கதை, கவிதை, நாவல்கள் என்ற அளவில் புத்தகங்களை படித்துக் கொண்டிருந்த இளம் வயதிலேயே கம்யூனிச, பெரியாரிய புத்தகங்களை அறிமுகப்படுத்திய நண்பர்களை நன்றியோடு இந்த புத்தக நாளில் நினைத்துப் பார்க்கிறேன். வாழ்த்துகள்
நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க எஸ்பிஐ வங்கிக்கும், 15ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிடவும் உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு. கொஞ்சமாவது நேர்மையுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தல். ஒரு மாத காலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றும் கேள்வி. #shameonsbi
ஜாதி, தீண்டாமையை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரத்தின் ஒரு பிரிவான மோடி குடும்பம் என்றும் கூறும் ஆரியக்குடும்பம் அல்ல; அல்லவே அல்ல! பேதமிலாப் பெருவாழ்வு எனக்கூறும் #திராவிடக்குடும்பம்
பெண்களைப் பிறவி அடிமைகளாக்கும் மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பா.ஜ.க. மோடி குடும்பம் அல்ல நாங்கள்!
பாலியல் நீதியையும் உள்ளடக்கிய சம உரிமை கோரும் பெரியாரின் #திராவிடக்குடும்பம்
கூச்சமில்லாமல் கோட்சேவை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரும் மோடி, சங் பரிவார் குடும்பம் அல்ல எங்கள் குடும்பம். ”காந்தி நாடு, காந்தி மதம் என்று பெயர் சூட்டுங்கள்” என்ற பெரியாரின் #திராவிடக்குடுமபம்
மாநிலங்களே இருக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் மிருக பலம் இருப்பதால் மாநில மக்களின் உரிமைகளைக் காலடியில் நசுக்குகிறீர்கள். அவர்களையும் எப்படி வெட்கமில்லாமல் மோடி குடும்பத்தில் இணைத்துக்கொள்கிறீர்கள். அது மோடி குடும்பம் அல்ல. மோடி வித்தை! மாநில உரிமை கோருவது #திராவிடக்குடும்பம்
விவசாயம் என்பது வைதீக மதப்படி ஏற்றுக்கொள்ளக் கூடிய தொழில் அல்ல. அதனால்தானே அவர்களின் உரிமைகளைப் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்த்தீர்கள். பிறகு எந்தத் துணிச்சலில் அவர்களும் மோடி குடும்பம் தான் என்பீர்கள்? நாங்கள் #திராவிடக்குடும்பம்
கார்ப்பரேட்டுகள் கொழுக்க 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளின் தீரமிக்க போராட்டத்தால் சட்டங்களை பின்வாங்கிக் கொண்டாலும், இன்னமும் நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த உத்திரவாதம் நடைமுறைக்கு வரவில்லையே! சங்கிக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு இடமுண்டா? கேட்கிறது #திராவிடக்குடும்பம்
இந்தியாவின் பூர்வகுடிகள் நாகர்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர் ஆய்ந்து சொன்னார். அந்த நாகர்கள்தான் திராவிடர்கள். அதைத்தான் சிந்துசமவெளி நாகரீக அகழாய்வுகள் சொல்கின்றன. ஆகவே இந்தியா என்பது #திராவிடக்குடும்பம் தான். மோடி குடும்பமாக இருக்க வாய்ப்பே இல்லை.
இசுலாமியர்களையும், ஈழத்தமிழர்களையும் ஏற்க மறுத்து CAA, NRC என்று சட்டம் கொண்டு வந்தவராயிற்றே நீங்கள். நீங்கள் எப்படி அவர்களையும் சேர்த்து ஒரே மோடி குடும்பம் என்று சொல்வீர்கள்? இதெல்லாம் ஜூம்லா என்று நாங்கள் அறிந்துள்ளோம். எங்களுடையது #திராவிடக்குடும்பம்.
நாங்கள் பெருமைக்குரிய #திராவிடக்குடும்பம்! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பதுதான் எங்களின் பண்பாடு! இந்தியா என்பது #திராவிடக்குடும்பம் என்று சொல்வதற்கு எங்களுக்கு எல்லா தகுதிகளும் உண்டு! ஆனால், நாங்கள் ஆரிய நச்சரவம் ஆர்.எஸ்.எஸ். எனும் சங்பரிவாரின் மோடி குடும்பம் அல்ல.
ஜாதிகளால், சண்மதங்களால் மக்களைத் துண்டுதுண்டாகப் பிரித்துவைத்துவிட்டு, 'தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம்' என இன்றைக்கும் மறைமுகமாக சனாதன தர்மத்தை வலியுறுத்தும் நீங்கள் எப்படி அனைவரும் மோடி குடும்பம் என்று கூறமுடியும்? #திராவிடக்குடும்பம் தான் அனைவரையும் அரவணைக்கிற வரலாறு உடையது.
140 கோடி மக்களும் மோடியின் குடும்பம் என்றால், முதலில் சுப்பிரமணிய சுவாமி ஏற்றுக்கொள்வாரா? நீங்கள் 'சவுக்கிதார்' என்றால், தான் 'பிராமணன்' என்று கூறுவார். எப்படி ஒரே குடும்பம் ஆகமுடியும்? ஆனால், #திராவிடக்குடும்பம் மனிதர் அனைவருக்கும் பொதுவானது.
நாங்கள் பிறப்பினால் ஜாதி - தீண்டாமையை வற்புறுத்தும்
ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் மோடி குடும்பம் என்ற
ஆரியக் குடும்பம் அல்ல; அல்லவே அல்ல!
அனைவருக்கும் அனைத்தும், பேதமிலா பெருவாழ்வு கூறும்
#திராவிடக்குடும்பம் - சமத்துவக் குடும்பம்!
உங்கள் குடும்பம் என்றால் சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக சல்லிக்காசு கூட நீங்கள் கொடுக்காமல் இருந்திருப்பீர்களா? நாங்கள் மோடி குடும்பம் அல்ல; அல்லவே அல்ல. நாங்கள் #திராவிடக்குடும்பம்!
ஆரியம் வேறு-திராவிடம் வேறு. RSS வேறு. திராவிட இயக்கம் வேறு. பண்பாடு பழக்க வழக்கம் எல்லாம் வேறுவேறு. இன்னாருக்கு இன்னதுதான் என்கிற பிற்போக்கு RSS கொள்கை! அனைவருக்கும் அனைத்தும் என்கிற முற்போக்கு திராவிடக் கொள்கை. நாங்கள் மோடி குடும்பமில்லை! பெரியாரின் #திராவிடக்குடும்பம்