காலம் எத்தனை முறை மாறினாலும், அரசியல் எத்தனை வடிவம் எடுத்தாலும், மக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவர்களின் பட்டியலில் முதன்மையாக ஒலிக்கும் பெயர் ஒன்றே…
பெருந்தலைவர் காமராஜர்!”
#congress#CongressParty#rahulgandhi
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா — ஒரு வார மக்கள் இயக்கம்
அன்புடன் வணக்கம்,
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 13.07.2026 முதல் 19.07.2026 வரை ஒரு வார கால சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெருந்தலைவரின் புகழுக்கு மரியாதை செலுத்துவதோடு, “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமும் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
📅 ஜூலை 13 (திங்கட்கிழமை) மாலை 5 மணி சென்னை
மெரினா கடற்கரையில் பெருந்தலைவர் காமராஜரின் உலக சாதனை மணல் சிற்பம் திறந்து வைக்கப்படுகிறது. அமைச்சர் திரு. எஸ். ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரவீன் சக்ரவர்த்தி, விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், எம்.கே. விஷ்ணு பிரசாத், சுதா ராமகிருஷ்ணன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ்,திரவியம் கலந்து கொள்கிறார்கள். இந்த மணல் சிற்பம் ஜூலை 19 வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
📅 ஜூலை 15 (புதன்கிழமை) — மாநிலம் முழுவதும்
காலை 10.00 மணிக்கு, மாவட்டம், வட்டம், நகரம் மற்றும் கிராமம் என அனைத்து நிலைகளிலும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு (சிலை இல்லாத இடங்களில் திருவுருவப் படத்திற்கு) மாலை அணிவித்து, மலர் மற்றும் மின் அலங்காரங்களுடன் மரியாதை செலுத்தப்படும்.
மாலை நேரத்தில் மாநிலம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பெருந்தலைவரின் சாதனைகள் மக்களிடம் எடுத்துரைக்கப்படும். அதனுடன், “கைரேகைப் பதிவு” மூலம் லஞ்சம் கொடுக்கமாட்டோம், வாங்கமாட்டோம் என்ற மக்கள் உறுதிமொழி விழிப்புணர்வு இயக்கமும் நடைபெறும்.
மேலும்,
திருவானந்ததுறை நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துதல்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” இயக்கத் தொடக்க பொதுக்கூட்டம் (அமைச்சர்கள் திரு. எஸ். ராஜேஷ்குமார், திரு. பெ. விஸ்வநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்பு),
சென்னை பல்லவன் சாலை காமராஜர் சிலை, தி.நகர் நினைவு இல்லம் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
📅 ஜூலை 17–19 (வெள்ளி–ஞாயிறு)
மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊழலுக்கு எதிரான கையெழுத்து மற்றும் கைரேகை உறுதிமொழி இயக்கம் நடைபெறும்.
📅 ஜூலை 19 (ஞாயிற்றுக்கிழமை) — மதுரை
விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜரின் பிரம்மாண்ட மனித உருவப் படைப்பு (Human Formation Portrait) அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப. சிதம்பரம், அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி. ராபர்ட் புரூஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று, மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், ஊடகங்களில் பரவலான வெளிப்பாட்டை உறுதி செய்திடவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#பெருந்தலைவர்காமராஜர்123 #லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர் #ஊழலற்றதமிழகம் #ஊழலற்றநிர்வாகம்உயர்ந்தஇந்தியா
அன்புடன்,
ப.மாணிக்கம் தாகூர், எம்.பி.
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர்
திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் விடுக்கும் அறிக்கை
மதுரையில் போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாணவ - மாணவிகள் பங்கேற்று 4 கி.மீ. தூரம் சென்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
இப்பிரச்சினையில் எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்கிற நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று புது தில்லியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புப் பொதுச் செயலாளர் உயர்திரு கே.சி. வேணுகோபால் அவர்களை,
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர்
திரு. விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், மக்களின் மனநிலை மற்றும்
காங்கிரஸ் கட்சியின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு
எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
மக்களின் நம்பிக்கையை வென்று தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வரும் தங்களின் பொது வாழ்வு மேலும் சிறக்கட்டும். நல்லாட்சி, சமூக நீதி, கல்வி, இளைஞர் முன்னேற்றம் மற்றும் மக்களின் நலனுக்கான பணிகளில் தொடர்ந்து வெற்றிகள் குவிய வாழ்த்துகிறேன்.
நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று தமிழ்நாட்டு மக்களுக்கு மேலும் பல ஆண்டுகள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மக்கள் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎉
#HBDCMJosephVijay
ஆர் எஸ் பாரதி பேசாமல் இருப்பது தான் திமுகவிற்கு நல்லது. தேர்தலுக்கு முன்பே கூட்டணி கட்சிகள் வெளியேறி இருந்தால் திமுக எதிர்கட்சி அந்தஸ்துக்கு கூட வந்திருக்காது என்பதே உண்மை கள நிலவரம். இன்னும் 50-60 சீட்டு த.வெ.க கூட்டணிக்கு போயிருக்கும். இது புரியாம உளறி கொண்டிருக்கிறார் பாரதி😁
This person joined the Congress party 3 years back. She was a Makkal Needhi Maiam (Kamalhassan's party) candidate in the 2021 elections. I also got to know from colleagues that she had a brief stint in the BJP before joining the Congress. After taking a few photographs with Rahulji during Bharat Jodo Yatra she became a national secretary in IYC. I am curious to know what her contributions were in Coimbatore or nationally to the Congress organisation.
