அமைச்சர் நிர்மல் குமாரது அவதூறு பேச்சிற்கு கழக சட்டத்துறை செயலாளர் திரு. என்.ஆர். இளங்கோ அவர்கள் பதிலடி.
ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை கைவிடவில்லை, மேல்விசாரணை தொடரும் என்றுதான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது
இடைத்தேர்தலில் மக்களின் கவனத்தை திசை திருப்ப தவறான தகவலை பரப்பும் நிர்மல் குமார் குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் வகையில் பேசுகிறார் நிர்மல் குமார்
தவெக ஆட்சியில் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு பாலியல் வன்கொடுமைகள்
இன்று சட்ட அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்கள், ஜெம் கிரானைட் வீரமணி அவர்களுடைய போக்சோ வழக்கைப் பற்றி, தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காகவும், வரக்கூடிய இடைத்தேர்தல்களில் அரசியல் லாபம் தேடுவதற்காகவும் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பியதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறையின் சார்பில் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்.
தொடர்ச்சியாக, திரு. நிர்மல் குமார் அவர்கள் தான் சட்ட அமைச்சர் என்பதை மறந்து, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டிய பணியை மறந்து, மக்களுக்கு உண்மை நிலவரத்தை மட்டுமே தர வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை மறந்து, அரசியல் லாபங்களுக்காகவும், இடைத்தேர்தலில் எப்படியாவது மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவும் இதுபோன்ற பேட்டிகளைத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
குறிப்பாகச் சொல்லப்போனால், கழகத் தலைவர் அவர்களைப் பற்றி, அவர் மிசாவில் அனுபவித்த கொடுமைகள் குறித்து மிகவும் அவதூறான தகவல்களைப் பதிவு செய்தார். அதற்காக மாநிலங்களவை உறுப்பினர் திரு. திருச்சி சிவா அவர்கள் ஏற்கனவே காவல்துறைத் தலைவரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
இன்றைக்கு ஜெம் கிரானைட் வீரமணி அவர்கள் மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கை குறித்து, அது ஏதோ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்ததாக ஒரு கருத்தைப் பரப்பியிருக்கிறார். அது முற்றிலும் தவறான கருத்தாகும்.
ஏனென்று சொன்னால், 7.10.2025-ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனையிடப்பட்டு, கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல்விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால், நீதிமன்றத்தில் இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாங்கள் கைவிடவில்லை. உரிய ஆதாரங்களைத் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல்விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டு, போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அதுவும் கூட, அப்போது இருந்த டைரக்டர் ஆஃப் பப்ளிக் பிராசிகியூஷன், அடிஷனல் டைரக்டர் ஆஃப் பப்ளிக் பிராசிகியூஷன் ஆகியோருடைய கருத்துருவின் அடிப்படையில் அது தாக்கல் செய்யப்பட்டது. எனவே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்த வழக்கின் புலன் விசாரணை கைவிடப்படவில்லை. மேல்விசாரணை தொடரும் என்றுதான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதை மறைத்து, அவதூறான கருத்துகளை சட்ட அமைச்சர் பரப்பி வருகிறார். குறிப்பாகச் சொல்லப்போனால், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிலைப்பாடு என்னவென்றால், குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், குறிப்பாக பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதே, திரு. நிர்மல் குமார் அவர்கள் எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றிவிடலாமா என்ற எண்ணத்தோடு பேசுவதாகத்தான் தெரிகிறது. ஏனென்று சொன்னால், இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாகச் சொன்னால், பாதிக்கப்பட்ட அந்த நபர்கள், இந்த வழக்கில் ஏதோ மிகப்பெரிய பிரச்சனை இருப்பது போல் இருக்கிறது என்று கருதி, அவர்கள் சாட்சியம் அளிக்காமல் அதிலிருந்து விலகிச் செல்வதற்காகவே, திரு. நிர்மல் குமார் அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுவதாக நாங்கள் நம்புகிறோம்.
