A guy who praise a genocidal state will always be a Morally corrupt guy. He unnecessarily pulls India into a western game plan of destabilising Asia. As an Asian country, soon India will be isolated morally, politically and economically. This should be stopped. Tamilians never accepted this man as their prime minister nor his party as a legitimate representative of Tamil.
'தினமலம்' என ஏன் சொல்கிறோம் என்பதை அடிக்கடி பெருமை பொங்க நிரூபிப்பார்கள்.
திரு.செல்வப்பெருந்தகையின் மகளை திருமணம் செய்யும் குடும்பத்தார் கிருத்துவர் என்பதால், இணையர்கள் செல்வப்பெருந்தகை-உமையாள் எனும் 'கிருத்துவர்-அல்லாத, இந்து-அல்லாத' தமிழர் குடும்பத்தினர் மீது அவதூறு செய்கிறது தமிழர்-அல்லாத 'தினமலம்'.
கெளரவ விரிவுரையாளர்கள் கிட்டதட்ட 8000 பேர், தொடர்போராட்டத்தில் உள்ளார்கள். சென்னையில் நடந்துவரும் போராட்டத்திற்கு மே17 இயக்கம் ஆதரவளித்து பங்கெடுத்தோம்.
தமிழ்நாட்டில் உள்ள 180+ கல்லூரிகளில் விரிவுரையாளராக பணி செய்கிறார்கள். இவர்களில் கடந்த 20 ஆண்டுகளாக பணி செய்பவர்களும் நிரம்ப உள்ளனர். கெளரவ ஆசிரியர்கள் (Guest Lecture)எனப்பட்டாலும் முழுநேர பேராசிரியர்களின் பணிகளையே செய்கிறார்கள். காலை முதல் மாலை வரையில் கல்லூரிகளில் வேலை செய்கிறார்கள். நிரந்தரமாக்கப்பட்ட பேராசிரியர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ரூ3 லட்சம் எனுமளவில் கொடுக்கப்படும் சூழலில், அவர்களுக்கு நிகரான வேலை செய்யும் முனைவர் பட்டம் பெற்ற இந்த பேராசிரியர்-விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ25,000 எனும் விகிதத்திலேயே சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும் 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் கொடுக்கிறார்கள். பெண்களுக்கு மகப்பேறுகால விடுப்பு கிடையாது. பணி நிரந்தரம் Regularise செய்வதாக 2006 தேர்தலிலேயே இரு கட்சிகளும் குறிப்பாக திமுகவும் வாக்குறுதி கொடுத்து, இன்றுவரை இரு கட்சிகளும் நிறைவேற்றவில்லை. 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சியில் இப்பிரச்சனைகளை களைய எடுக்கப்பட்ட முயற்சிகள் போதுமானதாக இல்லை எனவும், அப்படியான பரிந்துரைகளை அதிகாரிகள் மட்டத்தில் தடுக்கப்பட்டதாகவும் போராட்ட நிர்வாகிகள் பலரும் தெரிவித்தார்கள். மேலதிகாரிகள் மிக மோசமாக தம்மை நடத்துவதாக குற்றம் சாட்டுகிறார்கள். அதிகாரிகளின் மட்டத்தில் எதேச்சதிகாரமான போக்கு திமுக ஆட்சியாளர்களால் உறுதியான வகையில் கையாளப்படவில்லை.
திமுக அரசின் உறுதியற்ற போக்கு, சமூகநீதி கட்டமைப்பின் அடித்தளமான கல்வித்துறையில் நெருக்கடிகளை வளர்க்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கல்லூரி கல்வித்துறையின் பங்கு மிக முக்கியமானது. இந்த திமுக ஆட்சியில் கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இது சிறப்பானது. ஆயினுமம் இக்கல்லூரிகளுக்கான பெரும்பான்மையான ஆசிரியர்கள் கெளரவ விரிவுரையாளர்களாக இருக்கிறார்களெனில், இது எவ்வளவு பலவீனமானதென அறியலாம். பெயரளவில் கல்விக்கட்டமைப்பாகவும், உள்கட்டமைப்பில் நிரந்தரமற்ற பணியாளர்களை கொண்டு நிரப்பப்பட்டதாகவும் இயங்குகிறது. நிரந்தர பேராசிரியர்களின் சம்பளத்தில் பத்தில் ஒருவிகிதத்தை பெற்று கல்வி கற்றுத்தர வேண்டிய நிலையில் ஆசிரியர் சமூகம் நிறுத்தப்படுமெனில், கல்வி கற்றலுக்கான முக்கியத்துவம் தவிர்க்கப்படுறதென அர்த்தமாகிறது. கட்டிடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை போல, ஆசிரியப் பணிக்கு தேவையான நிதி ஒதுக்குவதில்லை என்பது அம்பலமாகிறது. இந்த ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவிடாமல் அதிகாரவர்க்கம் முட்டுக்கட்டை போடுகிறதெனில் கல்வி கட்டமைப்பிற்கும், சமூகநீதி கொள்கைக்கும் எதிராக இருக்கிறதென அர்த்தம். UGC விதிகளின் படி மாதம் ரூ 55,000 கொடுக்கப்பட வேண்டுமென்பதை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
கல்வியில் பின் தங்கிய மாநிலங்கள் எனப்படும் ஹரியானா, பீகார் மாநிலங்களில் கெளரவ விரிவுரையாளர்களுக்கு 50,000 கொடுக்கப்படும் பொழுது, கல்வியில் முதலிடம் எனும் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ரூ25,000 கொடுக்கப்படுகிறது? கேரளத்தில் ரூ50,000 கொடுக்கப்பட முடிகிறதெனில் இங்கு ஏன் சாத்தியமில்லை?
