My heartfelt thanks to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Vijay sir, for honouring me today at the Secretariat.
Sharing a game of chess with you was a truly unforgettable experience!
Thank you for your continued support and encouragement to the game of chess. I will keep working hard to make Tamil Nadu and India proud!
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்திற்கு வருகை தந்தார். பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள என்னை எனது இருக்கையில் அவரே அமர வைத்து அழகு பார்த்த அந்தப் பொன்னான தருணம் தலைவர்-தொண்டர் என்பதைக் கடந்து அண்ணன்-தம்பி என்ற உணர்வு மேலோங்கிய நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
மாற்றத்திற்கான அரசியலில் முன்னணித் தளபதியாக என்னை முன்னிறுத்திய தலைவர், அவர் முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் அமைச்சரவையில் என்னை அமைச்சராகவும் நியமித்துள்ள, அவரின் எண்ணங்கள் நிறைவேற எந்தக் களத்திலும், எல்லாக் காலத்திலும் நான் துணை இருப்பேன் என அந்த உணர்வுப்பூர்வமான தருணத்தில் இன்னும் உறுதியாக மனதில் எண்ணிக் கொண்டேன்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற
நீதிபதி திரு. எஸ். மணிகுமார் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான திரு. ப. தனபால் அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான
50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
#CMJosephVijay
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 'நார்வே செஸ் தொடரில்' சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாட்டு வீரர் - கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையினை மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் வழங்கி வாழ்த்தியபோது உடனிருந்தோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேற்று (07.06.2026) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பணிகளின் பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் 'மாவட்ட விளையாட்டு வளாகம்', 'மாவட்ட நூலகம்' ஆகியவற்றின் பணிகளை மேற்பார்வையிட்டோம்.
"சின்ன பையன் கட்சி ஆரம்பிச்சு cm ஆகிட்டான்னு ஒரு மாஷமா இந்த வயசான காலத்துல இரவுல ஒரே அழுக...
அப்றம் நானும் ஒரு கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லித்தான் தூங்க வச்சிருக்கேன்... 😭🤣
மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன.
ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம்.
கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல.
கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு,
அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்?
ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்?
இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கொத்தடிமைக் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி.
மங்கோலிய நாட்டின் உலான்படோர் நகரில் நடைபெற்ற '21-வது ஆசியத் தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனையர் சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ள செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய நாட்டின் அடையாளமாகவும், தமிழ்நாட்டின் பெருமையாகவும் தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக சாதனைகள் பல புரியத் தமிழ்நாடு அரசு பக்கபலமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.