அதுமட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒரு நாளைக்கு இரண்டு பாலியல் குற்றங்களாவது புகார்களாக அளிக்கப்பட்டு வருகின்றன.
சொல்லப்போனால், என் கையில் இருக்கும் பட்டியலில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நடந்திருக்கக்கூடிய பாலியல் குற்றங்களைப் பற்றி சொன்னால், அதற்கு ஒரு நாள் கூடப் போதாது.
ஆட்சிக்கு வந்த 150 நாட்களில் இதுவரை 219 பாலியல் குற்றங்கள் அரங்கேறியிருக்கின்றன. வேறு யாரோ அல்ல; தமிழக வெற்றிக் கழகத்தினுடைய பொறுப்பாளர்கள் அவர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சொல்லப்போனால், ஒரே ஒரு நாளில் மட்டும், 15-ஆம் தேதி ஜூன் 2026-ல் மட்டும், ஏறக்குறைய ஐந்து இடங்களில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சட்டம்-ஒழுங்கைப் பற்றி கவலைப்படாமல், அரசியல் லாபத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் மட்டுமே சட்ட அமைச்சர் இதுபோன்ற பேட்டிகளை அளித்து வருகிறார். சட்ட அமைச்சர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து கொண்டு பேச வேண்டும்.
போக்சோ போன்ற சிறப்பு வழக்குகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை. அவற்றில் இந்தக் குற்றங்கள் பற்றி பொதுவெளியில் பேசி, அந்தக் குற்றங்களை நீர்த்துப்போகச் செய்வது என்பது சட்டம்-ஒழுங்குக்கு நல்லதல்ல. இதுபோன்று திசைதிருப்பும் வேலைகள் அந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யும். அது கூடத் தெரியாமல் இருக்கிறார் ஒரு சட்ட அமைச்சர்.
மேலும், சட்ட அமைச்சர் தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார். அவதூறு செய்தால், அவதூறு பரப்பினால், அவரும் அவதூறு செய்த குற்றத்திற்கு உட்பட்டவர்தான். அதற்கான உரிய நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடரும்.
நான் இதுவரை சொன்னதில், குறைந்தபட்சம் மூன்று சிறுமிகளாவது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக வெற்றிக் கழக அரசு, இல்லாத கூற்றுகளைச் சொல்லி வழக்கை நீர்த்துப்போகச் செய்வது உண்மையிலேயே கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்பதால் கவலைக்குரியது.
இந்தப் போக்கை தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிற அனைவரும் கைவிட வேண்டும் என்பதை நாங்கள் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.
இப்படியே மீறிச் சென்றால், வெறுமனே அவதூறு வழக்கு மட்டுமல்லாமல், போக்சோ வழக்கைத் திசைதிருப்பியதற்காகவும், குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்கு ஒரு வழியாக இருந்ததற்காகவும், அதற்குக் காரணமாக இருந்ததற்காகவும், உரிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வழக்கு விவகாரத்தில் அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருந்தால், அது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும். அவர்களிடம் உரிய ஆதாரங்கள் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொடர்பு இருக்கிறது என்பதை அவர் ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கவில்லை என்றால், அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது உரிய வழக்கைத் தொடருவோம்.
கேள்வி: முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் சந்தித்தது குறித்து...
பதில்: நீங்கள் அரசு ஆவணங்களில் பார்த்தால், கொரோனா காலகட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தொழில் புரிவோரும், தொழில் முனைவோரும், சாதாரண மக்களும் பணம் வழங்கினார்கள். அதுபோன்று, ஒரு நாள் கொரோனா நிவாரண நிதியாக திரு. வீரமணி அவர்கள் பணம் கொடுத்திருக்கிறார் என்பதை அறிகிறோம். அதைத் தவிர்த்து, வேறு எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் எங்கள் கழகத் தலைவரைச் சந்திக்கவில்லை என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.
இதுபோன்ற மோசமான குற்றங்களை கடுமையாக விசாரிப்பதை வரவேற்கிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைத் திசைதிருப்பும் விதமாகப் பேட்டிகள் அளிப்பதைத்தான், பொறுப்புள்ள அமைச்சர்களே பேசுவதைத்தான் கண்டிக்கிறோம். அது கண்டனத்திற்குரியது; தண்டனைக்குரியது.