I am not at all surprised by an election tourist like her dumping the Congress after a defeat.
What is appalling for long term Congress workers like us is on what basis our leadership @SPK_TNCC decided to get the Singanallur seat for an election tourist like her?
2/28 seats were given for women to contest and she got one!
Will any lesson ever be learnt?
@UdayBhanuIYC@girishgoaINC@kcvenugopalmp@RahulGandhi@kharge
காங்கிரஸ் கட்சி நன்றிக்கு பெயர் போன கட்சி இது நாடே அறிந்த உண்மை, திமுகவால் 2014ஆம் ஆண்டு 2ஜி சுமையை நாங்கள் சுமந்தோம் அவர்கள் ஏற்படுத்திய விளைவு தான் மத்தியில் பாஜக இன்று வரை கால் ஊன்றி நிற்கிறது, 2011 ஆம் ஆண்டு அதிமுக அமோக வெற்றி பெற்றது தேர்தலுக்கு முன் அவர்கள் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைத்த போது 'நன்றி'என்ற ஒரே வாரத்திற்காக தான் நாங்கள் திமுகவை விட்டுச் செல்லாமல் அவர்களோடு சேர்ந்து மூழ்கினோம், அதையும் கூட நன்றி மறந்து 2014 ஆம் ஆண்டு எங்களை காரணமே இல்லாமல் கழட்டிவிட்டது திமுக, கூட்டணி என்று சொல்லி திமுக தனது ஸ்லீப்பர் செல்களை அக்கட்சிகளில் விதைப்பது, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் மந்திரிகளுக்கு மாவட்ட செயலாளர்களுக்கும் பிடிக்காதவர்களை வேண்டுமென்று தோற்கடிப்பது, தொகுதி பங்கிட்டில் மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சிப்பது, கூட்டணி வேட்பாளர் தேர்வுகளில் மூக்கை நுழைப்பது, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி தலைவர்கள் பொது மக்கள் பிரச்சனைக்காக திமுக அமைச்சர்களை காணச் சென்றால் நிற்க வைத்தே பேசி அவமானப்படுத்துவது, மக்கள் பிரச்சினைக்காக ஏதாவது முக்கிய செய்திகளை தெரிவிக்க வேண்டும் என்று தொலைபேசியில் பேசநினைத்தால் வேண்டுமென்றே தொலைபேசி எடுக்க மறுப்பது, உள்ளாட்சித் தேர்தலில் 10%க்கு மேல் வெற்றி பெற்றால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி ஆகி விடுவார்கள் என்பதற்காக வெறும் 9% மட்டும்கொடுத்து கூட்டணி கட்சியை காலி செய்வது கூட்டணி என்று பார்க்காமல் கூட அந்த கட்சி தொண்டர்களை ஆசை வார்த்தை காட்டி திமுக கட்சியில் சேர்த்துக் கொள்வது, இதைவிட கேவலம் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதற்காக பரம எதிரியாக பார்க்கப்பட்ட அதிமுக கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்க துணை போகலாம் என்று திட்டம் தீட்டுவது, வெளியே எதிரி போல் வேஷம் போட்டு குடும்ப உறவினர் மூலம் பாஜகவோடு கள்ள உறவு வைத்துக் கொள்வது, இதையெல்லாம் கடந்து கூட்டணி கட்சிகளை முடித்தது மட்டுமில்லாமல் உண்மையாக கட்சிக்காக உழைத்த பல திமுக தொண்டர்களை ஓரங்கட்டி விட்டு நேற்று வந்தவர்கள் இன்று வந்தவர்கள் என்று மேம்போக்கு வாதிகளை வேட்பாளர்களாக நிறுத்தி திமுக அவர்களை அவர்களே முடித்துக் கொண்டு விட்டு காங்கிரசை குறை சொல்ல என்ன யோகிதை இருக்கிறது, இன்னும் நிறையாக இருக்கிறது நாங்கள் வாயைத் திறந்தால் திமுக பொழப்பு நாறிவிடும்.
#DMKFails
#Congress
#People_against_VoteForMoney
#tamilnadu
59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சராக பதவியேற்று இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த போது கிள்ளியூர் தொகுதியில் பேரியக்க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு வழங்கிய நிகழ்வுகள்...
யார் நன்றி சொல்ல வேண்டும்? காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் முக்கியத் துறைப் பொறுப்புகளைப் பெற்றவர்களா? 96 சட்டமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்துக்கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தியும், காங்கிரஸுக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கூட வழங்காதவர்களா? சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களின் தோல்வியை உறுதிசெய்யும் வகையில், திரைமறைவில் நின்று தொடர்ந்து துரோகம் இழைத்தவர்களா? உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் வளர்வதற்கான மிகச்சிறிய இடத்தைக் கூட ஒதுக்க மறுத்தவர்களா? தமிழகத்தில் ராகுல் காந்தியின் செல்வாக்கின் காரணமாக மட்டுமே நாடாளுமன்ற இடங்களை வென்றவர்களா? உண்மை என்னவென்றால், திமுகவை ஒரு நண்பனாகக் கொண்டிருந்தபோது, தமிழகக் காங்கிரஸுக்கு வேறு எந்த எதிரிகளும் தேவைப்பட்டதே இல்லை.
1967 - ம் ஆண்டுக்கு பிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சிக்குப் பின், இன்று சென்னை கவர்னர் மாளிகையில் “காமராஜர் வாழ்க! ராஜீவ் காந்தி வாழ்க! ராகுல் காந்தி வாழ்க!” என்ற முழக்கங்களுடன் அமைச்சராக பதவியேற்றேன்.