முக்கியமாக, கெளரவ விரிவுரையாளர்களின் தகுதிச்சான்றிதழ்களை முன்வைத்தே பல கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் தொடங்க அனுமதி பெறப்படுகிறது. விரிவுரையாளர்கள் வஞ்சிக்கப்படுவதை தடுக்காவிடில், கல்லூரி கல்வியின் தரம் சிதைக்கப்படும். திமுக அரசும், மாண்புமிகு முதலமைச்சரும் உடனடியாக தலையிட்டு இவற்றை தீர்க்க வேண்டும். இந்நிலையில் மற்றுமொரு விடயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வர மே17 இயக்கம் விரும்புகிறது. தமிழ்நாட்டின் தடயவியல் துறையில் 60 பேர் ஒப்பந்த ஊழியர்களாக 90+% வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்
சில மாதங்களுக்கு முன் இணைக்கப்பட்டார்கள். இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் ரூ50,000 எனுமளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டு அதிகாரிகளின் உத்தரவில் நடந்துள்ளது. வடநாட்டு பணியாளர்களுக்கு முறையான சம்பளம் கொடுக்க முடியுமெனில் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மட்டும் ஏன் வஞ்சிக்கப்பட வேண்டும்? தமிழர்களுக்கான பணியிடங்களை வடநாட்டான்களுக்கு தாரை வார்த்து, உரிய ஊதியத்தை கொடுக்கும் விசுவாசத்தை அதிகாரிகள் யாரிடம் கற்றார்கள். இந்த அதிகாரிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அடிப்படை உரிமைகளை மறுக்கும் அதிகாரிகளை நீக்கிவிட்டு, சமூக பொறுப்புணர்வுள்ளவர்கள் மூலம் கல்விதுறை நிர்வகிக்கப்பட வேண்டும். திமுக அரசு இவற்றை தனது ஆட்சிகாலத்தில் தீர்க்காமல் தோற்றிருக்கிறதெனும் நிலையை மாற்ற வேண்டுமெனில் உடனடியாக கொள்கை முடிவெடுத்து தீர்க்க வேண்டும்.
போராடும் தோழர்களின் கோரிக்கைக்கு மே17 இயக்கம் துணை நிற்கும்.
This is not a trade deal.
It looks like The White House running The Saffron House.
As usual Savarkaraites bend on their knees to serve their White Masters.
No Shame for Sanatanis.
விவசாய சங்கத்தின் தலைவர் தோழர் ஈசன் மற்றும் ஒன்பது விவசாயிகள் பொங்கல் விழா நாளிலிருந்து திமுக அரசால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் விவசாயிகள் அமைப்பினர் மீது கடுமையான நெருக்கடியை உருவாக்க காரணமென்ன. கடந்த மாதம் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிறுத்தி திருவண்ணாமலையில் திமுக அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்த தோழர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட விவ்சாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. திமுக ஆட்சியில் இரண்டுமுறை அருள் ஆறுமுகம் சிறைப்பட்டார். ஒருமுறை குண்டர் சட்டம் ஏவப்பட்டது. மாஞ்சோலை தோட்ட விவசாய தொழிலாளர்கள் கோரிக்கையையும் திமுக அரசு கைகழுவியது.
அதிமுக காலத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி எதிர்த்து போராடியோர் மீது அதிமுக அரசு போட்ட பொய் வழக்குகளை கடமையாக திமுக அரசு நடத்தி தண்டனை பெற்றுத் தருகிறது. விவசாய சங்கத்தின் தோழர் பி.ஆர்.பாண்டியன் கடுமையான தண்டனையை சில மாதங்களுக்கு முன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. டெல்டாவில் அதிமுக அரசால் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொன்ன திமுக, கடந்த 5 ஆண்டுகளாக வழக்குகளை தீவிரமாக நடத்தி வருகிறது. பேரா.ஜெயராமன் உள்ளிட்ட பல திராவிடர், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், பெரியாரிய தோழர்கள் இன்றளவும் வழக்குகளுக்காக வாரம் தோறும் நீதிமன்ற படியேறிக் கொண்டிருக்கின்றனர்.
கொங்குப் பகுதியில்
பலவேறு உழவர் கோரிக்கைக்காக போராடி வருபவர் தோழர் ஈசன். உழவர்களுக்கான மின்சார கட்டணம் குறித்தான கடந்த அதிமுக காலத்தின் குழப்பமான நிலையின் பொழுது என் தந்தை திரு.காந்தி அவர்களின் ஆலோசனையில் கோரிக்கைகளை அவர் வடிவமைத்த சமயத்திலும், பின்னர் ஐ.டி.பி.எல் குழாய் பதிப்பிற்கு எதிரான போராட்டம் வழியாகவும் மே17 இயக்கத்திற்கு அறிமுகமான தோழர்.
கடந்த ஆண்டில் 'இந்து அறநிலையத்துறை' இனாம் நில உரிமை எனும் அடிப்படையில் வெகுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் அராஜக நிலையை எதிர்த்த போராட்டத்தை குறித்து விளக்கப்படுத்தி, இதுகுறித்து மே17 இயக்கமும் தனது குரலை உழவர்கள், சாமானிய மக்களின் கோரிக்கைகளுக்காக எழுப்பியது.
இந்நிலையில், கொங்குப்பகுதியில் கறிக்கோழி வளர்ப்பவர்களிடத்தில் மிகக்குறைந்த விலைக்கு கோழிகளை வாங்கி பெருத்த லாபம் சேர்க்கும் நிறுவனங்களிடம் கோழிக்கான விலையை உயர்த்தக் கோரிக்கை வைத்து போராட்டம் தொடங்கப்பட்டது.
2013ம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ6.50 எனும் நிலையிலிருந்து கிலோவிற்கு ரூ20 ஆக உயர்த்த கறிக்கோழி வளர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இரை, நில வாடகை, மின்சாரம், கூலி உயர்வு உட்பட பலவேறு செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மிக நியாயமான கோரிக்கையை முன்னெடுத்தனர்.
