"காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"
Finally பெருசு accepts the reality!
But, Innum CM ku respect eh illa.. oru edathula kuda CM nu mention panalaa.. Worstuh.. @rajinikanth@TVKVijayHQ@CMOTamilnadu
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
FORMAT C-2
DECLARATION REGARDING CANDIDATE'S CRIMINAL ANTECEDENTS PURSUANT TO THE ORDER OF THE SUPREME COURT
This declaration is issued on behalf of the Political Party Tamilaga Vettri Kazhagam concerning the candidate nominated to contest in the upcoming Tamil Nadu Legislative Bye-Election, 2026.
Name of the Political Party: Tamilaga Vettri Kazhagam
Name of the Election: Bye-Election - to the Tamil Nadu Legislative Assembly, 2026
Name of the State / UT: Tamil Nadu
Name of the Constituency: 101 - DHARAPURAM (SC) Constituency
Name of the candidate: SATHYABAMA.P
https://t.co/hZDNFTvafc
தி.மு.க.வின் வரலாற்றை அப்படியே பிரித்து மேய்பவர்தான் இமாலய சாதனை புரிந்த இளம் கலைஞர். அதனால்தான் வரலாற்றுத் தரவுகளுடன் அப்படியே அதிஅற்புதமாகப் பேசிக் கிழிக்கிறார்.
அவர்களின் சென்ற ஐந்தாண்டு ஆட்சியில் நடந்ததையே அடித்துச் சொல்லிவிட்டு, பிறகு மாற்றிச் சொல்லிவிட்டு வாபஸ் பெற்றவர்தான் சட்டசபையில் சங்கநாதமாகப் பேசிக் கிழிக்கிறார்.
ஆதாரம் கேட்ட ஆபாச வாரிசுக்கு, அவர்களின் ஆதிகாலம் தொட்டு ஊழல் சரித்திரத்தை அம்பலப்படுத்தும்போது வாயடைத்து நின்றவர்தான் பொதுவெளியில் பேசிக் கிழிக்கிறார்.
சட்டசபையில் உட்காரும் நாகரிகம்கூட தெரியாமல் சரிந்துகொண்டும் சொரிந்துகொண்டும் உட்காருபவர்தான், சபை நாகரிகம்,மாண்பு குறித்தெல்லாம் ஒரேயடியாகப் பேசிக் கிழிக்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி அபாரமாகப் பேசிக் கிழிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இருந்ததே இல்லை என்றுதான் மக்கள் இந்த ஆபாசநதியைக் கிழிகிழியென்று கிழிக்கின்றனர்.
இனியும் அடுத்தவரைப் பேசிக் கிழிக்கிறார் என்று அநாகரிகமாகப் பேசினால்
இந்த ஊழல் வாரிசின் முகத்திரை படிப்படியாகக் கிழிக்கப்படும்.
அண்ணா ஆரம்பித்த பொன்னான திமுகவை, புண்ணாக்கி சின்னாபின்னமாக்கி வரும் தந்தையும் மகனும் தாறுமாறாக மனம் தடுமாறி இருக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகப் பின்னோக்கிச் சென்று உண்மையைப் பேசத் தொடங்கி உள்ளனர். மின்வெட்டையும் அரிவாள் வெட்டையும் ரைமிங்காகவும் டைமிங்காகவும் பேசுவதாக நினைத்து 2006 திமுக ஆட்சியில் தமிழ்நாடே மின்வெட்டில் மூழ்கியதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்திப் பெருமிதம் கொள்கின்றனர்.
அதுமட்டுமா?. அரிவாள் வெட்டைப் பற்றிப் பேசி தி.மு.க.வின் மூத்த முன்னோடியாகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த திரு.தா.கிருட்டிணன் அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதை இன்றைய Gen Z தலைமுறைக்கும் தெரியப்படுத்தி, தி.மு.க.வின் வன்முறை வெறியாட்டத்தைப் புரிய வைக்கின்றனர்.
