்களை நேரில் சந்தித்து முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும்,சமூக இடைவெளியை பின்பற்றக் கோரியும்,பொதுமக்களிடமும் வணிர்களிடமும் வலியுறுத்தினேன்.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் எனது தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் அனைவரும் சேர்ந்து நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினேன்.
பண்ருட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று பேரிடர் காலத்தில் உணவு தயாரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தியதோடு அங்கு இன்று தயார் செய்யப்பட்டிருந்த காலை உணவினை உண்டு அதன் தரம் குறித்து ஆய்வு செய்ததேன்.
கொரோனா நோய் பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தியும்,அரசின் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தியும் பொதுமக்களிடமும் வணிகப் பெருமக்களிடமும் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டேன்.
கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களும் வணிகப் பெருமக்களும் அரசின் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பண்ருட்டி நகரில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் நேரில் சென்று வலியுறுத்தியதோடு,முகக்கவசம் வழங்கினேன்.
பண்ருட்டியில் அமைந்துள்ள திருவருட்பிரகாச வள்ளலார் சபையுடன் இணைந்து பண்ருட்டி நகரத்தில் இருக்கும் ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டவர், வீடற்றோர்,ஆகியோருக்கு மதிய உணவு வழங்கியதோடு அவர்களுக்கான ஒரு நாள் உணவு செலவையும் ஏற்றுக்கொண்டேன்.
பண்ருட்டி நகராட்சியின் முன்களப் பணியாளர்களாக துப���புரவு மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்து, நோயின் தீவிரம் குறித்தும்,அதை தடுத்திட அனைவரும்ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்தும் அவர்களிடையே பேசினேன்.
கொரோனா பேரிடர் காலத்தில் NLC நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுதுமாக ஒத்துழைக்கக் கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்று எனது கருத்துக்களை முன்வைத்தேன்.
கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வீதம் வழங���கும் திட்டத்தை தொடங்கி வைதேன். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்.
இடம் - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி, சித்திரைச்சாவடி.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி சட்டமன்றத் தொகுதியில் மக்களின் பேராதரவோடு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுகவின் இளைஞர��ி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின். அவர்களை சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
@Udhaystalin