இக்கோரிக்கையை முன்னெடுத்து கறிக்கோழி நிறுவனங்கள் கொள்முதல் விலையை கூட்டித்தரக் கோரி போராட்டத்தை தோழர் ஈசன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் என்போர் சிறு விவசாயிகள், சிறுகுறு முதலீடு செய்தவர்கள். இவர்களுடைய கோரிக்கையை பெருநிறுவனங்களிடம் பேசி முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்ய திமுக அரசு முன்வந்திருக்க வேண்டும். 2022ல் ஃபோர்டு நிறுவனத்தில் தொழிலாளர்களுடைய போராட்டத்தின் பொழுது ஃபோர்டு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சூழல் உருவானதையடுத்து திமுக அமைச்சர்கள் தலையிட்டு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற அழுத்தம் கொடுத்து போராட்ட வெற்றியை சாத்தியப்படுத்தினர். இதேபோல கோழி இறைச்சி பெருநிறுவனங்களிடம் பேசி இச்சிக்கலை தீர்த்திருக்க இயலும். ஆனால், போராடிய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு.
தோழர் ஈசன் உள்ளிட்ட உழவர்களை விடுதலை செய்து, வழக்குகளை திரும்பப்பெற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை திமுக அரசிற்கு உண்டு. நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் போது, கைதான தோழர்களை கடுமையான பாதுகாப்பை ஆயுதப்பிரிவு காவலர்களைக் கொண்டு தீவிரவாதிகளைப் போல ஏன் நடத்துகிறது திமுக அரசு?
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமலும், தோழர் ஈசன் உள்ளிட்டோரை விடுதலை செய்யாமலும் திமுக அரசு அடக்குமுறையை தொடருமெனில், விவசாயிகளுக்கும், போராடுகின்ற சமானிய கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கும் ஆதரவாக மே பதினேழு இயக்கம் போராட்டத்தை தொடங்கும். சனநாயக இயக்கங்கள் நியாயமான கோரிக்கைக்கும், தோழர் ஈசன் உள்ளிட்ட 9 பேரின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
அய்யா எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!
மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மையார் ஆட்சியை பாஜகவுடன் இணைந்து அமைப்போம் என்கிறீர்கள். ஆனால் அம்மையார் அவர்கள் தன் இறுதிநாள் வரை மோடியையும், பாஜகவையும் எதிர்த்து துணிவுடன் நின்றார். அதனாலேயே அவர் சிறைப்பட்டார். அவரது உடல்நலனும் சிறையால் சிதைந்தது. அவர் இயற்கை எய்தினார். இதெப்படி ஜெயலலிதா அம்மையாருக்கான அரசியலாக இருக்க முடியும்?
அம்மையார் மறைவிற்கு பின், நீங்கள், ஜெயலலிதா அம்மையாரை பழிதீர்த்த மோடி அரசுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைத்த காரணத்தால் உங்கள் ஆட்சி கடும் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தது. தமிழர் விரோத நடவடிக்கைகளை பாஜகவின் சாகவாசத்தால் செய்த நீங்கள், அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டீர்கள். இதனாலேயே கடுமையான மக்கள் போராட்டங்களை உங்கள் ஆட்சி சந்தித்தது. தமிழர்கள் வெறுக்கும் பாஜகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு எவ்வாறு வெல்லப்போகிறீர்கள்.
தமிழர்கள் இந்தியதேசியக் கட்சிகளை வெறுப்பவர்கள் என்பது தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சூத்திரம். இதை மீறியதாலேயே கடுமையான எதிர்ப்பை நீங்கள் சம்பாதிக்க நேர்ந்தது.
எதிர்கட்சியாக கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் பேசத்தவறிய, அழுத்தம் தரத்தவறிய பொதுகோரிக்கைகள் ஏராளம். அதில் ஒன்றிரண்டை நினைவுபடுத்துகிறேன்.
* மாஞ்சோலை தொழிலாளர் சிக்கலுக்கு தீர்மானம் கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். திமுக அரசு தொடர்ந்து இன்றுவரை மாஞ்சோலை தொழிலாளர்களை வஞ்சிக்கிறது. உங்கள் கட்சி இதுநாள் வரை கேள்வி கேட்கவில்லை.
* அரசு ஒப்பந்த ஊழியர்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற உங்களது ஆட்சிக்காலத்திலிருந்து போராடுகிறார்கள். திமுக நிறைவேற்றுவதாக சொன்னது. ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். உங்களை போல திமுகவும், திமுகவை போல நீங்களும் அமைதி காக்கிறீர்கள்.
*ஆணவப்படுகொலை நடக்கவில்லை என உங்கள் ஆட்சியில் சொன்னீர்கள். திமுகவும் அதை வழிமொழிகிறது. ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தினை இதுவரை நிறைவேற்றவில்லை. நாங்களும் போராடுகிறோம். நீங்களும் கேட்கவில்லை. சாதிவெறியர்களை தண்டிக்க நீங்கள் இருவரும் முன்வரவில்லை.
*ஏழைகள் வீடுகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுகிறார்கள். அனகாபுத்தூரில் அநியாயமாக வீடுகள் இடிக்கப்பட்டன. உங்களிடமிருந்து அறிக்கைகள் கூட வரவில்லை.
மேலும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவது,
உங்களது கூட்டணி கட்சியான பாஜகவின் தலைவர்கள் தமிழ்நாட்டில் மதரீதியான கலவரத்தை கொண்டு வர முயல்வதையும் நீங்கள் கண்டிக்கவில்லை. மதுரையில் அறிஞர் அண்ணாவை இழிவு செய்தார்கள், பெரியாரை இழிவு செய்கிறார்கள். ஆனஅல் பாஜகவை கண்டிக்க உங்களுக்கு மனமில்லை.