ஒரே கொடுமை என்னவெனில், தந்தையாவது கட்சி மேடையில் கதைத்தார். மகனோ, மங்கல நிகழ்ச்சியான திருமண விழாவில் தங்கள் ஆட்சியின் பழைய வரலாற்றைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்.
அப்படியே இனிவரும் காலங்களில், உங்கள் குடும்பத்தின் ஊழல் சாதனைகளையும்
உதார் தியாக புரூடாக்களையும் உளறிக்கொட்டி மக்களை உஷார்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பெருமாளுக்கே பட்டை நாமம் சாத்திய பவளவிழா பாப்பா!
“ஊரை அடித்து உலையில் போடுவது” என்று பழமொழி சொல்வார்கள். இங்கு கோவில் நிலத்தைச் சுருட்டி, தனது பாக்கெட்டில் போட்டுள்ளது பவளவிழா பாபாவான தி.மு.க.
ஊழலின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் உத்தம திமுகவின் பகுதிச் செயலாளர், ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்ற கட்டுமரக் கதையைக் கட்டி, பெருமாளுக்கே நாமத்தைப் போட்டு, தனது பெயரில் மாற்றியுள்ளார்.
விஞ்ஞான ஊழல் செய்யும் வித்தையை விழுதுகளுக்கும் விழுந்து விழுந்து கற்றுத் தந்ததன் விளைவு, கோவில் நிலம் அபகரிப்பு வரை வந்துள்ளது.
அறநிலையத் துறையில் எத்தனை அறிவிப்புகள் வரப்போகிறது என்று தெரிந்தவருக்கு கோவில் நிலத்தில் தான் கட்சி அலுவலகம் இயங்குகிறது என்பது தெரியுமா? அல்லது தெரிந்தும்....
"சிவன் சொத்து குலநாசம்" என்று வசனம் பேசிய திமுக,
"அரியும் சிவனும் ஒண்ணு,
அறியாதவன் வாயில மண்ணு."
என்பதை வசதியாய் மறந்ததோ?
வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில், மக்கள் பணத்தை இதற்கு முன் தொட்டவர்களை விட மாட்டோம் என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?
பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இந்நாள் இரசிகர்.
கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?
மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?
அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப் புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?
Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்!
“ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.
வீரமணி POCSO வழக்கில் அமைதிகாக்கும் கொத்தடிமை கூடாரம்!
தொழிலதிபர் வீரமணி மீது 2025 அக்டோபரில் POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2026 பிப்ரவரியில் சென்னை காவல்துறை, “போதிய ஆதாரம் இல்லை” எனக் கூறி Closure Report தாக்கல் செய்ய, POCSO சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, “வீடியோ ஆதாரம் இருந்தும், குற்றம் நடந்த இடத்தையே எப்படி கண்டறிய முடியவில்லை?” என்ற கேள்வியுடன் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மாபெரும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசு வந்த பிறகு, அந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. வீரமணி மற்றும் வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் கண்டறியப்பட்டு, அவரது வாக்குமூலமும் மாண்பமை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமானத் தகவலும் வெளிவந்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் இந்த வழக்கை காவல்துறை ஏன் முடிக்க முயன்றது? யாரைக் காப்பாற்றத் துடித்தது? அன்று காவல்துறையை கட்டுக்குள் வைத்திருந்த கொளத்தூர் கொத்து பரோட்டா என்ன செய்துக் கொண்டிருந்தார்?
சிறுமிக்கு நீதி கிடைக்கவிடாமல் எந்த அதிகாரம் தடுத்தது? இந்த வழக்கைப் பற்றி கொத்தடிமை கூட்டம் மூச்சுக்கூட விடாமல் கப்சிப்பென்று இருப்பது ஏன்?
தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் உயர வேண்டும் என்ற உன்னத நோக்கில் திமுகவை உருவாக்கி, சமூகநீதி, சமத்துவம், நேர்மையான நிர்வாகம் என சாமானியர்களுக்கான அரசியலை முன்னெடுத்தார் பேரறிஞர் அண்ணா. ஆனால், அப்படிப்பட்ட இயக்கம் இன்று ஒரு குடும்பத்தின் தனியார் நிறுவனமாகச் சுருங்கி நிற்பது வரலாற்றின் மிகப்பெரிய கேலிக்கூத்து!
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திமுகவின் தலைமைப் பொறுப்பு - மன்னர் பதவியாக ஒரே குடும்பத்தைச் சுற்றியே சுழல்கிறது. அதிலும், பெரியாரை கொள்கைத் தலைவராகக் கூறிக்கொள்ளும் இயக்கத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பைப் பெறுவது கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பானது.
கட்சிப் பொறுப்பு முதல் சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் வேரூன்றிவிட்டன. ஊருக்கு ஓர் குறுநில மன்னர் என்ற அளவுக்கு குடும்ப ஆதிக்கம் வளர்ந்திருக்கிறது.
அண்ணா அரசியலை பதவிக்கான பாதையாக அல்ல, மக்கள் சேவைக்கான பொறுப்பாகப் பார்த்தார். ஆனால் இன்றைய திமுகவின் அரசியல் என்பது ஆபாசம், அவதூறு, தனிநபர் தாக்குதல், ஊழல், அரசியல் வன்முறை மற்றும் குடும்ப ஆதிக்கம் எனத் தடம்புரண்டு நிற்கிறது.
“CNA is our DNA” என்று அண்ணாவின் பெயரைச் சொல்லிப் பெருமைக்கு எருமை மேய்ப்பவர்களால், அவரின் கொள்கையும் அரசியலும் என்றோ மறக்கப்பட்டுவிட்டது.
அண்ணாவின் கொள்கைகளை அவர் உருவாக்கிய இயக்கமே கைவிட்ட நிலையில்,
“மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுக்கு சேவையாற்று”
என்ற அவரது வழியில், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்ட வெற்றித் தலைவர் தலைமையிலான தவெக, மக்கள் அரசியல் எனும் வெற்றிப் பாதையில் வீறுநடை போடத் தொடங்கியுள்ளது!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#CMJosephVijay
Format C-7
Details of candidate with pending criminal proceedings, the rationale behind their nomination, and an explanation as to why other individuals with no criminal antecedents were overlooked.
(As per the ECI's directions issued in pursuance of the Hon’ble Supreme Court)
Name of the Political Party: Tamilaga Vettri Kazhagam
Name of the Election: Bye-Elections to Tamil Nadu Legislative Assembly, 2026
Name of the State/UT: Tamil Nadu
Name of the Constituency: 101 – Dharapuram (SC)
Name of the candidate: P. SATHYABAMA
https://t.co/hZDNFTvafc
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதபோதுதான் கோழைகள் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள். ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான்.
மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், தொண்டர்கள் குறித்து எப்போது கொத்தடிமைகள் ஆபாச வசைபாடத் தொடங்கினார்களோ, அப்போதே அவர்களின் அரசியல் தரம் எவ்வளவு கேவலமானது என்பதை உலகுக்குப் பறைசாற்றிவிட்டார்கள்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி கொத்தடிமைகளுக்கு வகுப்பெடுக்காத கொத்து பரோட்டாவின் இயலாமை, பவளவிழா பாப்பாவின் பகுமானத்தைப் பல் இளிக்க வைக்கிறது.
ஆபாசநதியையும் வன்மநதியையும் வகைதொகையில்லாமல் ஓடவிட்டு, கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்?
அமைதியாக இருக்கிறார்கள், ஆபாசத்தையும் அவதூறையும் வீசி இவர்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணினால், மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து நிற்கும் பவளவிழா பாப்பா என்பதை எச்சரிக்கையாக அல்ல...
ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவ்வபிள்லா சொல்லிக்கிறோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று, அதன் உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு, பிரபல நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான திரு.அஜித் குமார் அவர்கள் பங்கேற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay