சேலத்தில் சமூக நலன்,மக்கள் நீதி,சமூக நீதிக்காக அரை நூற்றாண்டு காலம் சிறப்பாக மக்கள் பணியாற்றிய வழக்கறிஞர் வள்ளல் திரு.எம்டி.வி.பொன்முடி அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்திய அஞ்சல் துறையின் "MY STAMP " ஐ வெளியிட்டேன்.
இந்நிகழ்வில் அரசு வழக்கறிஞர் திரு.பி.தம்பிதுரை அவர்கள்,வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சேலம் மாநகராட்சிகுட்பட்ட 14 வார்டில் முக்கியபிரமுகர்கள், தொழில்முனைவோர், பொதுமக்களை நேரில் சந்தித்து, அந்த பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்தேன்.
இந்நிகழ்வில் பகுதி செயலாளர், வட்ட கழக செயலாளர்,கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சேலத்தில் காலைக்கதிர் மற்றும் டார்லிங் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சியை துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டேன்.இந்நிகழ்வில் கழக தோழமைகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சென்னை-வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளபடும் சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று, முடியும் தருவாயில் உள்ள சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டட பணிகளான
1-பூம்புகார் பாரம்பரிய நகரத்தினை ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்தல்,
2-கரூர் மாவட்டம் ரூ.2.29 கோடி மதிப்பீட்டில் பொன்னனியாறு நீர் தேக்கத்தினை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல்.
3-கன்னியாகுமரி மாவட்டம் ரூ. 3.11 கோடி சித்தார் அணைகள் மற்றும் நீர் தேக்கத்தினை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல்.
4-நீலகிரி மாவட்டத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் உதகை படகு இல்லத்தில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல்,
5-செங்கல்பட்டு மாவட்டம் முதலியார் குப்பம் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல் மற்றும் நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ரூ. 1.87 கோடி மதிப்பீட்டில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல்,
6-கடலூர் மாவட்டம் பிச்சாவரம் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல்,
7-கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் திற்பரப்பு அருவியை சுற்றுலா தலமாக மேம்படுத்துதல்,
8-மாமல்லபுரத்தில் ரூ.8.00 கோடி செலவில் மரகத பூங்காவை பொது-தனியார் பங்களிப்பு முறையில் “ஒளிரும் தோட்டம்” அமைத்தல்,
9-ஏற்காட்டில் ரூ.9.82 கோடி மதிப்பீட்டில் அழகியல் நிலப்பரப்பு, காட்சி முனைகள், ஏரி முகப்பு, தெரு அலங்காரம் போன்ற சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல்,
10-சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் ரூ.0.93 கோடி மதிப்பீட்டில் காட்சி முனை அமைத்தல்,
11-நாகமரை பகுதியில் ரூ.0.48 கோடி மதிப்பீட்டில் காட்சி முனை அமைத்தல்,
12-ஜவ்வாது மலை தேனீ பூங்கா பகுதியில் ரூ.0.42 கோடி மதிப்பீட்டில் காட்சிமுனை அமைத்தல் மற்றும் ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் ரூ.0.45 கோடி மதிப்பீட்டில் காட்சிமுனை அமைத்தல்,
13-கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.26 கோடி மதிப்பீட்டில் மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயப் பகுதியை ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலும், சிவகங்கை மாவட்டம் பிரான் மலைப் பகுதியை ரூ.0.57 கோடி மதிப்பீட்டிலும், திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி பகுதியை ரூ.0.96 கோடி மதிப்பீட்டிலும், தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் ரூ.3.49 கோடி மதிப்பீட்டிலும் தேவாலயப் பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ரூ.1.68 கோடி மதிப்பீட்டிலும் கழுகு மலை பகுதி ஆகிய இடங்களை வழிபாட்டு சுற்றுலா தலங்களாக மேம்படுத்துதல், என மேற்கண்ட இடங்களில் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினேன்.
இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மருத்துவர். க.மணிவாசன், இ.ஆ.ப., சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் திருமதி ச.கவிதா, கண்காணிப்பு பொறியாளர்கள், திட்டப் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.