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய கல்வித்தொகை, வரிப்பங்கீடு முதலியவற்றை பாஜக-மோடி அரசு தடுத்துள்ளது. நீங்கள் தமிழ்நாட்டின் நலன் கருதி, உங்கள் கூட்டணி கட்சியை கண்டித்து கேள்விகேட்டு பேசியிருக்க வேண்டாமா? பேசவில்லை இதுநாள் வரை.
மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து கொலை செய்கிறது, துன்புறுத்துகிறது. பாஜக அரசின் வெளியுறவுதுறை, பாதுகாப்புத்துறை என்ன செய்கிறதென தமிழர்களுக்கு கேள்விகள் உண்டு. உங்களுக்கு இக்கேள்விகள் எழவில்லையே?
பாஜகவிற்கு எதிராக மட்டுமல்ல, இந்த திமுக ஆட்சியில் பலவேறு கோரிக்கைகளுக்காக போராடி மே17 இயக்கம் வழக்குகள் பலவற்றை பரிசாக பெற்றிருக்கிறது. உங்கள் கட்சியினரை விட அதிகம் போராடி வழக்குகளை பெற்றுள்ளோம். இந்த போராட்டங்கள் எவற்றையும் உங்களது ஊடகம் கூட செய்தியாக வெளியிட்டதில்லை.
இதுபோல கோரிக்கைகள் பல குவிந்து கிடக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இவை எதுவும் உங்களால் பேசப்படவில்லை. ஆதரிக்கப்படவில்லை.
பாஜக கட்சி என்பது, தமிழ்நாட்டின் பொது எதிரி. சங்கிகள் தமிழர்களின் பரம்பரை எதிரி. மதவாதம் மானுட எதிரி.
பாஜகவை விரட்டிவிடாமல் சிவில்சமூக ஆதரவை எவ்வாறு வெல்லப்போகிறீர்கள்?
சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவில்லாமல், நீங்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வரப்போகிறீர்கள்?
ஆளுனர் சட்டசபையில் இருந்து வெளியேறியதற்காக திமுக அரசின் மீது குற்றம் சுமத்தி பட்டியல் வெளியிட்டுள்ளார்.
ஆளுனர் இன்று வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு பட்டியலில் 11ம் குற்றச்சாட்டு என்பது,
'.. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நேரடி, மறைமுக நெருக்கடிகளால் திண்டாடுகின்றன. இந்தியாவின் சிறு-குறு நிறுவனங்களில் 8-10% மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளதென கேலி செய்கிறார். இந்தியாவில் உள்ள 5.5 கோடி சிறுகுறு நிறுவனங்களில் 40 லட்சம் தமிழகத்தில் உள்ளது சிறுவிகிதம் எனில் பிற 25 மாநிலங்கள் எத்தனை விகிதத்தை பங்கு போட்டுக்கொள்கின்றன என கணக்கு போடத்தெரியுமா ஆளுனருக்கு?
சரி, இந்த நிறுவனங்கள் யாரால் நெருக்கடிக்குள்ளாகின்றன?
1. அதிக ஜி.எஸ்.டி வரிகள்.
2. ஜி.எஸ்.டியின் முன்கட்டண நெருக்கடிகள். அதாவது வணிகத்திற்கான பணத்தை பெறுவதற்கு முன்பே அரசுக்கு வரி கட்ட வேண்டும் எனும் கேலிக்கூத்து. இதனால் நிறுவனங்களின் முதலீடுகள் வரிகளாக செலவிடப்பட வேண்டிய நெருக்கடி உருவாகிறது. Operating capital என்பதை முழுமையாக GST சுரண்டி நிறுவனங்களை முடக்குகிறது. Vendorஆக இயங்கும் இந்நிறுவனங்கள் தமது சப்ளைக்கான பணத்தை 60-90 நாட்கள் கழித்தே பெரிய கம்பெனிகளிடமிருந்து பெற முடிகிறது. ஆனால் இந்த Bill/invoice க்கான வரியை, அதாவது பில்லில் 12-18% பணத்தை வரியாக நீங்கள் கட்டவேண்டும். சிறுகுறு நிறுவனங்களில் லாப விகிதம் 3-5% எனும் விகிதத்திலேயே உள்ளது. ஆனால் டில்லி சுல்தான்களுக்கு 12-18% பில்லில் வரியாக கட்ட வேண்டும். அதாவது ஒரு MSME முதலாளி ரூ100 பில் செய்தால், 12-18 ரூபாய் வரியாக 30 நாட்களில் மோடி சர்க்காருக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அவருக்கு குறைந்த பட்சம் 90 நாட்கள் கழித்தே பில் க்ளியர் ஆகும். இந்த 100 ரூபாயில் அவரது லாபம் 3-5 ரூபாயாக இருக்கும். அதை 90 நாட்கள் கழித்து வாங்கும் போது மூலதனத்திற்கான வட்டி எனும் வகையில் லாபத்தில் மேலும் 1 ரூபாயை இழந்திருப்பார். ஆக அவர் ஈட்டுவது ரூ2 -4 எனும் அளவு இருக்கும். ஆனால் 90 நாட்களுக்குள் மூன்று பில்கள் அளவிற்கு பொருட்கள் சப்ளை செய்திருப்பார். ஆக அவரது மூலதனம் 300ரூபாய் பெரிய கம்பெனிக்கு சென்றிருக்கும். இந்த 2 ரூபாய் சம்பாதிக்க மூன்று மாத GST எனும் வகையில் 36-54 ரூபாயை டில்லி சுல்தானுக்கு வரியாக கொடுத்திருப்பார். மொத்தமாக 3 ரூபாய் சம்பாதிக்க 300 ரூபாய் கம்பெனிக்கும், 56 ரூபாய் மோடி அரசுக்கும் அழுது கட்ட வேண்டும். இந்த லட்சணத்தில் அந்த பெரிய கம்பெனி பில்களுக்கான பணத்தை உரிய காலத்தில் கொடுக்க வேண்டுமென நெருக்கடி கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்காது. இன்னும் குறிப்பாக, அந்த பெரு நிறுவனம், பில்லுக்கான கட்டணத்தை தராமல் ஏமாற்றினால் கூட அரசு உதவாது. அந்த கம்பெனி GSTக்கு கணக்கை காட்டிவிட்டு உங்களை ஏமாற்றிச் சென்றால் உங்களது மூலதனம் 300 ரூபாயும், வரி தண்டம் 56 ரூபாயும் பறிபோகும்.
இதைவிட மிக மோசமாக, மூலப்பொருட்களுக்கு பெருஞ்சுமையாக 12-18% வரி கொடுத்து இந்த சிறுகுறு நிறுவனங்கள் வாங்கியே உற்பத்தி செய்தாக வேண்டும்.. இதிலும் மேலதிக இழப்பை இந்நிறுவனங்கள் சந்திக்கின்றன. இவ்வாறு இருபுறமும் capital நிதியை இழப்பதால் சிறுகுறு நிறுவனங்கள் வேகமாக மூடப்படுகின்றன.
சிறுகுறு தொழில்களுக்கு
இந்த நெருக்கடி லட்சணத்தை உருவாக்கியது மோடி அரசு. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டுமா அல்லது ஆளுனரை அடியாளாக அனுப்பிய டில்லி சுல்தான்கள் பொறுப்பேற்க வேண்டுமா?
பாஜக ஆளுனர்கள் செயலை எப்படி அணுக வேண்டியுள்ளது? ஜெயலலிதா அம்மையார் மறைந்த சமயத்தில் அதிமுகவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்து அதிமுகவை உடைக்க ஆளுனர் பாஜகவிற்கு உதவினார். தனக்கான பொம்மை அரசை பாஜக உருவாக்க எல்லவிதமான சனநாயக விரோத செயலை செய்தார் அன்றய ஆளுனர்.
இன்றய ஆளுனர் திமுக அரசின் மசோதாக்களை அங்கீகரிக்காமல் ஆண்டுக்கணக்க்குல் கிடப்பில் போட்டுவிட்டு, குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்.
ஆளுனர் சிக்கல் என்பது திமுக-அதிமுக ஆட்சி சம்பந்தப்பட்டதல்ல. அது தமிழ்நாட்டின் மான உணர்வு தொடர்பானது. நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியை, சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் டில்லி சுல்தான்களின் எதேச்சதிகாரம். பாஜகவின் அகங்காரம்.
தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு ஏமாற்றம் இருக்குமெனில் அதை தமிழர்கள் தேர்தலில் முடிவு செய்வார்கள்.
தமிழர்களின் அரசியலில் குறுக்கிட ஆளுனர்களுக்கு எவ்வித யோக்கியதையும், அதிகாரமும் கிடையாது என்பதை தமிழர்கள் கட்சி கடந்து சிந்திக்க வேண்டும். திமுக அரசு, ஆளுனருக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி, ஆளுனரை அம்பலப்படுத்தாமல், மக்களை அரசியல்படுத்தாமல், அறிக்கை அரசியல், ஊடக அரசியல் செய்ததன் விளைவுகள் மிக மோசமாக தமிழக அரசியலை பாதிக்கின்றன.
தமிழர்கள் 'ஆளுனர்' பதவிகள் மீது கேள்வி எழுப்ப வேண்டிய காலகட்டம் இவை.
150 ஆண்டுக்கு முன்னர் சங்கரமடம் காஞ்சியில் இல்லை. அது கும்பகோணத்தில் இருந்தது. சங்கரமடம் வருவதற்கு முன், அவ்விடத்தில் இராவணக் கோட்டம் அமைந்திருப்பதற்கு வாய்ப்பிருந்திருக்கலாம். சங்கரமடத்தை அகழாய்வு செய்து பார்த்தால் ஆதித்தமிழர்களின் வரலாற்று எச்சங்கள் நிச்சயம் கிடைக்கும்.
இராமன் உண்மையாகவே வாழ்ந்தார் என்று மோடி கூட்டத்தார் சொல்லும் போது, இராவணன் வாழ்ந்ததை அவர்களால் மறுக்க முடியுமா?
சமணம், பெளத்தம், ஆசிவகம், சைவம், வைணவம்
என தத்துவ கோட்பாடுகள் விவாதிக்கப்பட்ட தமிழர்களின் தத்துவ தலைநகராம் காஞ்சியில், வடநாட்டான் ஆதிக்கத்தை எதிர்த்த இராவணனுக்கு கோட்டம் அமைந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே.
ஏன் வேண்டும் காஞ்சியில் இராவணக்கோட்டம் என்பதை விளக்கப்படுத்தும் பொதுக்கூட்டத்திற்கு பெருந்திரளாய் திரண்டு வாரீர்.
காவியத்தலைவன் இராவணனுக்கு கோட்டமெழுப்பும் சேவைப்பணிக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தமிழர் ஒருவர் எனும் வகையில் பங்கெடுப்போம்.
22-ஜனவரி, வியாழக்கிழமை, மாலையில்
சென்னை,
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் (கே.கே.நகர்)
இராவணத் திருவிழாவில் உணர்வெழுச்சி கொண்ட தமிழராய் ஒன்றிணைவோம்.
தமிழ்த்தேசியக் கூட்டணி ஒருங்கிணைக்கும் நிகழ்வில் பங்கெடுக்க
மே பதினேழு இயக்கம் உரிமையுடன் அழைக்கிறது.
