முன்னாள் முதல்வர் மாண்புமிகு திரு. கருணாநிதி அவர்களின் மூத்த மகனும், தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் மூத்த சகோதரருமான திரு. மு.க. முத்து அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு. மு.க. முத்து அவர்களின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி!
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் இருந்து இறக்கி சமூகவிரோதிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11-ம் வகுப்பு மாணவன் தேவேந்திர ராஜா-வை 12-03-2025 இன்று நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.
பின்னர் மாணவனின் தந்தைக்கு ஆறுதல் கூறியதோடு திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை சந்தித்து மாணவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விசாரித்ததுடன் தொடர்ந்து மாணவனுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினேன்.
உலக மகளிர் தின வாழ்த்துகள்!
தமிழகத்தில் பல்வேறு கசப்பான சம்பவங்கள் அரங்கேறிருந்தாலும் ; பெண்கள் வாழ்க்கையில் விடா முயற்ச்சியுடன் வீறு நடைபோட்டு எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ உலக மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!
#WomenDay2025
மோடி மாதிரி ஒரு பிரதமரை சரித்திரத்தில் நான் பார்க்கல l தமிழகத்தில் பாஜக - வை வளர்த்தது அண்ணாமலை l நிகழ்கால அரசியலில் ஆக சிறந்தவர் பாரத பிரதமர் மோடி ஜி.!
#NarendraModi#Annamalai#BJP4IND#TMMK
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நிகழ்கால தரவான வரலாற்று சிறப்புமிக்க கி.பி 1528 பழனி செப்புபட்டயத்தின்படி அருள்மிகு பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் "தேவேந்திரகுல வேளாளர்" சமூகத்திற்கு பாத்தியப்பட்ட 28 - ஆம் ஆண்டு தைப்பூசம் முதல் மரியாதை & மண்டகப்படி திருவிழா 06.02.2025 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
#28_ம்_ஆண்டு #வெள்ளி_விழா #பழனி #பரிவட்ட_முதல்_மரியாதை #JOHNPANDIAN #viyangopandian #தேவேந்திரகுல_வேளாளர் #TMMKParty #palanimurugantemple #palani #palanimurugan #palaniparivattam #tmmkitwing #tamilagamakkalmunnetrakazhagam
"தேவேந்திரகுல வேளாளர்களின்" - பட்டியல் வெளியேற்றம் கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்; நானும் முழுமையாக அறிவேன் நிச்சயமாக உங்கள் கோரிக்கை நிறைவேற உதவி செய்வோம்!
- மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு R.N ரவி அவர்கள்!
அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து இன்று ( வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ( பாட்டாளி மக்கள் கட்சி) பசுமை தாயகத்தின் தலைவர் திருமதி.சௌமியா அன்புமணி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பெண்களுக்கு எதிராக குற்றம் செய்யும் குற்றவாளிகளை கைது செய்யாமல்; அதற்க்கு நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்.!
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை "இரும்பு கரம்" கொண்டு "தமிழக அரசு" தடுத்திடவேண்டுமென வலியுறுத்துகிறேன்.
#AnnaUniversityIssue #AmINext #students #sexualharassment #sexualassault #harassment #AnnaUniversity #PMK #TNPolice #sowmiyaanbumani
சட்ட விரோத மதுக்கடைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் :-
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சட்டவிரோதமாக தனியார் மதுக்கடை ஒன்றில் காலையில் இருந்தே மது விற்பனை நடைபெறுவதை ஊடக நண்பர்கள் வெட்ட வெளிச்சமாக காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது ...
தமிழகத்தில் அன்றாடம் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் இதுபோன்று சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை ஆளும் திமுக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது .
தமிழக முதல்வர் அவர்கள் விளம்பரங்களில் மட்டும் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என கூறி கொண்டிருக்கிறார் . இது போன்று விற்பனை நடைபெற்றால் எப்போது மது இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும் .
இது போன்று பல்வேறு மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது . இதனை காவல் துறை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது . இதனால் இளைஞர்கள் , பல்வேறு குடும்பங்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது ..
இதனை தமிழக முதல்வர் அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
#dindukal #palani @mkstalin@Udhaystalin@V_Senthilbalaji@CMOTamilnadu @IPeriyasamymla
#UdhayanidhiStalin #tnnews #dindugal #Palani #Tasmac
இனிய #புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
வரும் 2025 -ம் ஆண்டு நம் அனைவருக்கும் புதிய ஆண்டாக அமைந்திட, அனைத்து மக்களின் எண்ணங்களும், ஏக்கங்களும், இன்பமும் - மகிழ்ச்சியும் இந்த புதிய ஆண்டில் நிரந்தரமாக நிலைத்திட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது #புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#happynewyear2025 #HappyNewYear2025Wishes #புத்தாண்டு #HappyNewYear #happy2025 #TMMK #wishes #JOHNPANDIAN
டிசம்பர் - 28, 2024 தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன், கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரை வணங்குகிறேன்.
தன்னலம் கருதாமல் பலருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டு தமிழக மக்கள் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவை போற்றுவோம்.
#Thedayofpurestsoul
#புண்ணிய_ஆத்மாவின்_தினம்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன், கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன்.
#Vijayakanth #CaptainVijayakanth #VijayakanthGuruPoojai #CaptainGuruPoojai #VijayakanthMemorialDay #DMDK #கேப்டன் #விஜயகாந்த் #கேப்டன்விஜயகாந்த் #VijayakanthAnniversary #PremalathaVijayakanth #johnpandian
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்ட ஒழுங்கு பிரச்னை என்பது தற்போதய ஆட்சியில் நிலவுகிறது.
பெண்கள் கல்லூரிகள் , பள்ளிகள் , அலுவலகங்கள் என பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் , குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
என்றும் மக்கள் பணியில் ,
தமிழின வேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
#AnnaUniversity