பகையாளிகளாக இருந்து பங்காளிகளானவர்களின் dealing!
“மதுராந்தகம் உனக்கு(தீயசக்தி)…
தாராபுரம் எனக்கு(மற்றும் பலர்)…
இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது…”
என்று தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு, பங்காளிகள் இருவரும் இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள்.
திமுகவின் ஆபாசக் கொள்கையைத் தன் கொள்கையாய் ஏற்று துரோகச்சாமி ஒருபுறம் பிரச்சாரம் செய்ய, அதிமுகவைப் பற்றியோ, துரோகச்சாமியைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட உதிர்க்காமல் ஆபாசநதியை ஓடவிடுகிறார் ஆபாசநிதி.
“எதுக்கு வந்தோம் என்றதையே மறந்து முழு சமையல்காரனா மாறிட்ட” என்பது போல, எதற்காக எம்ஜிஆர் தனியாகக் கட்சி தொடங்கினார் என்பதையே மறந்து, அதிமுகவை திமுகவின் கிளைக் கழகமாக மாற்றி துரோகச் சாதனை படைத��திருக்கிறார் துரோகச்சாமி.
பங்காளிகளின் dealing கணக்குகளை, இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதி மக்களும் minus ஆக்குவார்கள் என்பது உறுதி!
மற்றும் பலரின் துரோகப் பயணம்!
துரோகம் – 1:
"தீயசக்தி… தீயசக்தி…" என்று எம்ஜிஆர் விமர்சித்த திமுகவுடனேயே dealing வைத்துக்கொள்வது, எம்ஜிஆர் கட்டியெழுப்பிய அதிமுகவின் கொள்கைக்கும், நோக்கத்திற்கும் இழைக்கப்படும் துரோகம்!
துரோகம் – 2:
அதிமுகவை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை சட்டசபை முதல் கட்சி மேடைகள் வரை அவமதித்த திமுகவுடனேயே உறவாடுவது, அவரின் உழைப்பிற்குச் செய்யும் துரோகம்!
துரோகம் – 3:
50 ஆ��்டுகளாக அரசியல் எதிரி என்று மக்களிடம் பறைசாற்றிவிட்டு, அதே பகையாளியை பங்காளியாக்கி சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதும் பதவிக்காக உண்மையான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் குரலைப் புறக்கணிப்பதும் துரோகம்!
துரோகம் – 4:
தனக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியவர்களையே முதுகில் குத்தியது, தேர்ந்தெடுத்த துரோகம்!
"நன்றிக்கு பதில் துரோகம்" என்ற புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் துரோகச்சாமியின் துரோகப் பயணம்… தொடரும்!
#குறுக்குவழிச்சாமி
Athletes sweat for years. Their medals belong to them — not to any party sticker.
Vithya Ramraj broke a 42-year national record with her own grit, training and discipline.
Abinaya, Vishal, Rajesh Ramesh and every Tamil Nadu athlete who stood on that podium earned it on the track, not in a press note.
Do not paste “Dravidian Model” labels on their hard-won medals. No one can steal an athlete’s own win.
Congratulate them. Support them. Stop turning their success into a political poster.
The glory is theirs. Keep the stickers off.
#AsianGames #RespectAthletes
Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan.
A big round of applause to Tamil Nadu’s super-talented athlete, Vidya Ramaraj, who has set a new record by clocking 54.75 seconds in the women’s 400m hurdles.
Recognising her talent, our Dravidian Model Government ensured that Vidya received the necessary support under the ELITE category as well as assistance from the HCI.
Coming from a humble background, Vidya has emerged as an inspiration to millions.
I also congratulate all our Tamil Nadu athletes Abinaya, Vishal, Rajesh Ramesh, Abhay Singh, Josna Chinnappa, Velavan Senthilkumar, Baranica, Hariharan and Kamalini for winning medals for India at the Asian Games and making Tamil Nadu proud.
Efforts such as financial assistance through various schemes including TNCF, and the provision of government jobs to 300 athletes under the 3% sports reservation have played a significant role in helping our sportspersons achieve these heights.
I hope the current government will continue to extend such support to our athletes, enabling them to achieve even greater success.
May our sports stars continue to rise and shine!
#AsianGames #VidyaRamaraj
அவதூறு பரப்புவது திமுகவும், அவர்களுடன் இணைந்த மற்றும் பலரும்தான். மக்கள் அவதூறு பரப்புவது இல்லை, அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், தவெகவை ஆதரிக்கிறார்கள்.
-மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.
இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தேர்தல் களம், தீயசக்தி vs தீர்ந்து போன சக்தி என்ற இரு துருவ அரசியலாகவே இருந்தது.
ஒருவரை ஒருவர் கடுமையான விமர்சனங்களால் சாடியவர்கள்… ஒருவரை ஒருவர் வீழ்த்துவோம் என்று களமிறங்கியவர்கள்… இன்று, தமிழ்நாட்டு மக்கள் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் சக்தி களத்தில் வந்தவுடன், பழைய அரசியல் கணக்குகள் அனைத்தையும் உடைத்தெறிந்து பங்காளிகளாகவும் அரசியல் வியாபாரம் செய்வதில் பங்குதாரர்களாகவும் வலம் வருகின்றனர்.