வெனிசூலா மீதான தாக்குதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகமோசமான கொள்ளையடித்தலை நமக்கு காட்டியுள்ளது. அதிர்ச்சியடைய வைத்துள்ள இந்நிகழ்வினை புரிந்துகொள்ள கடந்த 25 ஆண்டுகாலமாக வெனிசுவேலாவில் நடந்த அரசியல் மாற்றங்களை அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும். வெனிசூவேலா அதிபர் மடூரோவை கடத்தியதன் பின்னனியில் சாவேஸ், மடூரொ ஆகியோரின் இடதுசாரிய, பொலீவரிய அரசியல் நமக்கு பல தெளிவுகளை கொடுக்கக்கூடியது.
ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க அரசியல் சமூக சிந்தனைகள் நம் சூழலுக்கு பெரிதும் உதவுபவை. மூன்றாம் உலக நாடுகளாக அறியப்படும் காலனியத்தின் கீழாக அடிமைப்பட்ட தேசங்களில் திரண்டெழுந்த அரசியல் போராட்டங்கள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் பெரும்பங்கை வரலாற்றுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
இன்றைய உலகச் சூழலை புரிந்து கொள்ள ஆப்ரிக்க தேசங்கள் எதிர்கொள்ளும் உள்நாட்டு போர்கள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், பண்பாட்டு தாக்குதல்கள் பெரிதும் பயனளிப்பவை. இவ்வகையில் புகழ்பெற்ற கூகிவா தியாங்கோ-வின் படைப்புகள், சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த சமகால அரசியலை நம் வாசிப்பிற்காக எழுதிப் படைத்திருக்கிறார் தோழர் அமரந்தா அவர்கள். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்ச்சூழலுக்கு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையும், புரட்சியாளர்களையும், அரசியல் நிகழ்வுகளையும், இலக்கியங்களையும் மொழிபெயர்த்தும், கட்டுரைகள் வாயிலாகவும் அறியப்படுத்தியவர்.
அவரது இரு நூல்களை 'நிமிர் பதிப்பகம்' வெளியிடுசதில் மகிழ்ச்சி கொள்கிறது.
இன்று மாலை, புத்தக சந்தையின் நிமிர் அரங்கில் இந்த இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. தோழர் 'நிழல்' திருநாவுக்கரசு அவர்களும், தோழர் ராஜசங்கீதன் அவர்களும் நூலை வெளியிடுகிறார்கள். தோழர் அமரந்தா அவர்கள் ஏற்புரை ஏற்கிறார்.
அரங்கு எண்: 597, 598
அவசியம் வாருங்கள். நூலைப் படித்து பயனடையுங்கள்.
இது உண்மையெனில் வரவேற்பிற்குரியது.
கடும் பணி நெருக்கடியில் தள்ளப்படும் கடைநிலை காவல்துறை சார்ந்தவர்கள் மீதான நெருக்கடிகளை தவிர்த்து, பணியாளர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்பட்டால் மட்டுமே காவல்துறை சனநாயகமான துறையாக்கப்படும். தொழிலாளர் உரிமைகளைக் கொண்டு சனநாயகமாக்கப்படாவிடில் மக்களுக்கு எதிரான காவலர்களின் நடவடிக்கைகள் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. ஆள்பற்றாக்குறை, அதிகரிக்கும் பணிச்சுமை ஆகியவற்றால் நெருக்கடியில் உள்ள காவல்துறை, தனது நெருக்கடியிலிருந்து மீள வேண்டும். அதேநேரம் மனித உரிமைகளை மீறும் அதிகாரிகள் மீதான கண்துடைப்பு நடவடிக்கைகள் கூட எடுக்கப்படுவதில்லை. ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, பல்வீர்சிங்கின் துன்புறுத்தல் வன்முறை என பல மனித உரிமை சம்பவங்களில் உயர் அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதை காண்கிறோம். அதேநேரம் கீழ்நிலை காவலர்கள் சாதாரண விதி மீறல்களுக்காக தண்டிக்கப்பட்டு, சுய ஒழுங்கை கடைபிடிப்பதாக பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது.
தூய்மைப் பணியாளர் போராட்டம், செவிலியர் போராட்டங்கள், விவசாயிகள் போராட்டங்களில் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் யார் உத்திரவில் நடந்ததென எவருக்கும் தெரியப்படுத்துவதில்லை. இவை விசாரணைக்குட்படுத்தப்படுவதில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட வன்முறையில் இருந்து ஸ்டெலைட் வரையிலான வன்முறைகள் நீதியின்றி கிடப்பில் போடப்படும்போது, இதுபோன்ற சிறு நிகழ்வுகளுக்கு கடைநிலை ஊழியர்களை தண்டித்து என்ன சொல்ல நினைக்கிறது காவல்துறை? ஆகவே கடைநிலை பணியாளர்களுக்கான நெருக்கடியை கவனத்தில் எடுத்து சீர்திருத்தம் உருவாகட்டும்.
ஆரிய ஆதிக்கத்தினால் வீழ்த்தப்பட்ட இந்திய பூர்வகுடிகளின் அரசியல் அடையாளமாக இராவணன் எழுகிறது. சனாதன அரசியலின் நாயகனாக ராமனை கொண்டாடும் கூட்டத்திற்கு எதிர் நிலை கருத்துருவாக்கத்தின் பாத்திரத்தை சுமப்பவன் இராவணன்.
இந்திய பூர்வகுடிகளான திராவிட மக்களும், அதன் அரசர்களும், ஆட்சியாளர்களும் வஞ்சகமாய் வீழ்த்தப்பட்டதை கொண்டாடும் காவியமாய் இராமயணம் ஒவ்வொரு காலகட்டம், நிலப்பரப்பு, குடிகளுக்கு ஏற்ற வகையில் பலவகையில் கதைகளாக சொல்லப்படுகிறது. இதன் சாராம்சமென்பது ஒடுக்கப்பட்ட பூர்சகுடிகளின் வரலாறை இழிவு செய்வதாக அமைகிறது. இராவணனையும் தமதாக்கிக் கொள்ள முயன்ற படைப்புகளும் சனாதனவாதிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இராமனை கதாநாயகனாக்கி இந்து-வேத மத அரசியலை மையப்படுத்தியதை கண்டித்து எழுந்த விமர்சனத்தால், உள்ளம் வருந்தி, தமிழருக்கு எதிரான வேத-வைதீக இந்துமதத்தினை விமர்சித்து தாமே முன்வந்து சடகோபர் அந்தாதியை கம்பர் படைத்தார் என்பார் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள்.
இராமனை முன்வைத்து இந்தியா முழுமையும் தமது சனாதன அரசியலுக்கு கீழாக கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் கூட்டம் முனையும் இக்காலகட்டத்தில் 'இராவணனை' நாம் எழுப்பியாக வேண்டும். தமிழர்களின் சமய கோட்பாடுகள் மையம் கொண்ட 'காஞ்சி' நகரில் இராவணனுக்கு 'கோட்டம்' எழுப்பி, இம்மண்ணின் பூர்வகுடி அரசியலை உயர்த்திப் பிடிப்போம்.
தமிழரிடத்தில் துரோகக்கூட்டத்தை உருவாக்கி, பிராமண கடப்பாரையை கையில் கொடுத்து தமிழினத்தை பிளவுபடுத்த ஆரிய ஆற்றல்கள் முனையும் காலகட்டத்தில் பிராமண கடப்பாரையையும், அதைச் சுமந்துவரும் அடிமைக் கூட்டத்தையும் விரட்டும் வரலாற்றுப் பணி நமக்கு காத்திருக்கிறது.
ஆகவே இன்றய காலகட்டத்தில் இராவணக் கோட்டத்தின் தேவை என்ன என்பதை விளக்கும் தமிழ்த்தேசியக் கூட்டணி ஒருங்கிணைக்கும் பொதுக்கூட்டத்திற்கு மே17 இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.
பெருந்திரளாய் திரண்டு ஆதரிப்பது தமிழரின் தலையாய கடமை. இது கட்சி அரசியல் அல்ல, இனத்தின் தன்மான அரசியல்.
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் இறுதிநாள் வரை பெரியாரிஸ்டாகவும், திராவிடர் இயக்கவாதியாகவும் இயங்கியவர். சங்கிகள், சீமானிய கும்பல் பெரியாரை இழிவு செய்வதை கண்டித்தவர். இந்த கும்பல்களுக்கு எதிராக 2018ல் திருச்சியில் நடந்த கருஞ்சட்டைப் பேரணியில், மிகுந்த உடல்நலச் சிக்கலுக்கிடையே நெடுந்தூரம் பயணம் செய்து பங்கெடுத்தார் அய்யா தொ.பரமசிவன்.
பெரியாரஸ்டுகளை மேற்கோள் காட்டாமல், போலி-தமிழ்த்தேசியவாதிகளால் தமிழர் அரசியலை பேச இயலாது.
உலகம்போற்றிய ஒப்பற்ற்ற வீரன் பொட்டம்மானை இழிவு செய்த சீமான் மற்றும் அதன் கூட்டத்தின் பிழைப்புவாத அரசியலுக்கு உரிய நேரத்தில், உரிய வகையில் மே17 இயக்கம் முடிவுகட்டும்.
திராவிடத்திற்கு எதிராய் பொய் புனைவுகளை 'விமர்சனம்' எனும் பெயரில் பரப்புரை செய்து, தமது பார்ப்பன வன்மத்தை கொட்டுபவர்களுக்கு எம் தோழர்களின் எதிர்வினை..
திராவிடர் இயக்கத்தை, தந்தை பெரியாரை இழிவு செய்யும் கும்பலை கைகட்டி வேடிக்கை பார்க்க நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் (அல்லது) இருந்த கட்சிகள் அல்ல. நாங்கள் கொள்கையாளர்கள். பெரியார், மேதகுவை தலைவர்களாக ஏற்றவர்கள்.
24மணி நேரத்தில் தொகுக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியிடப்படும் நூல்
' தினமலம்' . தமிழர்களை இழிவு செய்யும் 'தினமலர்' நாளிதழின் கீழ்த்தரமான அரசியலை அம்பலப்படுத்தும் புத்தகத்தை வாங்கி பயனடைவீர்.
அனைவரும் வருகை தந்து, நூல் வெளியீட்டை சிறப்பிக்க உரிமையுடன் கோரிக்கை வைக்கிறோம்.
நாள்: 15-01-2026
இடம்: திசை புத்தக நிலையம், சென்னை.
நேரம்: மாலை 5:00 மணி
அழைக்கிறது
மே பதினேழு இயக்கம்.
'சங்கி' அண்ணாமலையை, ராஜ்தாக்கரே எதிர்ப்பது வரவேற்பிற்குரியதே.
'தமிழ்நாடு தமிழருக்கே' என நாம் சொல்லும்போது 'மராத்தியம் மராத்தியர்களுக்கே' என்பது தவறாகுமா?
