இன்று மாலை தலைவர் எழுச்சித்தமிழர் Thol.Thirumavalavan அவர்களின் தலைமையில் நடைபெற்ற உள்ள விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முகாம் சிறுத்தைகளுடன் சென்னை நோக்கி பயணத்தில்...
சாதிப்பித்தர்களின் கூட்டுச்சதிக்கு #இளவரசன் பலியான நாள்.நாடக அரசியலுக்காக இளவரசனை நரபலி கொடுத்து திவ்யாவை நடுத்தெருவில் விட்ட சனாதனிகளை அச்சுறுத்தும் நாள்.
சாதிவரம்புகளைத் தாண்டி தன்மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள்.காதல்வெல்லும்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் என்னுமிடத்தில் இயங்கி வந்த மீன் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர், 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இந்த விபத்தில் பலியாகியுள்ள வடஇந்திய தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
சிகிச்சை பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உயர் சிகிச்சையும் இழப்பீடும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தனியார் மற்றும் அரசு தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து உரிய ஆய்வும் தொடர் கண்காணிப்பும் மேற்கொண்டால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.
தொழிலாளர்கள் நலன் குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.