#WATCH | தாராபுரம் இடைத்தேர்தலை ஒட்டி, திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக பிரச்சாரம்.
அப்போது பெட்டி பாமா’ என தவெக வேட்பளார் சத்தியபாமாவை விமர்சித்து சூட்கேஸ் பெட்டியை காட்டி திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன் விமர்சனம்
#SunNews | #Dharapuram | #DMK | #TVKVijay
Watch | "ஒரு சின்ன Setback-தான் இது.. மீண்டும் Bounce back ஆகி Come back கொடுப்போம் "
- மதுராந்தகத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #DMK | #UdhayanidhiStalin
50 வருட உழைப்பிற்கு பிறகு அவர் தலைமை பொறுப்பை அடையுரார்
எவரயும் குறை சொல்லவில்லை
கொரோனா பெருந்தொற்று , மாநில வளர்ச்சி படு குழி
மொத்தமும் சரி செஞ்சு
திராவிட இனத்தின் தன்மானத்தை இந்தியா முழுவதும் பேச செய்தவர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்❤️🔥📈
நான் ஒரு ஒடுக்கபட்ட சமூகத்தில் இருந்து வந்தவன்
என் இனத்திற்காக வாழ்நாளும் முழுவதும் துனை நின்ற திமு கழகம் என் குடும்பம் 🖤❤
திமுக ஒடுக்கபட்ட மக்களுக்காக நிற்கவில்லை என பொய்யாக குற்றம்சாட்டுங்கள் என்று சொல்ல சொன்னார்கள் என் மனம் ஏற்கவில்லை பதவியை ராஜினாமா செய்தேன்
- செல்வ பெருந்தகை
ஆதவ் : 5000ரூ கொடுத்து ஓட்டை வாங்கிட்டு போயிரணும்
பரந்தாமன் : கோடிக்கணக்கில் பணம் கொடுத்து MLA வை விலைக்கு வாங்கிய நீ பேசலாமா.?
என்னா அடி😂😂
@iparanthamen 👌👌
#WATCH | ஆதவ் அர்ஜூனாவிற்கு அருகதையில்லை
"மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆதவ் அர்ஜுனா, தான் பேசிய 44 நிமிடத்தில் 4 நிமிடம் கூட தவெக கட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க வக்கில்லை. 44 நிமிடமும் திமுக-வைப் பற்றி மட்டுமே ஒப்பாரி வைத்தார்.
Empty vessels make much noise என்பதற்கு ஏற்ப, காலிப் பாத்திரம் போல மதுராந்தகத்தில் டப டபவெனச் சத்தம் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்.'ஆளும் வளரணும், அறிவும் வளரணும்; அதுதான் வளர்ச்சி' என்பார்கள். ஆனால், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆளு மட்டும்தான் வளர்ந்திருக்கு, அறிவு வளரல!"
- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பேட்டி!
#DMK | #Byelection | #Maduranthakam | #Paranthaman | #KalaignarSeithigal
தாராபுரத்தில் அதிமுகவிலிருந்து பதவிக்காக விலகி தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த வேட்பாளர் சத்தியபாமாவை பல ஊர்களில் பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்
துரோகி துரோகி என முழக்கமிட்டு ஊருக்குள் வரவிடாமல் விரட்டி அடிக்கிறார்கள்
இவையெல்லாம் இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சத்தியபாமாவே கூட வெற்றியும் பெறலாம்
ஆனால் பதவிக்காக மாறுபவர்களை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது இந்த அரசியல்வாதிகளுக்கு அது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு ஓரளவாவது புரியும்
#BREAKING | “கவர்ச்சியால் சரிக்கட்டலாமென்று ஆணவத்தோடு இருக்கக் கூடிய ஒருத்தர்தான் முதலமைச்சரா இருக்கிறார்..” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #TVKVijay | #MKStalin