மாறி மாறி வசைபாடிக் கொண்டிருந்த இரு கூட்டங்களும், இன்று ஒரே கூட்டணியாக ஒன்று சேர்ந்து, மக்கள் சக்தியான தவெகவை ஆபாசம் எனும் ஒரே கோட்டில் நின்று விமர்சித்து வருகின்றன.
இருவரும் என்ன கத்தினாலும், கதறினாலும், இனி தேர்தல் கணக்கு வெற்றித் தலைவர் எழுதப்போகும் கணக்காகத்தான் இருக்கும்.
வெற்றியைத் தர தயாராக இருக்கும் தாராபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் திருமதி சத்யபாமா அவர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார் வெற்றித் தலைவர் அவர்கள்.
மக்களால் 12 முறையாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படாத, தீர்ந்து போன சக்தியின் சில கொள்கைகளும் செயல்பாடுகளும்!
துரோகம்:
பாஜகவுடன் கூட்டணி வைத்து, இனி ஒர��போதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சூளுரைத்ததை காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது.
நீட் த��ர்வை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து, மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியது.
எதற்காக, யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கப்பட்டது என்பதையே மறந்து, தீயசக்தியுடன் கூட்டணி வைக்க முயன்று தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.
கட்சியைத் தொடங்கியவருக்கும், கட்சியை வளர்த்தெடுத்தவருக்கும் அந்தத் தீயசக்தி என்னென்ன செய்தது என்பதை மறந்து, “தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும்” என்ற சுயநலப��� போக்குடன் செயல்படுவது.
முதுகுக்குத்து:
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வராகத் தன்னை அறிவித்தவரின் முதுகிலேயே குத்தியது.
நேர்மையற்ற தன்மை:
ஒரு எதிரியை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளத் திராணியில்லாமல், கட்டப்பஞ்சாயத்து செய்து ஒருவரை விலைக்கு வாங்கி வெற்றி பெற முயல்வது.
அதற்கு இன்னொரு பெயர் , பயத்தால் நடுங்கிப் போய் செய்யும் நாணயமற்ற, வஞ்சகமான செயல்.
மற்றும் பலரின��� முதுகு குத்துகளும் துரோகங்களும் தொடரும்.
வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் த��ண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை இடர்ப்பாடி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்.
நன்றி மறப்பது, நம்பியவர்களை முதுகில் குத்துவது,நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்ப சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது என தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கி உள்ளார்.
கடந்த சட்ட���ன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.
திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனால்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார். தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி.
குழந்தைகளுக்கு தாய்மாமனின் சீராக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் ' திட்டத்தை மதுரையில்
மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி கடந்த ஜுன் 22 ஆம் தேதியில் இருந்து
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
மதுரையில் இன்று தொடங்குகிறது ஒரு புதிய மக்கள் நல அத்தியாயம்!
ஒரு குடும்பத்தில் குழந்தையின் பிறப்பு என்பது மிகவும் மகிழ்வான நிகழ்வு. அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியோடு அரசும் இணையும் வகையில், "தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்தை நமது வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழர் பண்பாட்டில் தாய்க்கு நிகரான உறவாகப் போற்றப்படும் தாய்மாமன் உறவின் தனித்துவத்தை உணர்ந்து, அதையே ஒரு மக்கள் நலத்திட்டத்தின் பெயராகவும், செயல்பாடாகவும் மாற்றியிருக்கிறார்.
வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், மக்களின் வ��ழ்க்கையில் நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்களாக மாறுவதில்தான் மக்களாட்சியின் மகத்துவம் இருக்கிறது.
குழந்தையின் விரலில் மின்னும் இந்தத் தங்க மோதிரம்…
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், "தாய்மாமன் இருக்கிறார்" என்ற தைரியத்தையும், பாதுகாப்பு உணர்வையும் பறைசாற்றும் மக்கள் நல ஆட்சியின் அடையாளமாக மின்னும்!
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் என்ன சொன்னார்?.கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக
நிறைவேற்ற அவகாசம் வேண்டும் எனக் கேட்டார்.
இது உலகத்திற்கே தெரியும். ஆனால், அரசியல் அறிவும் புரிதலும் சிறிதும் அற்ற, நிதானமற்��, சுயமற்ற பண்ணையார் வீட்டுக் குழந்தையான உளறல் நிதி ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிஷமே வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று நம் தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதாக உளறிக் கொட்டுகிறார்.
ஆபாசநிதியே உன் பெயர்களின் வரிசையில் பொய்நிதிதான் முதல் பெயரா?. பொய்கள்தான் உன் அரசியலின் முதலீட்டு
நிதியா?.
எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுத���னா?
பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#VulgarUdhayanidhi
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெ���்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
"மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தீயசக்திக்கும், மற்றும் பலருக்கும் சரியான பாடம் புகட்டியே ஆகவேண்டும். உங்கள் சின்னம் விசில், நமது சின்னம் விசில், நம்முடைய வெற்றிச் சின்னம் விசில்" - மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான கணக்கு அன்பு கணக்கு, பாசக் கணக்கு!
வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு!