நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்... நமது திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் நேற்றைய தினம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு பலவகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக சிறப்பு சக்கர நாற்காலிகள், காதொலி கருவி... கூட்டுறவுத் துறை சார்பாக 33 பேருக்கு 30 லட்சம் ரூபாய், மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி, 19 பேர்களுக்கு 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பயிர்க் கடன்... வருவாய் துறை சார்பில் 22 பேர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 17 பேர்களுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்... 97 பேர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்...
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 340 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுய உதவிக் குழு கடன் ஆகியவற்றை வழங்கி மகிழ்ந்தோம்!
இந்த விழாவில் மொத்தம் 534 பயனாளிகளுக்கு 2 கோடியே 50 லட்சத்து 32 ஆயிரத்து 285 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இந்த அரசு மக்களின் அன்பால் உருவானது என்பதையும், மக்கள் கொடுத்த அன்பை விட அதிக அன்பை மக்கள் மீது காட்டும் அரசாக தொடர்ந்து செயல்படுவோம் என்பதையும் இவ்விழாவில் குறிப்பிட்டோம்.
இந்த இனிய நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. லி. மதுபாலன் ஐ.ஏ.எஸ். அவர்கள், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திரு. பி.எஸ். லெனின் அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
@CMOTamilnadu | @collectornmk | @HM_TamilNadu
#GovernmentWelfare | #WomenEmpowerment | #Mallasamudram | #ArunraajTVK
தேசிய விருதுகளை வசமாக்கிய,
தமிழ்த் திரையுலகின் பல்துறை வித்தகர் @dhanushkraja அவர்களுக்கும்,
குப்பைத் தொட்டிக்கு உயிர் கொடுத்த செல்வி @sachananamidass அவர்களுக்கும்,
மென்னுணர்வுகளை வருடும் இளம் இசை புயல்@gvprakash அவர்களுக்கும்,
வெற்றி நடைபோடும் வெற்றி இயக்குநர் @Rajkumar_KP அவர்களுக்கும்,
செல்லுலாய்டை செதுக்கும் படத் தொகுப்புச் சிற்பி @kalaivananoffl அவர்களுக்கும்,
சண்டைச் சச்சரவுகளை ரசிக்க வைக்கும் ஃபைட் மாஸ்டர் அனல் அரசு அவர்களுக்கும்,
ஒலிகளால் கடந்த கால நினைவுகளை ஏங்க வைத்த @valentino_suren அவர்களுக்கும்,
சத்தமில்லாமல் சப்தத்துக்கு விருதை தட்டிச் சென்ற டி. எஸ். ஹரிஹர சுதன் அவர்களுக்கும்,
அமைச்சராக மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களைக் கொண்டாடும் எளிய ரசிகனாக அன்பு வாழ்த்துகள்!
தமிழ் கலைஞர்கள் திரைப் பயணத்தில் இன்னும் பல மைல்கற்களைத் தொட அவாவுகிறேன்!
Corruption-free governance is a blessing for Tamil Nadu and the grace of Madurai Meenakshi Amman.
@CMOTamilnadu@OfficialMMHRC@imrajmohan@TVKVijayHQ@TVKPartyHQ@GuRuThalaiva@ramk8060
https://t.co/0BjMYBffGU Shankar,
Chairman,
Madurai Meenakshi Mission Hospital, during his public address.
#DrGuruShankar #cmotn #GoodGovernance #Madurai #Leadership #PublicService
தமிழகத்தில் எந்தவொரு கனிமவள அமைச்சரிடமும் மக்கள் கையை பிடித்து கண்ணீர் விட்டு கதறியதை நான் பார்த்ததே இல்லை..மக்கள் உங்களை நம்புகிறார்கள்... அவர்களை காப்பாற்றுங்கள் அமைச்சரே ✍️ @drtkprabhu_TVK
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் பொதுக் கூட்ட நிகழ்வில் சிறப்புரையாற்றினேன்.
வாய்ப்பளித்த மாண்புமிகு முதல்வர் @cmotamilnadu அவர்களுக்கும்,கழகப் பொதுச் செயலாளர் @bussyanandoffl மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், அன்புமிகு அமைச்சர் அண்ணன் @rajmohanofficial அவர்களுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் @ungal_mla_karthik மற்றும் மல்லி ஒன்றியத்தின் தமிழக வெற்றிக் கழகத்தின் அத்துனை உறவுகளுக்கும் நன்றி ❤️💛❤️🙏🏻
#tvkthalapathy_2026_❤️🔥 #srivilliputhur #tvktamilanragulgandhi #tvkspeakertamilanragulgandhi #tvkviruthunagar
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள நூலகத்தை நேற்று (15.7.2026, புதன்கிழமை) பார்வையிட்டேன்.
நூலகத்தை தூய்மையாக வைத்திருக்கவும், வாசகர்களுக்கு தேவையான புத்தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ராஜ் மோகன் அவர்களின் ஆலோசனைப் படி அறிவுறுத்தினேன்.
பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் மாண்பமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம்.
மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில்,
மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை மாண்புமிகு நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.
மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி
திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்.
-
S. ரமேஷ் B.E.,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியில், இ-சேவை மையத்துடன் இணைந்த தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், நியாயவிலைக் கடையில் ஆய்வு, மின்சாரப் பேருந்து பணிமனையில் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற காட்சித் தொகுப்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைப்படி டெல்லியில் இன்று ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொதுவினியோகத் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களை சந்தித்து, தமிழக அரசின் உணவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இச்சந்திப்பின்போது துறையின் முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence
#joshipralhad
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