சினிஸ்கோப் -26 : யுத்தம் செய்
சினிஸ்கோப் -27 : விஸ்வரூபம்
2000-லிருந்து 2025 வரையிலான தமிழ் சினிமாவின் 25 ஆண்டுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சினிமாக்கள் குறித்த தொடர் கட்டுரைகள்.
இணைப்புகள் கமெண்டில்.
படித்துவிட்டு நண்பர்கள் கருத்துப் பகிர்க.
விகடன் டாட் காமில், செவ்வாய், வெள்ளி என வாரம் இரண்டு எபிசோடுகளாக வெளியாகிவரும் சினிஸ்கோப் தொடர், 25 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது. உற்சாகப்படுத்தி வரும் அனைவருக்கும் என் அன்பு.
சினிஸ்கோப் -25
ஆடுகளம்
இணைப்பு கமெண்டில்.
கதை சொல்லும் அணுகுமுறையிலும் (Mode: Poetic Narration), பாணியிலும் (Style: Neo-Noir) தனித்தன்மையைக் கொண்டிருந்த ஒரு கமர்ஷியல் சினிமா (Impact: New Wave) என்று ஆரண்யகாண்டத்தை நம்மால் குறிப்பிட முடியும்.
*
சினிஸ்கோப் -22
ஆரண்யகாண்டம்.
விகடன் டாட் காமில்.
இணைப்பு கமெண்டில்.
ஒரு பையனும், பெண்ணும் சரியான வயதில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பது போன்ற ஓர் அழகான விசயம், வேறில்லை! காதலில் மனிதர்கள் ஒரு முழுமையற்ற நிலையை உணர்கிறார்கள். ஒன்று, தனக்கான இன்னொன்றோடு இணையும் போதே முழுமையடைகிறது. அதை சப்-கான்சியஸாக நாம் உணரும் இடமாகவும் ‘லவ் அட் பர்ஸ்ட் சைட்’ இருக்கலாம்.
’தி பாஸ் பேபி’ படத்தில், பாஸ் பேபியைக் காட்டிக்கொடுக்கும் ஆடியோ கேஸட் ஒன்றை, ’டிம்’ அவனது பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வான். வீட்டுக்குள் பெற்றோர் இருப்பார்கள். வெளியே முற்றத்தில் டிம்முக்கும், பாஸ் பேபி குழுவுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்துகொண்டிருக்கும்.
சினிஸ்கோப் 20
காதலில் ஏய்ப்புகளை பார்த்திருக்கிறோம். பொருளாதார லாபக்கணக்குகளை பார்த்திருக்கிறோம். எமோஷனல் பிளாக்மெயில்களைப் பார்த்திருக்கிறோம், முக்கோணக் காதல் சிக்கல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், காதலில் இப்படியொரு துரோகத்தை இதுவரை நாம் பார்த்ததே இல்லை.
சினிஸ்கோப் 19 : சுப்ரமணியபுரம்
ஆனால், சத்யா மாதிரியான எத்தனை பேர் சேர்ந்து, கிருபா மாதிரியான எத்தனை பேரின் கனவுகளைச் சிதைத்திருப்பார்கள் என்ற கேள்விதான் தொக்கி நிற்கிறது. சத்யா என்ன செய்தாலும், என்ன சொன்னாலும், ஆதாரப்புள்ளி அதுதானே… அதிலிருந்து அவனால் என்றைக்காவது மீளமுடியுமா?
சினிஸ்கோப் 17 : அஞ்சாதே!
மௌனத்தின் இசை :
யாராலும் உடைக்க முடியாத ஒரு வேலியை அமைத்துக்கொண்டு, பிடிவாதமாக அதற்குள்ளேயே இருந்துகொள்கிறாள் துளசி. அந்த வேலியைத்தான் கார்த்திக் இப்போது பிடுங்கி எறிந்திருக்கிறான். அவன் போனதும், அதுவரை ஒரு முனகல் சத்தம் கூட அதுவரை வெளிப்படுத்தியிராத அவள் ஓலமிட்டு அழுகிறாள்.
அரியணையில் ஓர் கோமாளி
*
சிம்புதேவனின் இந்தத் தொடர் ஜோக்ஸ், ’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டு, 2000-க்கு முன்னும் பின்னுமாக பெரும் வரவேற்பை பெற்றன. டைம் மிஷினை அடிப்படையாகக் கொண்டு கி.முவில் சோமு எனும் காமிக்ஸ் தொடரையும் சிம்புதேவன் உருவாக்கியிருந்தார்.