'..மும்பை-மராத்தியத்தின் உள்ளாட்சி தேர்தலில், மராத்தியர் அல்லாத வடநாட்டு மாநிலத்தவரை மேயராக நியமனம் செய்வோம்..' என பாஜக மராத்திய துணைத்தலைவர் சொன்னதை ஆதரித்து, அண்ணாமலை பேசினார். இதை கண்டிக்கும் விதமாக சிவசேனையின் ராஜ்தாக்கரே பெருந்திளாக மராத்திய மக்களைத் திரட்டி கண்டனக்கூட்டம் நடத்தி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்து, அண்ணாமலையை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென சொல்வது சீமானின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரை மேயர்களாக நியமிக்க நாம் எப்படி அனுமதிக்க மாட்டோமோ, அதைப்போலவே மராத்தியர்களும் வடநாட்டார்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இதை செய்யுங்கள் என பாஜக தலைவர் சொல்கிறார், அண்ணாமலை அதை ஆதரிக்கிறார், சீமான் அண்ணாமலைக்கு துணையாக மராத்தியர்களை எதிர்க்கிறார்.
கடந்த அதிமுக-பாஜக ஆட்சிக் காலத்தில் கோவை நகரத்திற்கு மார்வாடி பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அதிமுகவிற்கு பாஜக நெருக்கடி கொடுத்தது. கடுமையான எதிர்ப்பு வந்தபின்னர் வாபஸ்பெற்றார்கள். கோவையின் ரங்கேகவுடர் வீதியை மார்வாடி ஜெயின் பெயர் ஒருவரின் பெயரில் மாற்றவேண்டுமென குஜராத்தி-ராஜஸ்தானி சங்கம் கோரிக்கையை முன்னெடுத்தது.
தமிழ்நாட்டின் நகரங்களில், தமிழனை சுரண்டும், வட மாநிலத்தவர்களை மேயராக நியமனம் செய்யவதை தமிழ்தேசியர்கள் அங்கீகரிக்க இயலாது.
ஆனால் அண்ணாமலைக்கு ஆதரவளிப்பதன் வாயிலாக, வடநாட்டான்களை தமிழர்களுக்கு தலைவராக்க சீமானுக்கு வெட்கமிருக்காது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது, சீமானின் அண்ணாமலை ஆதரவு.
மும்பை வாழ் தமிழருக்கு ஆபத்தை உருவாக்கும், 'சங்கி' அண்ணாமலையின் வாய்கொழுப்பினை கண்டிக்காமல், அண்ணாமலையை தமிழனாக ஆதரியுங்கள் என சீமான் வக்காலத்து வாங்குவதென்பது, பாஜக-சங்கியிடம் பிச்சையெடுத்து நாம் தமிழர் கட்சி பிழைப்பு நடத்துவதை அம்பலப்படுத்தியுள்ளது.
சீமான்-அண்ணாமலை கூட்டு என்பது தமிழினத்திற்கு ஆபத்தானது. இந்த இரு நபர்களின் சாதியை வைத்து, இவர்களே 'அக்மார்க்' தமிழர்கள் என கூப்பாடு போடும் போலி-தமிழ்த்தேசியர்களை தமிழர்கள் கண்டுணரவேண்டும். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் இன அடையாளம் என்பது தமது பிழைப்பை நடத்திக்கொள்ளுவதற்கான அடையாளம் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சீமான் அண்ணாமலைக்காக ஒப்பாறி வைப்பதென்பது, நாளை தமிழினத்தை விலை பேசுவதற்காகவே!
@RajThackeray
தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்.
ஆரிய குப்பைகளும், சனாதன சகதிகளுமற்ற உழைப்பை கொண்டாடும் உழவர் திருநாள் இது. ஒப்பில்லா இயற்கைக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் நன்னாள் இது.
ஒப்புரவோடு உலக மாந்தர்களைக் கொண்டாடும் மகத்தான நாள் இது. தமிழர் வாழ்க்கையில், தமிழர் நம்பிக்கையில் ஆரிய-இந்துமத சடங்குகள் இல்லை என்பதை ஓங்கிச் சொல்லும் முழக்க நாள் இது.
பொங்கட்டும் அறமும், வளமும்.
சிறக்கட்டும் தாய்த்தமிழ் திருநாடு.
வளரட்டும் தன்னிகரில்லா தமிழ் மொழி.
தரணியெங்கும் புகழையும், வெற்றியையும் ஈட்டட்டும் தமிழர்கள்.
மலரட்டும் தனித்துவமான சுதந்திர தமிழீழ தாயகம்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.
வளங்கள் பெருகட்டும்.
ஒற்றுமை ஓங்கட்டும்.
ஆரிய சனாதன சாக்கடைகள் மண்மூடி மக்கட்டும்.
இந்துத்துவ மதவெறி ஆற்றல்கள் மூழ்கட்டும்.
சங்கிகளுக்கு துணை செய்ய்ய்ம் துரோகக்கூட்டம் ஒழியட்டும்.
வெல்லட்டும் சமத்துவம்.
வெல்லட்டும் சனநாயகம்.
வெல்லட்டும் சுயமரியாதை.
வாழ்க தமிழ்.
வாழ்க தமிழ்நாடு.
வாழ்க தமிழர்.
பொங்கலோ பொங்கல்!!
மே பதினேழு இயக்கம்.
@may17iyakkam
14-01-2026
An important issue. Adani's loot happens to almost all states in India. Every state need to map similar to this to understand the Adani's influence in their state. This is nothing but privatising a state population wealth to a single owner. This will result in loss of earning, loss of livelihood, loss of nature, erosion of public funds and many more. This will lead to loss of state autonomy too. Its nothing but colonising states by a Gujarathi business houses. None of us (Tamils, Maharashtrians, Malayalis, Kannadigas, Telugus, Bengalis, Punjabis, Assamese, Odiya.. Etc.. ) could flourish except Gujarathis.. Thanks for sharing it in public space.
தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களோடு
நிமிர் பதிப்பக அரங்கு-597,598,
திசை புத்தகநிலைய அரங்கு - 407
இந்த அரங்குகளில் வாய்ப்புள்ள தோழர்களுடன் ஒவ்வொரு நாளும் மாலையில் புத்தக சந்தையில் சந்திக்க காத்திருப்பேன். சந்திப்போம், உரையாடுவோம்.